விஐ புதிய பிளான்., ரூ.98 முதல் மூன்று ப்ரீபெய்ட் திட்டம்- 31 நாட்கள் வேலிடிட்டி., தினசரி 2 ஜிபி டேட்டா!

|

வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டங்கள் ஆனது ரூ.98, ரூ.195 மற்றும் ரூ.319 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டங்களின் விவரங்கள் முழுமையாகவும் விரிவாகவும் பார்க்கலாம்.

31 நாட்கள் வரை வேலிடிட்டி

31 நாட்கள் வரை வேலிடிட்டி

வோடபோன் ஐடியா இந்தியாவில் 31 நாட்கள் வரை செல்லுபடியாகும் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டங்களை ரூ.98, ரூ.195 மற்றும் ரூ.319 என்ற விலையில் அறிமுகம் செய்திருக்கிறது. விஐ அறிமுகம் செய்துள்ள ரூ.98 ப்ரீபெய்ட் திட்டமானது 15 நாட்களுக்கு செல்லுபடியாகும், அதேபோல் ரூ.195 மற்றும் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டமானது மொத்தம் 31 நாட்கள் செல்லுபடியாகும். ரூ.319 திட்டத்தில் Binge All Night நன்மைகள் கூடுதலாக வழங்கப்படுகின்றன.

ரூ.98, ரூ.195 மற்றும் ரூ.319 விலையில் மூன்று திட்டங்கள்

ரூ.98, ரூ.195 மற்றும் ரூ.319 விலையில் மூன்று திட்டங்கள்

வோடபோன் ஐடியா இந்திய சந்தையில் ரூ.98, ரூ.195 மற்றும் ரூ.319 திட்டங்கள் உட்பட மூன்று புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மூன்று திட்டங்களில் மலிவான திட்டமாக ரூ.98 திட்டம் இருக்கிறது. இது 15 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. அதேபோல் ரூ.195 மற்றும் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டமானது 31 நாட்கள் செல்லுபடியாகும். இந்த மூன்று திட்டங்களில் மிகவும் விலை உயர்ந்த திட்டமாக ரூ.319 திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தில் Binge All Night நன்மைகள் வழங்கப்படுகிறது. இந்த அம்சம் பயனர்களுக்கு விலக்கு இன்றி 12AM முதல் 6AM வரை டேட்டா உலாவுதல், ஸ்ட்ரீமிங் நன்மைகள் உள்ளிட்ட பல நன்மைகளை பயனர்களுக்கு வழங்குகிறது. விஐ வழங்கும் புதிய ரூ.98 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமானது 200 எம்பி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் உட்பட பல நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டம் 15 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் பிற எஸ்எம்எஸ் நன்மைகள் மற்றும் ஓடிடி சந்தாக்களை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினசரி 2 ஜிபி டேட்டா தரவு

தினசரி 2 ஜிபி டேட்டா தரவு

புதிய விஐ ரூ.195 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகள், 300 எஸ்எம்எஸ்கள் என மொத்தம் 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. புதிய ரூ.319 விஐ திட்டமானது தினசரி 2 ஜிபி டேட்டா தரவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. அதேபோல் ரூ.195 மற்றும் ரூ.319 ஆகிய இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களும் 31 நாட்கள் செல்லுபடியாகும் நன்மைகளை வழங்குகிறது. இந்த விஐ ரீசார்ஜ் திட்டங்களை தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்கள் விஐ மூவிஸ் மற்றும் டிவி பயன்பாட்டு அணுகலை பெறுவார்கள்.

வரம்பற்ற டேட்டா நன்மைகள்

வரம்பற்ற டேட்டா நன்மைகள்

அதேபோல் விஐ வழங்கும் புதிய ரூ.319 ரீசார்ஜ் திட்டமானது Binge All Night நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டமானது பயனர்களுக்கு 12AM முதல் 6AM வரை திட்டத்தில் இருந்து எந்த குறையும் இல்லாமல் வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது. வார இறுதி நன்மைகளும் இந்த டேட்டாவில் வழங்கப்படுகிறது. அதாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரம் முழுவதும் பயன்படுத்தாத டேட்டாவை மொத்தமாக பயன்படுத்த அனுமதிக்கிறது. அதேபோல் ரூ.319 திட்டமானது ஒவ்வொரு மாதத்திற்கும் 2ஜிபி கூடுதல் பேக்கஅப் டேட்டாவை கூடுதல் கட்டணமின்றி வழங்குகிறது.

30 நாட்கள் மற்றும் 31 நாட்கள் வேலிடிட்டி

30 நாட்கள் மற்றும் 31 நாட்கள் வேலிடிட்டி

அதேபோல் வோடபோன் ஐடியா கடந்த மாதம் ரூ.327 மற்றும் ரூ.337 திட்டங்களை முறையே 30 நாட்கள் மற்றும் 31 நாட்கள் வேலிடிட்டியுடன் அறிமுகப்படுத்தியது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு திட்டத்தையாவது 30 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் வழங்க வேண்டும் என தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து விஐ உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 30 நாட்கள் வேலிடிட்டி நன்மைகளை வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Vodafone Idea VI Launched Three New Prepaid Plans: Rs.98, Rs.195 and Rs.319 Recharge Plans Up to 31 Days validity

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X