ரூ.300 குள்ள முடிச்சு விட்டாங்களே.. 300GB டேட்டாவை அள்ளி கொடுக்குது.. வந்தது Vodafone Idea-வின் 5G திட்டம்!
லேட்-ஆ வந்தாலும் லேட்டஸ்ட்-ஆ வருவோம்ல என்கிற படியாக.. ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக, இந்தியாவின் மூன்றாவது பெரிய டெலிகாம் ஆபரேட்டர் ஆன வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமானது, அதன் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் செலவின்றி 5ஜி சேவையை (Vi Free 5G Service) வழங்க முடிவு செய்துள்ளது.
இது கடந்த 2022 ஆம் ஆண்டு ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய 2 நிறுவனங்களும் தங்களுடைய 5ஜி சேவை அறிமுகப்படுத்தியபோது செய்த அதே "அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆபர்" (Unlimited 5G Data Offer) உத்தியாகும். பழைய உத்தி தான் - ஆனால் வோடாபோன் ஐடியாவிற்கு இதிலொரு "பிளஸ் பாயிண்ட்" உள்ளது!

அது என்னவென்றால் - 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது தற்போது இந்திய சந்தையில் அதிக எண்ணிக்கையிலான 5ஜி ஸ்மார்ட்போன்கள் மற்றும் மிகவும் மலிவான 5ஜி ஸ்மார்ட்போன்கள் (Affordable 5G Phones) உள்ளன. ஆகையால் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 4ஜி பயனர்கள் விரைவாக 5ஜி சேவை அப்கிரேட் (4G to 5G Upgrade) ஆக முடியும்!
குறைந்தபட்சம் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்துடன் ரீசார்ஜ் செய்யும் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்க வோடாபோன் ஐடியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் விஇ பயனர்களுக்கான என்ட்ரி லெவல் ரீசார்ஜ் (Entry Level Recharge Plan) ஆகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது
டெலிகாம் டால்க்கின் (TelecomTalk) அறிக்கையின்படி, வோடபோன் ஐடியா அதன் 5ஜி திட்டங்களுடன் 300ஜிபி எப்யுபி (300GB FUP), அதாவது நியாயமான பயன்பாட்டுக் கொள்கையின் (Fair Usage Policy) கீழ் 300ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த டேட்டா ஒவ்வொரு மாதமும் ரீசெட் (Reset) செய்யப்படும். விஐ நிறுவனம் இப்போதைக்கு மைசூர், மும்பை, பாட்னா, டெல்லி மற்றும் சண்டிகர் உள்ளிட்ட பல இடங்களில் தனது 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
உங்களிடம் வோடாபோன் ஐடியாவின் 4ஜி சிம் (Vodafone Idea 4G SIM) இருந்தால், 5ஜி சேவைகளை பெறுவதற்கு வேறு எந்த சிம் கார்டுக்கும் மேம்படுத்த வேண்டிய அவசியமில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஒருவேளை உங்களிடம் 2ஜி சிம் (Vodafone Idea 4G SIM) இருந்தால், நீங்கள் விஐ நிறுவனத்திடமிருந்து 4ஜி அல்லது 5ஜி சிம்மிற்கு அப்கிரேட் ஆக வேண்டும்.
இதை செய்ய, நீங்கள் அருகிலுள்ள விஐ ரீடெயில் கடைக்கு (Nearby Vi Retail Store) செல்லலாம். விஐ-யின் 5ஜி சேவை சரியாக வேலை செய்வதை உறுதிசெய்ய, பயனர்கள் பெரும்பாலும் தங்கள் சிம் கார்டுகளை முதல் சிம் ஸ்லாட்டில் (First SIM Slot) வைத்திருக்க வேண்டும் என்றும் வோடபோன் ஐடியா எச்சரித்து உள்ளது.
அதாவது "சில ஸ்மார்ட்போன்களில்" பயனர்கள் தங்கள் சிம் கார்டை சிம் ஸ்லாட் 2-ல் வைத்திருந்தால் விஐ 5ஜி சரியாக வேலை செய்யாமல் போகலாம் என்று அர்த்தம் மேலும், இந்நிறுவனத்தின் நெட்வொர்க்குகளிலிருந்து சிறந்த 5ஜி அனுபவத்தை பெற, பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனை பவர் சேவிங் மோட்-ல் (Power Saving Mode) வைத்திருக்க வேண்டாம் என்றும் வோடாபோன் ஐடியா அறிவுறுத்துகிறது.
ஒப்பிடுகையில், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் கீழ் ரூ.200 க்கும் குறைவான விலையில் உள்ள திட்டத்தின் கீழ் கூட ஜியோ பயனர்களால் 5ஜி சேவையை அனுபவிக்க முடிகிறது. இருப்பினும் இப்போதைக்கு விஐ நிறுவனத்திடம் அத்தகைய திட்டம் எதுவும் இல்லை. நாடு முழுவதுமான 5ஜி சேவை அறிமுகத்திற்கு பின்னர் இன்னும் மலிவான திட்டங்களை நாம் எதிர்பார்க்கலாம். அது வரையிலாக - இது கிடைப்பதே பெரிது!


Click it and Unblock the Notifications








