ரூ.200 விலைக்குள் 30 நாள் வேலிடிட்டி பெற வாய்ப்பு.. Vi பயனர்களே கொஞ்சம் கவனியுங்க!

|

நீங்கள் வோடபோன் ஐடியா (Vi) வாடிக்கையாளராக இருந்தால், ரூ. 200-க்குள் 30 நாட்கள் செல்லுபடியாகும் மொபைல் சேவை வேலிடிட்டியைப் பெற வாய்ப்புள்ளது. டெலிகாமின் பெரும்பாலான திட்டங்கள் அதிக கட்டணங்களுடன் இருந்தபோதிலும், இதைக் குறித்த விலையில் செய்து முடிக்க ஒரு சாமர்த்தியமான எளிய வழி உள்ளது. ரூ.200 விலைக்குள் எப்படி 30 நாட்கள் செல்லுபடியைப் பெறுவது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

வோடபோன் ஐடியா (Vi) திட்ட நன்மைகள்

வோடபோன் ஐடியா (Vi) திட்ட நன்மைகள்

வோடபோன் ஐடியா (Vi) இப்போது இந்தியாவில் உள்ள பல பகுதிகளில் அதன் நெட்வொர்க் சேவைகளை மேம்படுத்தி வருகிறது. இதன் மூலம், இனி Vi பயனர்களுக்குச் சிறந்த இணைப்பு கிடைக்கப்போகிறது. இதன் விளைவாக விஐ பயனர்களுக்கு மேம்பட்ட குரல் அழைப்பு நன்மை மற்றும் டேட்டா நன்மை கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இருப்பினும், ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்கள் அதிகமாக இருப்பதால், வாடிக்கையாளர்கள் கொஞ்சம் கடுப்பில் உள்ளனர்.

ஆள் நைட் பிங்கே மூலம் இரவு முழுக்க டேட்டா இலவசமா?

ஆள் நைட் பிங்கே மூலம் இரவு முழுக்க டேட்டா இலவசமா?

இந்தியாவில், பெரும்பாலானோர் Vi சிம்மை இரண்டாம் நிலை சிம் கார்டாக மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, இந்த டெலிகாம் நிறுவனத்தின் கீழ் கிடைக்கும் வீகென்ட் ரோல் ஓவர் மற்றும் ஆள் நைட் பிங்கே போன்ற டேட்டா நன்மைகளுகளாகவே மக்கள் வோடபோன் ஐடியாவை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தெரியாதவர்களுக்கு, ஆள் நைட் பிங்கே சேவையின் மூலம் வாடிக்கையாளர் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இலவச அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்த முடியும்.

TV, AC-ஐ ரிமோட்டில் மட்டும் OFF செய்கிறீர்களா? அப்போ கரண்ட் பில் எகிறும் - வாம்பைர் பவர் லாஸ் சிக்கல்!TV, AC-ஐ ரிமோட்டில் மட்டும் OFF செய்கிறீர்களா? அப்போ கரண்ட் பில் எகிறும் - வாம்பைர் பவர் லாஸ் சிக்கல்!

ரூ,200 விலைக்குள் இதை செய்யலாம்

ரூ,200 விலைக்குள் இதை செய்யலாம்

அதேபோல், வீகென்ட் டேட்டா ரோல் ஓவர் அம்சத்தின் கீழ், வார நாட்களில் பயன்படுத்தப்படாத ஒட்டுமொத்த டேட்டாவையும் வாடிக்கையாளர்கள் வார இறுதியில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதாகும். இது ஒரு புறம் இருக்க, குறைந்த மாதாந்திர செலவில் Vi சிம்மை செயல்பாட்டில் வைத்திருக்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கான சிறந்த முறையைப் பற்றித் தான் இங்குப் பார்க்கப்போகிறோம். கீழே குறிப்பிட்டுள்ள வழிமுறையைப் பின்பற்றினால், ரூ,200 விலைக்குள் இதை நீங்கள் செய்யலாம்.

வோடபோன் ஐடியா ரூ 98 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ 98 ப்ரீபெய்ட் திட்டம்

Vodafone Idea அதன் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டத்தை மொத்தம் 15 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்குகிறது. இப்போது, இந்த திட்டத்தை நீங்கள் இரண்டு முறை அடுத்தடுத்து வாங்கினால், உங்களுக்கு 30 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி கிடைக்கும். குறிப்பாக, உங்களுடைய ரீசார்ஜ்களை நீங்கள் வரிசையில் வைக்க வேண்டியதில்லை என்பதை நினைவில் கொள்ளவும். செல்லுபடியாகும் வேலிடிட்டி காலம் முடிந்ததும் நீங்கள் அதை மீண்டும் ஒரு முறை வாங்கலாம்.

இந்தியாவில் டைனோசர் முட்டை! 2050 இல் டைனோசர் மீண்டும் உயிர் பெறுமா? என்னப்பா சொல்றீங்க?இந்தியாவில் டைனோசர் முட்டை! 2050 இல் டைனோசர் மீண்டும் உயிர் பெறுமா? என்னப்பா சொல்றீங்க?

30 நாட்கள் செல்லுபடிக்கு வெறும் ரூ.196 மட்டும் தான் செலவா?

30 நாட்கள் செல்லுபடிக்கு வெறும் ரூ.196 மட்டும் தான் செலவா?

எனவே, ஒவ்வொரு 15 நாட்களுக்கும், இந்த திட்டத்தைப் பெற நுகர்வோர் ரூ.98 மட்டுமே செலவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, 30 நாட்களில் ஒரு மாதத்தில், நுகர்வோர் ரூபாய் 196 மட்டுமே செலவழிக்க வேண்டியதுள்ளது. அடுத்த 30 நாட்களுக்கு உங்கள் சிம்மை செயலில் வைக்க இதே முறையை நீங்கள் தொடர்ந்து பின்பற்றலாம். உண்மையை சொல்லப் போனால், இது ஒரு சாமர்த்தியமான ஒப்பந்தமாக இருக்கும்.

வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் டேட்டா நன்மை.. ஆனா?

வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் டேட்டா நன்மை.. ஆனா?

இந்த திட்டம் உங்களுக்கு அதன் செல்லுபடி காலத்தில் முழுதும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையை வழங்குகிறது. ஆனால், இதில் SMS நன்மைகள் என்று எதுவும் கிடையாது. டேட்டா நன்மையைப் பற்றிப் பார்க்கையில், இந்த திட்டத்தின் பயனர்கள் 200MB டேட்டாவைப் பெறுகிறார்கள். ஆனால் கூடுதல் டேட்டா தேவைப்பட்டால் ஆட்-ஆன் 4ஜி டேட்டா பேக் மூலம் நீங்கள் விருப்பம் டேட்டா பேக் திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய பிற நன்மைகள் என்று எதுவும் இல்லை.

Amazon-ல் இப்படி ஒரு ரோபோ வேலை செய்கிறதா? உங்கள் பார்சல் சரியாக வர ரோபோ தான் காரணமா?Amazon-ல் இப்படி ஒரு ரோபோ வேலை செய்கிறதா? உங்கள் பார்சல் சரியாக வர ரோபோ தான் காரணமா?

Best Mobiles in India

English summary
Vodafone Idea Users Can Get 30 Days of Mobile Service Under Rs 200 : Read more about this in Tamil GizBo

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X