எடுத்ததை கொடுத்தாங்க., ஆனா வேற மாதிரி- மீண்டும் விஐ கொண்டு வந்த சிறந்த ப்ரீபெய்ட் திட்டம்- புத்தாண்டு பரிசு!

|

வோடபோன் ஐடியா (விஐ) ப்ரீபெய்ட் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியது. விஐ நிறுவனம் தனது ரூ.601 திட்டத்தை சமீபத்தில் நிறுத்தி அறிவித்தது. தற்போது மறுதொடக்கம் செய்யப்பட்ட திட்டம் மாற்றியமைக்கப்பட்ட புது நன்மைகளை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் இலவச சந்தா அணுகல், திரைப்படங்கள், லைவ் கேம் மற்றும் டிவி நிகழ்ச்சிகள் உள்ள பல உள்ளடக்கத்தை வழங்குகிறது நிறுவனம்.

விஐ ரூ.601 ப்ரீபெய்ட் திட்டம்

விஐ ரூ.601 ப்ரீபெய்ட் திட்டம்

அதிகாரப்பூர்வ விஐ இணையதளத்தின்படி, ரூ.601 ப்ரீபெய்ட் திட்டம் சமீபத்தில் நிறுத்தி அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த திட்டம் மீண்டும் பட்டியலிடப்பட்டது. பட்டியலின் படி, இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தை கொண்டிருக்கிறது ஆனால் முன்பு 56 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தை கொண்டிருக்கிறது இந்த திட்டம். இந்த திட்டம் தினசரி 3 ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகள் போன்ற பிற நன்மைகளை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் ஒரு வருடத்திற்கு தேவையான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை வழங்குகிறது.

விஐ வழங்கும் ரூ.601 திட்டம்

விஐ வழங்கும் ரூ.601 திட்டம்

அதுமட்டுமின்றி விஐ வழங்கும் ரூ.601 திட்டத்தில் 2 ஜிபி வரையிலான காப்புப் பிரதி டேட்டாவை வழங்குகிறது. இந்த டேட்டாவை அதன் பயனர்கள் 121249-ஐ டயல் செய்வதன் மூலமாகவோ அல்லது விஐ ஆப்ஸ் மூலமாகவோ கோரலாம். வார இறுதி தரவு பரிமாற்றம் மற்றும் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இணையத்தை ஸ்ட்ரீமிங் செய்வதற்கும் உலாவுவதற்குமான இலவச தரவு அணுகல் வசதி இருக்கிறது. ப்ரீமியம் திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகளை உள்ளடக்கிய விஐ மூவிஸ் மற்றும் டிவி பயன்பாட்டிற்கான அணுகலையும் இந்த திட்டம் வழங்குகிறது.

ரூ.100 தள்ளுபடி

ரூ.100 தள்ளுபடி

ரூ.601 ப்ரீபெய்ட் திட்டத்தை பல தளங்களில் ரீசார்ஜ் செய்யலாம். ஆனால் விஐ பயன்பாட்டின் மூலமாக ரீசார்ஜ் செய்யும் போது நீங்கள் ரூ.100 தள்ளுபடியை பெறுவீர்கள். அதன்படி இந்த திட்டத்தை நீங்கள் ரூ.501 என பெறலாம். ரூ.601 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது டேட்டா ஆன் பேக் ஆக வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த திட்டம் 56 நாட்கள் செல்லுபடியாகும் காலம் முழுவதும் 75 ஜிபி டேட்டா போன்ற நன்மைகளை வழங்கியது. இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ், விஐ மூவிஸ் மற்றும் டிவி அணுகல், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா போன்ற பல நன்மைகளை வழங்குகியது. ஆனால் நிறுவனம் இந்த திட்டத்தை நிறுத்தி அறிவித்தது.

