கழட்டி விட்டவர்களை கண்ணீர் விட வைத்த Vodafone Idea! குஷியில் உச்சியில் விஐ யூஸர்கள்..

|

Vodafone Idea (Vi) புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்களில் வரம்பற்ற அழைப்பு, தினசரி 2ஜிபி டேட்டா உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது. விஐ இல் இருந்து வேறு நெட்வொர்க்கிற்கு மாறிய பயனர்கள் வருத்தப்படும் அளவிற்கு இந்த ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விஐ புதிய ரீசார்ஜ் திட்டங்கள்

விஐ புதிய ரீசார்ஜ் திட்டங்கள்

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்தியாவில் போட்டிப்போட்டு வளர்ந்து வருகின்றன. பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் சமீபத்தில் அறிமுகமான ஜியோ மலிவு விலையில் அதிக சலுகையுடன் ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து அசுர வளர்ச்சியில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் ஏர்டெல் இருக்கிறது. இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் கடுமையான போட்டி இருக்கிறது. மூன்றாவது இடத்தில் தொய்வு நிலையில் தொடர்ந்து வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது வோடபோன் ஐடியா. இதை சரிசெய்யும் வகையில் விஐ புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்திருக்கிறது.

Vodafone Idea (Vi)

Vodafone Idea (Vi)

Vodafone Idea (Vi) புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, வரம்பற்ற நன்மைகள் உடன் இந்த திட்டங்களின் விலை ஆனது ரூ.2,999 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இது வருடாந்திர ரீசார்ஜ் திட்டமாகும். இந்த திட்டத்தில் கிடைக்கும் டேட்டா உள்ளிட்ட பிற நன்மைகளின் விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ.2999

ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ.2999

ஜியோ மற்றும் ஏர்டெல் இடையே நடந்து வரும் 5ஜி பந்தயத்துக்கு நடுவில் பரிதாப நிலையில் இருந்து வந்த விஐ தங்களது வாடிக்கையாளர்களை பூர்த்தி செய்யும் வகையில் இந்த வருடாந்திர ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. வருடத்திற்கு ஒரு முறை மட்டும் ரீசார்ஜ் செய்தால் போதும் அதிக நன்மைகளை பெறலாம். விஐ நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பல போஸ்ட்பெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்தது. தற்போது புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இதன் விலையானது ரூ.2999 ஆகும்.

365 நாட்கள் வேலிடிட்டி

365 நாட்கள் வேலிடிட்டி

TelecomTalk இன் அறிக்கையின்படி, இந்த புதிய வருடாந்திர திட்டமானது ரூ.2999 விலையில் 850 ஜிபி மொத்த டேட்டா, வரம்பற்ற அழைப்பு என பல நன்மைகளை தொகுத்து வழங்குகிறது. இந்த திட்டமானது 365 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

865 ஜிபி மொத்த டேட்டா

865 ஜிபி மொத்த டேட்டா

வோடபோன் ஐடியா ரூ.2,999 திட்டமானது அன்லிமிடெட் ப்ரீபெய்ட் சலுகையை வழங்குகிறது. இந்த திட்டமானது 865 ஜிபி மொத்த டேட்டா, உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புக்கான வரம்பற்ற குரல் அழைப்புகள் என பல சலுகைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது 365 நாட்கள் செல்லுபடியாகும். இதில் மொத்தமாக 850 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. டேட்டா வரம்பு முடிந்த பிறகு 1 எம்பிக்கு 50 பைசா வசூலிக்கப்படும்.

டேட்டா ரோல்ஓவர் சலுகை

டேட்டா ரோல்ஓவர் சலுகை

ரூ.2,999 திட்டத்தின் கூடுதல் நன்மைகளாக இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை வரம்பற்ற டேட்டா மற்றும் Vi திரைப்படங்கள், டிவிக்கான அணுகல் ஆகியவை அடங்கும். வார இறுதி நாட்களில் டேட்டா ரோல்ஓவர் சலுகையும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் Vi Hero பலன்களை Vi நீக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. விஐ வழங்கும் வருடாந்திர திட்டமாக ரூ.2899 மற்றும் ரூ.3099 அன்லிமிடெட் திட்டத்தையும் தேர்வு செய்யலாம்.

Vi ரூ.2899 ப்ரீபெய்ட் திட்டம்

Vi ரூ.2899 ப்ரீபெய்ட் திட்டம்

Vi வழங்கும் ரூ.2899 ப்ரீபெய்ட் திட்டமானது வரம்பற்ற அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் 1.5 ஜிபி தினசரி டேட்டா என பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 547.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது 365 நாட்களுக்கு செல்லுபடியாகும். கூடுதல் நன்மைகளாக இரவு முழுவதும் வரம்பற்ற பலன்கள், வார இறுதி டேட்டா ரோல் ஓவர், டேட்டா டிலைட்ஸ் மற்றும் விஐ திரைப்படங்கள் டிவிக்கான அணுகல் என அனைத்தும் கிடைக்கிறது.

Vi ரூ.3099 ப்ரீபெய்ட் திட்டம்

Vi ரூ.3099 ப்ரீபெய்ட் திட்டம்

Vi ரூ.3099 ப்ரீபெய்ட் திட்டமானது வரம்பற்ற குரலழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் 2 ஜிபி தினசரி டேட்டா என பல நன்மைகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது 365 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தை கொண்டிருக்கிறது. பிங்க் ஆல் நைட் பலன்கள், வார இறுதி டேட்டா ரோல்ஓவர், டேட்டா டிலைட்ஸ் மற்றும் Vi திரைப்படங்களுக்கான அணுகல் என பல நன்மைகள் வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vodafone idea Vi Launched New Prepaid Plan With Annual Unlimited Benefits: Price Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X