லட்டுல வச்சேன்னு நினைச்சியா.. நட்டுல வச்சேன்.. Elon Musk-ஐ மிரளவிட்ட Vodafone Idea.. ஒப்புதல் வாங்கியாச்சு!
ஜியோ மற்றும் ஏர்டெல்லுக்கு அடுத்தபடியாக நாட்டின் மூன்றாவது பெரிய டெலிகாம் ஆபரேட்டர் ஆன வோடபோன் ஐடியா நிறுவனமானது, எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்கை சேவையை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளது. இப்போதைக்கு இதுவொரு நேரடி போட்டியாக இருக்காது. ஏனென்றால் இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவைகள் இனிமேல் தான் விரிவாக தொடங்க உள்ளது.
வோடபோன் ஐடியா நிறுவனம் ஆனது ஒரு சாட்காம் சேவை வழங்குநர் (Satcom service provider) இல்லை, அதாவது செயற்கைக்கோள் தொடர்பு சேவை வழங்குநர் இல்லை என்றாலும், அது இன்னும் ஸ்டார்லிங்கிற்கு "ஒரு வகையான" போட்டியாளராகவே உள்ளது. இரண்டுமே கனெக்டிவிட்டி சேவைகளில் உள்ளன, ஆனால் அவைகள் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தில் வேறுபடுகின்றன.

இந்தியாவில் நெட்வொர்க் கவரேஜை மேம்படுத்த, வோடபோன் ஐடியா ஏஎஸ்டி (AST) ஸ்பேஸ்மொபைலுடன் ஒரு கூட்டாண்மையை அறிவித்துள்ளது. இது வழக்கமான ஸ்மார்ட்போன்களை கொண்ட பயனர்களுக்கு விண்வெளி அடிப்படையிலான செல்லுலார் சேவைகளை வழங்க வோடபோன் ஐடியாவை நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கும்.
செயற்கைக்கோள் சிக்னல்களால் - நெட்வொர்க்குகள் இல்லாத ஆழமான காடுகளையும் கூட உள்ளடக்கிய நிலப்பரப்பை அடைய முடியும் என்பதால், பயனர்களுக்கு இது கவரேஜ் அனுபவத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருக்கும். எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்கும் கூட இதை செய்ய இலக்கு வைத்துள்ளது. இந்த இடத்தில் தான் - எலான் மஸ்க் VS வோடாபோன் ஐடியா (Elon Musk Vs Vodafone Idea) உருவாகிறது!
உண்மையில், ஸ்டார்லிங்க் சமீபத்தில் டைரக்ட் டூ செல் சேவைகளை (Direct-to-Cell services) அறிமுகப்படுத்தியது, இதில் கால் மற்றும் டேட்டா திறன்களும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது வோடபோன் ஐடியா மற்றும் ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைல் என்ன செய்ய விரும்புகிறது என்பதற்கு நேரடி போட்டியாக இருக்கும்.
வோடபோன் ஐடியா நிறுவனம் ஆனது ஏர்டெல் மற்றும் ஜியோவை விட வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் இதை செய்கிறதா அல்லது உண்மையிலேயே எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் சேவையுடன் ஏதோவொரு வகையில் போட்டியிடுகிறதா என்பது இங்கே கேள்வி இல்லை. வோடபோன் ஐடியா மற்றும் ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைல் என்கிற கூட்டாண்மை - நுகர்வோர் உட்பட அனைவருக்கும் பயனுள்ள முடிவுகளை தரும் என்பதில் மட்டும் சந்தேகமே வேண்டாம்
இதற்காக, வோடபோன் ஐடியா ஏற்கனவே அனைத்து ஒழுங்குமுறை ஒப்புதல்களையும் பெற்றுள்ளது. ஆனால் சாட்காம் சேவை நிறுவனமான ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைலுக்கும் இந்த ஒப்புதல்கள் தேவை. டாட் (DoT) என்று சுருக்கமாக அழைக்கப்படும் தொலைத்தொடர்புத் துறையின் (Department of Telecommunications) ஒப்புதல் இல்லாமல், விஷயங்கள் முன்னேறாது.
இந்தியாவில் சேவைகளை வழங்க தொடங்க ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைலுக்கு ஜிஎம்பிசிஎஸ் (GMPCS) என்கிற சாட்டிலைட் மூலம் உலகளாவிய மொபைல் தனிப்பட்ட தொடர்பு உரிமம் (Global Mobile Personal Communication by Satellite License) தேவைப்படும். ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைல் தனித்தனியாக வேலை செய்திருக்கலாம், இருப்பினும் வோடாபோன் ஐடியா உடனான கூட்டாண்மை, இந்நிறுவனத்திடமிருந்து அதிக விநியோகத்தை பெற உதவும்.
எதிர்காலத்தில், இந்திய டெலிகாம் தொழில்துறையில் மேலும் 2 கட்டண உயர்வுகள் இருக்கும் என்றும் பிஓஎப்ஏ செக்யூரிட்டீஸ் கணித்துள்ள நிலையில்.. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ஆனது ஏஆர்பியு (ARPU) என்கிற ஒரு பயனருக்கான சராசரி வருவாயை (Average revenue per user) அதிகரிக்கும் போட்டியில் இருக்கும் மறுகையில் விஐ நிறுவனம் சில சுவாரசியமான வேலைகளை செய்வது - கேட்க நன்றாக இருக்கிறது.
குறிப்பிடத்தக்க வகையில் அடுத்ததாக வரும் விலை உயர்வு ஆனது தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.300 என்கிற ஏஆர்பியு என்கிற இலக்கை அடைய உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எடுத்துக்காட்டுக்கு ஏர்டெல் நிறுவனமானது, அதன்கட்ட ரீசார்ஜ் விலை உயர்வின் போது சுமார் 10-15% விலை உயர்வை அறிவிக்கும் பட்சத்தில், அந்நிறுவனத்தின் ஏஆர்பியு -அதாவது ஒரு பயனருக்கான சராசரி வருவாய் ஆனது ரூ.300 ஐ தொடும். இதுதான் ஏர்டெல் நிறுவனத்தின் இலக்காகும். இந்த ஆட்டத்திற்கு இப்போதைக்கு வோடபோன் ஐடியா வராது!


Click it and Unblock the Notifications