Home
News

உன்னைய வச்சி என்னத்த பண்ண? கடுப்பை கிளப்பும் 2 புதிய மாற்றங்களை அறிவித்துள்ள Vodafone Idea!

ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி சேவைகள் 200 க்கும் மேற்பட்ட இந்தி நகரங்களில் அறிமுகமாகி விட்டது. மறுகையில் உள்ள ஏர்டெல்லின் 5ஜி சேவைகள் 125 க்கும் மேற்பட்ட நகரங்களில் அணுக கிடைக்கிகிறது. ஆனால் வோடாபோன் ஐடியாவோ (Vodafone Idea) அதன் 5ஜி அறிமுகம் குறித்து இன்னும் வாயே திறக்கவில்லை!

இதற்கு மேலும் பொறுமையாக இருந்தால் வேலைக்கு ஆகாது.. ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர்களை தக்க வைப்பதோடு சேர்த்து முடிந்தவரை புதிய கஸ்டமர்களையும் சேர்க்க வேண்டுமென.. வோடாபோன் ஐடியா நிறுவனம் பொங்கி எழும் என்று பார்த்தால்.. கடுப்பை கிளப்பும்படியான 2 வேலைகளை பார்த்துள்ளது!

கடுப்பை கிளப்பும் 2 புதிய மாற்றங்களை அறிவித்துள்ள Vodafone Idea!

வோடாபோன் ஐடியா அறிவித்துள்ள 2 புதிய மாற்றங்கள்

வோடாபோன் ஐடியா நிறுவனம் அதன் 2 ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளின் மீது திடீர் மாற்றங்களை அறிவித்துள்ளது. அந்த திட்டங்கள் ரூ.195 ரீசார்ஜ் மற்றும் ரூ.319 ரீசார்ஜ் ஆகும். கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் அறிமுகமான இந்த 2 திட்டங்களின் நன்மைகளும் தற்போது குறைக்கப்பட்டுள்ளன!

வோடபோன் ஐடியா ரூ.195 திட்டத்தின் புதிய மற்றும் பழைய நன்மைகள்

வோடபோன் ஐடியாவின் ரூ.195 ரீசார்ஜ் இப்போது 3ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ்கள், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், விஐ மூவீஸ் & டிவிக்கான இலவச அணுகல் போன்ற நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 1 மாதமாகும். முன்னதாக இந்த திட்டம் திட்டம் 2 ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை 31 நாட்களுக்கு வழங்கியது.

வோடபோன் ஐடியா ரூ.319 திட்டத்தின் புதிய மற்றும் பழைய நன்மைகள்

வோடபோன் ஐடியாவின் ரூ.319 ரீசார்ஜ் இப்போது 2ஜிபி டெய்லி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ்கள், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஹீரோ அன்லிமிடெட், பிங்கே ஆல் நைட், வீக்கெண்ட் டேட்டா ரோல்-ஓவர், வி மூவிஸ் & டிவி கிளாசிக், டேட்டா டிலைட்ஸ் போன்ற நன்மைகளை 30 நாட்களுக்கு வழங்குகிறது. முன்னதாகே இதன் வேலிடிட்டி 31 நாட்களாக இருந்தது.

அதாவது வோடபோன் ஐடியா, அதன் ரூ.195 மற்றும் ரூ.319 திட்டங்களின் வேலிடிட்டியை 31 நாட்களில் இருந்து 30 நாட்களாக குறைத்துள்ளது. மொத்த வேலிடிட்டியில் 1 நாளை குறைப்பதற்கு பின்னால் உள்ள காரணத்தை வோடாபோன் ஐடியா இன்னும் வெளிப்படுத்தவில்லை. ஆனால் "இதெல்லாம் நல்லதுக்கு இல்லை" என்பது மட்டும் வெளிப்படை!

ரூ.296 க்கு புதிய திட்டமொன்றும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

ரூ.195 மற்றும் ரூ.319 திட்டங்களின் வேலிடிட்டியை குறைத்த கையோடு விஐ நிறுவனம் ரூ.296 க்கு புதிய ரீசார்ஜ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. நன்மைகளை பொறுத்தவரை, 25 ஜிபி மொத்த டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ்கள் போன்றவைகளை வழங்குகிறது.

ஆனால் வோடாபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பது புதிய திட்டமோ அல்லது பழைய திட்டங்களின் மீதான திடீர் மாற்றமோ அல்ல, பெரும்பாலான விஐ கஸ்டமர்கள் எதிர்பார்ப்பது 5ஜி அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலைத்தான். இந்த விஷயத்தை வோடாபோன் ஐடியா புரிந்துகொண்டால் கொஞ்சம் நன்றாக இருக்கும்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Updated The Benefits And Validity of Rs 195 and Rs 319 Prepaid Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X