Home
News

Vodafone Idea பயனர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. பாட்டு கேட்டால் iPad, கிஃப்ட் வவுச்சர்கள் பரிசு!

அதிகம் கேட்கும் பயனர்கள் அதிகம் வெற்றி பெறுவார்கள் என வோடபோன் ஐடியா(விஐ) அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் ஐந்து பாடல்கள் கொண்ட பிளே லிஸ்ட்டை உருவாக்குவதே பரிசை வெல்ல தகுதிக்கான அடிப்படை விஷயமாகும்.

பின் Vi Mobile ஆப் மூலம் அதிக நேரம் பாடல்களைக் கேட்கும் பயனர்களுக்கு இந்த பரிசுகள் வழங்கப்படும். டெலிகாம் டாக் தளத்தில் விஐ பரிசு அறிவிப்புகள் குறித்து வெளியான தகவலை விரிவாக பார்க்கலாம்.

மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக Vi

மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக Vi

இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக வோடபோன் ஐடியா (Vi) இருக்கிறது.

முதலிடத்தில் ஜியோவும், இரண்டாவது இடத்தில் ஏர்டெல்லும் இருக்கிறது. ஜியோவும் ஏர்டெல்லும் கடுமையான போட்டியை எதிர்கொண்டு வரும் நேர்ததில், மூன்றாவது நிறுவனமாக இருக்கும் ஏர்டெல் இந்த இரண்டு நிறுவனங்களுடன் போட்டியிட முடியாமல் கடுமையாக திணறி வருகிறது.

கவர்ச்சிகரமான அறிவிப்புகள்

கவர்ச்சிகரமான அறிவிப்புகள்

ஜியோ மலிவு விலையில் அதிக சலுகைகளுடன் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. ஏர்டெல் நிறுவனம் சிறந்த வேகத்தில் இணைய சேவை வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

ஆனால் விஐ சமீபகாலமாக தொடர்ந்து வாடிக்கையாளர்களை இழந்த வண்ணம் இருக்கிறது.

இருப்பினும் விஐ வாடிக்கையாளர்களை தக்க வைக்க அவ்வப்போது சில கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படியான ஒரு அறிவிப்பை தான் பார்க்கப்போகிறோம்.

ஐபேட் மற்றும் அமேசான் பரிவு வவுச்சர்கள்

ஐபேட் மற்றும் அமேசான் பரிவு வவுச்சர்கள்

வோடபோன் ஐடியா(Vi) பயனர்களுக்கு ஐபேட் மற்றும் அமேசான் பரிவு வவுச்சர்களை வெல்லும் வாய்ப்பை அறிவித்துள்ளது.

Vi பயன்பாட்டில் குறைந்தபட்சம் 5 பாடல்களை பிளே லிஸ்ட்டில் உருவாக்குவதே பரிசுக்கான முதல் தகுதியாகும்.

அதிகம் கேட்கும் பயனர்கள் அதிக வெற்றி பெறுவார்கள் என வோடபோன் ஐடியா தெரிவித்துள்ளது.

Vi மொபைல் செயலிக்குள் இசை தளத்தை அறிமுகப்படுத்த ஹங்காமாவுடன் விஐ சமீபத்தில் கூட்டு சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

அதிக நேரம் பாடல்களை கேளுங்கள்

அதிக நேரம் பாடல்களை கேளுங்கள்

விஐ பிளேலிஸ்ட்டில் குறைந்தபட்சம் ஐந்து பாடல்களை உருவாக்குவதே பரிசுகளை வெல்வதற்கான முதல் தகுதி ஆகும்.

பின் Vi Mobile ஆப் மூலம் அதிக நேரம் பாடல்களைக் கேட்கும் பயனர்கள் விருதுகளை வெல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே விஐ பயனர்கள் பிற பயன்பாடுகள் மூலம் இசையை ஸ்ட்ரீமிங் செய்து வந்தால் அதை கைவிட்டுவிட்டு Vi மொபைல் பயன்பாட்டிற்கு மாறிவிடுங்கள்.

விஐ பயன்பாட்டில் இசை மற்றும் பாட்காஸ்ட்களை கேளுங்கள். அப்படி கேட்கும்பட்சத்தில் பரிசுகளை வெல்வதற்கு தகுதியானவர்களாக நீங்கள் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

எளிய கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும்

ஐபேட் உடன் அமேசான் கிஃப்ட் வவுச்சரும் வழங்கப்படும். உங்களிடம் ஒரு எளிய கேள்வி கேட்கப்படும் இதற்கு பதிலளித்த பிறகு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

டாப் 26 பங்கேற்பாளர்களுக்கு iPadம் 25 Amazon Gift Voucherகளும் பரிசாக தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இரண்டாவது பிறந்தநாளை கொண்டாடும் வோடபோன் ஐடியா

இரண்டாவது பிறந்தநாளை கொண்டாடும் வோடபோன் ஐடியா

இந்த சலுகை செப்டம்பர் 16, 2022 வரை மட்டுமே செல்லுபடியாகும். வோடபோன் ஐடியா (Vi) கூட்டு இணைந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது.

இதையடுத்து இரண்டாவது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக இந்த போட்டி நடத்தப்படுவதாக விஐ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வோடபோன் ஐடியா இசை பயன்பாட்டை வழங்க ஹங்காமா உடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதையடுத்து இந்த பயன்பாட்டின் மூலம் இசையை ஸ்ட்ரீம் செய்ய பயனர்களை ஊக்குவிக்க நிறுவனம் எடுக்கும் முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.

ரூ.10 லட்சம் வரை பரிசு அறிவித்த ஜியோ

ரூ.10 லட்சம் வரை பரிசு அறிவித்த ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ தனது 6-வது ஆண்டு விழாவை முன்னிட்டு ரீசார்ஜ் செய்யும் குறிப்பிட்ட பயனர்களுக்கு தினசரி ரூ.10 லட்சம் வரை பரிசு தொடர்ந்து 6 நாட்களுக்கு வழங்கப்படும் என அறிவித்தது.

மறுபுறம் வோடபோன் ஐடியா டாப் 26 பங்கேற்பாளர்களுக்கு ஐபேட்டை பரிசாக அறிவித்துள்ளது.

ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை என்பது போல் வோடபோன் ஐடியா தங்களால் முடிந்த முயற்சியை மேற்கொண்டு வாடிக்கையாளர்களை தக்கவைக்கும் அதிகரிக்கவும் முயற்சித்து வருகிறது.

கடுமையான வீழ்ச்சியை சந்திக்கும் வோடபோன் ஐடியா

கடுமையான வீழ்ச்சியை சந்திக்கும் வோடபோன் ஐடியா

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில், ரிலையன்ஸ் ஜியோ ஜூன் மாதத்தில் 42.2 லட்சம் பயனர்களையும், பாரதி ஏர்டெல் 7.9 லட்சம் பயனர்களையும் இணைத்துள்ளதாக தெரிவித்தது.

வோடபோன் ஐடியா(விஐ) பயனர் எண்ணிக்கையில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதாவது VI நிறுவனம் கடந்த மாதம் 1.8 மில்லியன் சந்தாதாரர்களை இழந்திருக்கிறது. விஐ கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

Best Mobiles in India

English summary
Vodafone Idea users can get an iPad and Amazon Gift Vouchers: Just Listen Songs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X