என்னங்க ஆறுதலா?- ஒருபக்கம் விலை ஏற்றம்., மறுபக்கம் இலவசம்: விஐ பயனர்களே 2ஜிபி இலவச டேட்டா பெறுவது எப்படி?

|

டேட்டா டிலைட்ஸ் சலுகையானது அக்டோபர் 22 2021 அன்று தொலைத் தொடர்பு நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டது. டேட்டா டிலைட்ஸ் என்பது வோடபோன் ஐடியா (விஐ) வழங்கும் புதிய சலுகையாகும். இந்த சலுகை மூலம் பயனர்கள் 4ஜி டேட்டா வவுச்சர்களை குறுகிய கால பயன்பாட்டிற்கு என ரீசா்ஜ் செய்ய வேண்டியதில்லை என்பதாகும்.

வோடபோன் ஐடியா (விஐ) ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள்

வோடபோன் ஐடியா (விஐ) ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள்

வோடபோன் ஐடியா (விஐ) ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு "டேட்டா டிலைட்ஸ்" என்ற புதிய சலுகையை அறிமுகப்படுத்தியது. இந்த சலுகை தொலைத்தொடர்பு நிறுவனத்தின் இணையதளத்தில் காணலாம். டேட்டா டிலைட்ஸ் சலுகையின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பார்க்கலாம். பயனர்கள் ஒவ்வொரு காலண்டர் மாதமும் எந்தவித கூடுதல் கட்டணமும் இல்லாமல் நிறுவனத்திடம் இருந்து 2ஜிபி காப்பு பிரதி டேட்டாவைப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்கள்

தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்கள்

தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு மட்டுமே இந்த டேட்டா டிலைட்ஸ் சலுகை பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. 121249 என்ற கட்டணமில்லா எண்ணை அழைப்பதன் மூலம் காப்புப் பிரதி டேட்டாவை செயல்படுத்த தகுதியான வாடிக்கையாளரா என்பதை பார்க்கலாம். அதேபோல் இந்த எண்ணை தொடர்பு கொண்டு 1-ஐ அழுத்துவதன் மூலம் இந்த டேட்டாவை பெறுவதற்கு உரிமை கோரலாம். அதேபோல் இந்த காப்புப் பிரதி டேட்டாவை பெற தகுதியற்றவராக இருந்தால் அதற்கு காரணம் தெரிவிக்கப்படும். அதேபோல் விஐ மொபைல் ஆப்ஸ் மூலமாகவும் காப்புப் பிரதி டேட்டாவை பயனர்கள் கோரலாம்.

வோடபோன் ஐடியா

வோடபோன் ஐடியா "டேட்டா டிலைட்ஸ்" சலுகை

வோடபோன் ஐடியா "டேட்டா டிலைட்ஸ்" சலுகை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து பார்க்கையில் இது 2ஜிபி பேக்கப் டேட்டாவை வழங்குகிறது. இந்த டேட்டா ரூ.299, ரூ.479, ரூ.501, ரூ.901, ரூ.719, ரூ.475, ரூ.359, ரூ.539, ரூ.839, ரூ.2899, ரூ.409, ரூ.1449, ரூ.701, ரூ.599, ரூ.399 மற்றும் ரூ.3099 என்று தேர்ந்தெடுக்கப்பட்ட வரம்பற்ற டேட்டா ப்ரீபெய்ட் திட்டங்களில் வழங்கப்படும். நிறுவனம் வழங்கும் 2 ஜிபி டேட்டாவை இரண்டு நாட்களுக்கு 1ஜிபி டேட்டா என இரண்டு தவணைகளாக வழங்கப்படும். இந்த டேட்டா செயல்படுத்தப்பட்ட அதே தினத்தில் நள்ளிரவு வரை பயன்படுத்தலாம். அன்லிமிடெட் டேட்டா பேக்கின் செல்லுபடியாகும் காலம் முடிந்தவுடன் இந்த அவசர தரவு ஆக்டிவேட் செய்ய கோர முடியும்.

புதிய சலுகை

புதிய சலுகை

இந்த சலுகையானது அக்டோபர் 22, 2021 அன்று நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது நிறுவனத்தின் புதிய சலுகையாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். குறுகிய காலத்திற்கு அவசர டேட்டா தேவைப்பட்டால் 4ஜி டேட்டா வவுச்சர்கள் மூலம் ரீசார்ஜ் செய்ய முடியும். வோடபோன் ஐடியா சமீபத்தில் திட்டத்தின் விலை அதிகரித்து அறிவித்தது.

