கடைசி நேரத்தில் களமிறங்கிய Vi.. தீபாவளி பரிசாக 75 ஜிபி டேட்டா இலவசம்! உடனே இதை செய்யுங்க!

|

சில்லறை விற்பனையாளர்கள் முதல் ஆன்லைன் விற்பனை தளங்கள் வரை அனைவரும் தீபாவளி பரிசுகளை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்து வருகின்றன. அதேபோல் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பரிசுகளை அறிவித்துள்ளது. அதன்படி இதுநாள் வரை சைலண்டாக இருந்த விஐ, தற்போது பயனர்களுக்கு பரிசுகளை அறிவித்திருக்கிறது.

சைலண்டாக இருந்த வோடபோன் ஐடியா

சைலண்டாக இருந்த வோடபோன் ஐடியா

இந்தியாவில் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமாக இருக்கும் ஜியோ, டபுள் பெஸ்டிவல் போனான்ஸா (Double Festival Bonanza) என்கிற பெயரின் கீழ் கேஷ்பேக் சலுகையை தீபாவளி பரிசாக அறிவித்தது. நாட்டின் மூன்றாவது தொலைத் தொடர்பு நிறுவனமாக இருக்கும் வோடபோன் ஐடியா (விஐ) இதுநாள் வரை சைலண்டாக இருந்து கடைசி நேரத்தில் தீபாவளி ஆஃபரை அறிவித்திருக்கிறது.

திட்டங்களில் கூடுதல் பலன்கள்

திட்டங்களில் கூடுதல் பலன்கள்

வோடபோன் ஐடியா (Vi) விழாக்களை கொண்டாடும் வகையில் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் பலன்களை அறிவித்துள்ளது. விஐ நிறுவனம் ரூ.1,449, ரூ.2,899 மற்றும் ரூ.3,099 என்ற மூன்று திட்டங்களில் கூடுதல் பலன்களை அறிவித்திருக்கிறது. இந்த அனைத்து திட்டங்களிலும் கூடுதல் மொபைல் டேட்டா மற்றும் இலவச தேசிய அழைப்புகள் வழங்கப்படுகிறது.

கூடுதல் டேட்டா மற்றும் சலுகைகள்

கூடுதல் டேட்டா மற்றும் சலுகைகள்

வோடபோன் ஐடியா (Vi) தங்களது வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி சலுகைகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த சலுகையானது அக்டோபர் 31, 2022 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்யும் போது கூடுதல் டேட்டா மற்றும் சலுகைகளை பயனர்கள் பெற முடியும். எந்தெந்த ரீசார்ஜ் திட்டம் என்னென்ன சலுகைகள் என்ற விவரத்தை பார்க்கலாம்.

ரூ.1,449 திட்டம்

ரூ.1,449 திட்டம்

Vi நிறுவனம் 180 நாட்கள் செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டத்தை தனது ப்ரீபெய்ட் பிளான் பட்டியலில் வழங்குகிறது. இந்த திட்டமானது பயனர்களுக்கு தினசரி 100 இலவச எஸ்எம்எஸ்கள், வரம்பற்ற குரலழைப்புகள் என பல நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தில் பயனர்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் நிறுவனம் பயனர்களுக்கு கூடுதலாக 50 ஜிபி டேட்டாவை சலுகையாக வழங்குகிறது.

ரூ.2,899 திட்டம்

ரூ.2,899 திட்டம்

இந்த விஐ திட்டமானது முழுமையாக 1 வருடத்திற்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் பயனர்களுக்கு தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தீபாவளி சலுகையாக 12 மாதங்களுக்கு முழுமையாக டிஸ்னி+ ஹார்ட்ஸ்டார் இலவச சந்தா வழங்கப்படுகிறது. அதேபோல் பயனர்களுக்கு கூடுதலாக 75 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது தினசரி 100 இலவச எஸ்எம்எஸ், நாடு முழுவதும் இலவச வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை என பல சலுகைகள் வழங்கப்படுகிறது.

ரூ.3,099 திட்டம்

ரூ.3,099 திட்டம்

இந்த திட்டமானது 365 நாட்களுக்கு செல்லுபடியாகும். இது முழுமையான வருடாந்திர திட்டமாகும். இந்த திட்டத்தை தேர்ந்தெடுக்கும் பயனர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டத்தில் தீபாவளி சலுகையின் ஒரு பகுதியாக 75 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கான இலவச சந்தா அணுகல் 12 மாதத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் 365 நாட்களுக்கு தினசரி 100 இலவச எஸ்எம்எஸ்களை பெறுகிறார்கள், அதேபோல் இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளும் கிடைக்கிறது.

கூடுதல் நன்மைகள்

கூடுதல் நன்மைகள்

இந்த திட்டத்தில் கிடைக்கும் கூடுதல் நன்மைகள் குறித்த விவரங்களை பார்க்கலாம். இந்த மூன்று திட்டத்திலும் நிறுவனம் தீபாவளி பரிசை வழங்குகிறது. OTT இயங்குதளங்களில் வீடியோக்களை பார்க்க விரும்பும் பயனர்களுக்கு Binge All Night சலுகை இலவசமாக வழங்கப்படுகிறது. Binge All Night ஆனது அதிகாலை 12 மணி முதல் காலை 6 மணி வரை வரம்பற்ற டேட்டாவை இலவசமாகப் பெற உதவும்.

Vi Movies மற்றும் TV VIP பயன்பாடு

அதேபோல் இந்த திட்டங்களில் டேட்டா ரோல் ஓவர் நன்மைகளும் வழங்கப்படுகிறது. இதனுடன் இந்த திட்டத்தை தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு Vi Movies மற்றும் TV VIP பயன்பாட்டிற்கான இலவச அணுகலும் வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vodafone Idea Vi Diwali Bonanza offer: Users Can Get 75GB Free Data and Binge All Night Offer

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X