ஜூன்.11 குறிச்சாச்சு.. Vi சிம் இருக்கா.. இனிமே 5ஜி-க்கு மாறுவீங்க.. ரூ.299 போதும்.. அன்லிமிடெட் டேட்டா வருது!
வோடபோன் ஐடியா (Vodafone Idea) கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி சேவைகள் (Unlimited 5G Services) தொடங்கப்பட்டாலும், டெல்லி என்சிஆர், பாட்னா, மும்பை, சண்டிகர் போன்ற வட மாநிலங்களிலேயே முதலில் கிடைத்தன. சென்னை, பெங்களூரூ போன்ற தென் மாநிலங்களில் தொடங்கப்படாமல், இருந்தது. ஐபிஎல் போட்டிகளின் போது, சென்னை, பெங்களூரூ, ஹைதராபாத் போன்ற நகரங்கள் இருக்கும் கிரிக்கெட் ஸ்டேடியங்களில் மட்டும் 5ஜி சேவை கொடுக்கப்பட்டது.
ஆனால், பெங்களூரூ நகரத்தில் ஜூன் 11ஆம் தேதி முதல் அன்லிமிடெட் 5ஜி சேவை தொடங்கப்பட இருக்கிறது. பெங்களூரூவில் இருக்கும் ஒட்டுமொத்த வோடபோன் ஐடியா கஸ்டமர்களுக்கும் இனிமேல் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சேவை மற்றும் அதற்காக திட்டங்கள் கிடைக்க இருக்கின்றன. பெங்களூருவுக்கு வந்துவிட்டதால், அடுத்து சென்னையில் தொடங்க வாய்ப்புள்ளது.

இதனால் வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் குஷியாக இருக்கின்றனர். ஏற்கனவே, 5ஜி சேவை தொடங்கப்பட்ட மும்பை, பாட்னா, டெல்லி போன்ற நகரங்களில் கிடைத்த அதே விலைக்கே பெங்களூருவிலும் அன்லிமிடெட் 5ஜி திட்டங்கள் (Unlimited 5G Plans) கிடைக்க இருக்கின்றன. ஆகவே, அதில் மலிவான விலை முதல் அதிக சலுகை வரையில் கிடைக்கும் திட்டங்களை பார்ப்போம்.
விஐ ரூ 299 திட்ட விவரங்கள் (Vi Rs 299 Plan Details): வோடபோன் ஐடியாவில் ஆரம்ப விலைக்கு கிடைக்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கொண்ட திட்டமாக இது இருக்கிறது. ஆகவே, 28 நாட்கள் வேலிடிட்டியுடன் தொடங்குகிறது. இந்த வேலிடிட்டி முழுவதும் ட்ரூலி அன்லிமிடெட் 5ஜி டேட்டா கொடுக்கப்படும். அதேபோல மற்ற சலுகைகளும் கிடைக்கின்றன.
ஆகவே, 5ஜி டேட்டாவுக்கு பிறகு நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். மேலும், 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் மற்றும் தினசரிக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது. வீக்கெண்ட் டேட்டா ரோலோவர், அன்லிமிடெட் நைட் டேட்டா, டேட்டா டிலைட்ஸ் போன்ற சலுகைகள் இதில் கிடைக்காது.
இந்த கூடுதல் டேட்டா சலுகை வேண்டுமானால், வோடபோன் ஐடியா ரூ 365 திட்டத்துக்கு செல்ல வேண்டும். இதில் வழக்கமாக கிடைக்கும் தினசரி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா போன்ற சலுகைகள் மட்டுமல்லாமல், 12 மணி நேர அன்லிமிடெட் டேட்டா, வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் உள்ளிட்ட டேட்டா சலுகைகளும் கிடைக்கிறது.
விஐ ரூ 365 திட்ட விவரங்கள் (Vi Rs 365 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 28 நாட்களுக்கு வேலிடிட்டியில் அதிகப்படியான டேட்டா சலுகைகள் கொடுக்கப்படுகிறது. ஆகவே, நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகைகளை பெற்று கொள்ளலாம். இதுபோக கூடுதல் டேட்டா சலுகைகள் இதில் கிடைக்கின்றன.
ஆகவே, நள்ளிரவு 12 மணி முதல் மதியம் 12 மணி வரையில் மொத்தமாக 12 மணி நேரங்களுக்கு அன்லிமிடெட் டேட்டாவை பெற்று கொள்ளலாம். மேலும், வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) மற்றும் டேட்டா டிலைட்ஸ் (Data Delight) போன்ற டேட்டா சலுகைகள் கிடைக்கிறது. இந்த டேட்டா சலுகைகள் போக வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் வருகிறது.
இதுபோன்ற பல்வேறு அன்லிமிடெட் 5ஜி டேட்டா கொண்ட திட்டங்களை வோடபோன் ஐடியா கொடுக்கிறது. ஜியோ, ஏர்டெல்லை ஒப்பிடுகையில் குறையில்லாத டேட்டா சலுகைகளே கிடைக்கின்றன. 5ஜி டேட்டா வேகத்தை பொறுத்து கஸ்டமர்களிடையே வரவேற்பு பெறும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் விரைவில் தொடங்கப்பட வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