விஐ ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்வு

விஐ ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்வு

விஐ ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வானது நவம்பர் 25 முதல் அமலுக்கு வர இருக்கிறது. ஏர்டெல் விலை உயர்வை அறிவித்ததையடுத்து விஐ விலை உயர்வை அறிவித்துள்ளது. தற்போடு வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ரீசார்ஜ் செய்யும் போது கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். விஐ அறிவித்த கட்டண உயர்வு நவம்பர் 25 ஆம் தேதி முதலே அமலுக்கு வருகிறது என்பதால், பயனர்கள் இந்த இரண்டு தினங்களிலேயே ரீசார்ஜ் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல், விஐ விலை உயர்வு

ஏர்டெல், விஐ விலை உயர்வு

ஏர்டெல் அமல்படுத்திய விலை உயர்வைத் தொடர்ந்து விஐ (வோடபோன் ஐடியா) நிறுவனமும் விலை உயர்வை அறிவித்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனம் பல ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்வை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் பயனரின் ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. இந்த புதிய கட்டண உயர்வானது நவம்பர் 25 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. விஐ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகரித்துள்ளது. வரம்பற்ற குரல் அழைப்பு உள்ளிட்ட பல ரீசார்ஜ் திட்டங்களின் விலை அதிகரித்திருக்கிறது.

விஐ ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்வு

விஐ ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்வு

புதிய விஐ ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்வின் மூலம் திட்டங்கள் ப்ரீமியம் ரகத்தில் இருக்கிறது. ரூ.500 வரை விலை உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்ட விலை உயர்வு குறித்து பார்க்கையில், இந்த விலை ரூ.2399 ஆக இருந்த நிலையில் தற்போது இதன் விலை ரூ.2899 ஆக இருக்கிறது. திட்டத்தின் பலன்கள் குறித்து பார்க்கையில், இது தினசரி 1.5 ஜிபி டேட்டா, தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் குரல் அழைப்பு நன்மைகளுடன் வருகிறது அதோடு இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் குறித்து பார்க்கையில் இது 365 நாட்கள் செல்லுபடியாகும்.

ரூ.300 விலை உயர்வு

ரூ.300 விலை உயர்வு

இதேபோல் மற்றொரு திட்டம் குறித்து பார்க்கையில், இந்த திட்டத்துக்கு ரூ.300 விலை உயர்வு பெற்றிருக்கிறது. இதன் மூலம் ரூ.1499 என்று இருந்த திட்டத்தின் விலை தற்போது ரூ.1799 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின் பலன்கள் குறித்து பார்க்கையில், இது 24 ஜிபி டேட்டா மற்றும் 2600 இலவச எஸ்எம்எஸ்களுடன் வருகிறது. இது 365 நாட்களுக்கு செல்லுபடியாகும். மேலும் வரம்பற்ற குரலழைப்பு நன்மைகளை வழங்குகிறது. அதேபோல் ரூ.699 என்ற இருந்த திட்டத்தின் விலை ரூ.839 ஆக இருக்கிறது மேலும் ரூ.599 திட்டத்தின் விலை ஆனது ரூ.719 ஆக இருக்கிறது. இந்த இரண்டு திட்டங்களும் முறையே 2 ஜிபி டேட்டா மற்றும் தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் 84 நாட்கள் சலுகையோடு வருகிறது. வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்களுடன் வருகிறது. அதேபோல் ரூ.379-க்கு இருந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை தற்போது ரூ.459 ஆக இருக்கிறது.

காம்போ ப்ரீபெய்ட் திட்டங்கள்

காம்போ ப்ரீபெய்ட் திட்டங்கள்

காம்போ ப்ரீபெய்ட் திட்டங்களை தவிர குரல் அழைப்பு திட்டமான ரூ.79 திட்டத்துக்கு ரூ.20 விலை உயர்வு அறிவித்து தற்போது இந்த திட்டம் ரூ.99 ஆக இருக்கிறது. இந்த திட்டமானது 200 எம்பி டேட்டா மற்றும் வினாடிக்கு 1 பைசா குரல் அழைப்பு கட்டணம் மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. அதேபோல் டேட்டா பாப் அப் திட்டங்கள் குறித்து பார்க்கையில் ரூ.48 விலையில் இருந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை தற்போது ரூ.58 ஆக இருக்கிறது. மேலும் ரூ.98 விலையில் இருந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை தற்போது ரூ.118 ஆக இருக்கிறது. மேலும் ரூ.251 என்ற விலையில் இருந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை தற்போது ரூ.298 ஆக இருக்கிறது மேலும் ரூ.351 என்ற விலையில் இருந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ.418 ஆக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Vodafone Idea VI Data Delights Offered 2GB Backup Data to Customers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X