ரூ.155, ரூ.239, ரூ.666 மற்றும் ரூ.699 ரீசார்ஜ் திட்டம்

ரூ.155, ரூ.239, ரூ.666 மற்றும் ரூ.699 ரீசார்ஜ் திட்டம்

அதேபோல் வோடபோன் ஐடியா (விஐ) நிறுவனம் சமீபத்தில் ரூ.155, ரூ.239, ரூ.666 மற்றும் ரூ.699-க்கு நான்கு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியது. ரூ.699 என்ற விலையில் அறிமுகப்படுத்த திட்டமானது முன்னதாக ரூ.701 விலையில் வழங்கிய அதே நன்மைகளை வழங்கியதால் இந்த திட்டம் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொலைத்தொடர்பு நிறுவனம் அத்தகைய சலுகைகள் வழங்கும் இரண்டு திட்டங்களை நீக்கியது. ரூ.601 மற்றும் ரூ.701 விலையில் கிடைக்கும் இந்த திட்டங்கள் இனி வோடபோன் ஐடியா (விஐ) நிறுவனத்திடம் இருந்து வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டது.

விஐ டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சலுகை

விஐ டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சலுகை

அதேபோல் விஐ தனது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சலுகையை வழங்கும் ப்ரீபெய்ட் திட்ட விலையை ரூ.501 மற்றும் ரூ.901 என குறைத்து அறிவித்துள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் சலுகையுடன் தொலைத்தொடர்பு நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் இரண்டு திட்டங்கள் இவை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. வோடபோன் ஐடியா ரூ.601 மற்றும் ரூ.701 திட்டங்களை மீண்டும் கொண்டு வரலாம் எனவும் அதன் விலை உயரலாம் எனவும் கூறப்படுகிறது. வோடபோன் ஐடியா (விஐ) சமீபத்தில் ரூ.155, ரூ.239, ரூ.666 மற்றும் ரூ.699 என்ற விலையில் நான்கு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியது. ரூ.701 புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமும் ரூ.699 திட்டமும் ஏறக்குறைய அதே பலன்களை வழங்குகிறது.

56 நாட்களுக்கு தினசரி 3 ஜிபி டேட்டா

56 நாட்களுக்கு தினசரி 3 ஜிபி டேட்டா

ரூ.701 ஸ்மார்ட்போனானது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் உடன் 56 நாட்களுக்கு தினசரி 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ரூ.699 திட்டமும் தினசரி 3 ஜிபி டேட்டாவை 56 நாட்களுக்கு வழங்குகிறது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் சந்தா திட்டத்தின் மதிப்பு சற்று அதிகமாக இருக்க வேண்டும் இதன் காரணமாக விஐ அதன் சலுகைகளை வழங்கும் ரூ.701 திட்டத்தை நீக்கியிருக்கிறது. ரூ.601 திட்டமானது டேட்டா வவுச்சராக மட்டுமே இருக்கிறது. ஆனால் விஐ நிறுவனம் ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் அணுகலை வழங்கும் புதிய டேட்டா திட்டங்களை கொண்டு வரலாம் என கூறப்படுகிறது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை வழங்கும் இரண்டு திட்டங்களின் விலை தற்போது ரூ.501 மற்றும் ரூ.901 ஆகிய விலையில் தினசரி 3 ஜிபி டேட்டாவை முறையே 28 நாட்கள் மற்றும் 70 நாட்களுக்கு வழங்குகிறது. இரண்டு திட்டங்களும் விஐ ஹீரோ நன்மைகள், வரம்பற்ற குரலழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகின்றன.

தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மை

தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மை

தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மை வோடபோன் ஐடியாவின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 21 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் Vi Movies & TV Basic அணுகலுடன் வருகிறது இந்த ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம். ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Vi Movies & TV Classic-க்கான அணுகல் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் பயனர்கள் ஒவ்வொரு மாதமும் 2ஜிபி அளவிலான டேட்டா பேக்அப்பைப் பெறுவார்கள். குறிப்பாக வோடபோன் ஐடியா ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 42 நாட்கள் ஆகும்.

Best Mobiles in India

English summary
Vodafone Idea (VI) Brought Back its Rs.601 Prepaid plan with Renewed Benefits

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X