சின்ராச இனி கையில பிடிக்க முடியாது.. அடுத்து 23 நகரங்கள்.. மதுரைக்கு வருது விஐ 5G சேவை.. எந்தெந்த நகரங்கள்?
வோடபோன் ஐடியா 5ஜி சேவைகள் (Vodafone Idea 5G Services) மேலும் 23 நகரங்களில் தொடங்க இருப்பதையும், அது எந்தெந்த நகரங்கள் என்பதையும் அந்த நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஏற்கனவே பெங்களூரூ, மும்பை உள்ளிட்ட 5 நகரங்களில் வோடபோன் ஐடியா 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுவிட்டன. இப்போது, 2ஆம் கட்ட 5ஜி விரிவாக்கத்துக்கு வோடபோன் ஐடியா ரெடியாகி விட்டது. இதனால், விஐ கஸ்டமர்கள் படு குஷியில் இருக்கின்றனர். இது எந்தெந்த நகரங்கள் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி சேவைகளை தொடங்கி ஆண்டு கணக்கில் ஆகிவிட்டது. ஆனால், போட்டி நிறுவனமான வோடபோன் ஐடியா கடந்த சில மாதங்களுக்கு முன்பில் இருந்தே 5ஜி சேவையை முழு வீச்சில் தொடங்கி வருகிறது. மும்பை, டெல்லி என்சிஆர், பெங்களூரு, சண்டிகர் மற்றும் பாட்னா ஆகிய நகரங்களில் ஏற்கனவே 5ஜி சேவைகளை தொடங்கிவிட்டது.

இது முதலாவது கட்டமாக இருக்கிறது. இப்போது, 2ஆவது கட்ட 5ஜி விரிவாக்கம் (Second Phase 5G Expansion) குறித்து வோடபோன் ஐடியா நிறுவனமானது, அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இதில் தமிழ்நாட்டின் மதுரை நகரம் உள்பட 23 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. ஆகவே, அங்கிருக்கும் வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் முதல்முறையாக 5ஜி சேவையை பயன்படுத்த இருக்கின்றனர்.
வோடபோன் ஐடியா 5ஜி கிடைக்கவுள்ள புது நகரங்கள்:
அகமதாபாத், ஆக்ரா, அவுரங்காபாத், கோழிக்கோடு, கொச்சின், டேராடூன், இந்தூர், ஜெய்ப்பூர், கொல்கத்தா, லக்னோ, மதுரை, மலப்புரம், மீரட், நாக்பூர், நாசிக், புனே, ராஜ்கோட், சோனேபட், சூரத், சிலிகுரி, திருவனந்தபுரம், வதோதரா மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் தொடங்கப்பட இருக்கிறது. இதில தமிழ்நாட்டில் மதுரை மட்டும் இடம்பெற்றுள்ளது.
அடுதடுத்த விரிவாக்கத்தில் கோயம்புத்தூர், சேலம், திருச்சி போன்ற மற்ற முக்கிய நகரங்களும் இடம் பெற வாய்ப்புள்ளது. அதேபோல சென்னையில் முழு வீச்சில் தொடங்கப்பட வாய்ப்புள்ளது. ஏனென்றால், சென்னையில் டெஸ்டிங் பேஸ் ஏற்கனவே தொடங்கிவிட்டது. அதேபோல நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளின் போது, எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் 5ஜி சேவை கிடைத்தது.

மேற்கண்ட நகரங்களில் 5ஜி சேவைகள் விரிவுபடுத்த தயார் நிலையில் இருந்தாலும், வோடபோன் ஐடியா நிறுவனமானது, 5ஜி ஸ்பெக்ட்ரம் பெற்றுள்ள 17 சர்க்கிள்களில் மட்டுமே முதலில் தொடங்க இருக்கிறது. ஆகவே, ஒட்டுமொத்த சிட்டிகளிலும் தொடங்கப்படாமல், படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்பதை இது உறுதி செய்கிறது. ஓரிரு மாதங்களில் முழுவதும் தொடங்கப்படலாம்.
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்களானது, அவற்றின் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டதில் இருந்து இன்று வரையில் அன்லிமிடெட் 5ஜி சேவையை இலவசமாகவே கொடுத்து வருகின்றன. குறிப்பிட்ட விலைக்கு மேல் கிடைக்கும் திட்டங்களில் இந்த அன்லிமிடெட் 5ஜி சேவைகளை கொடுக்கின்றன. இதையே வோடபோன் ஐடியாவும் பின்பற்ற இருக்கிறது.
வோடபோன் ஐடியா 5ஜி திட்டங்கள்:
வோடபோன் ஐடியா 5ஜி சேவை கிடைக்கின்ற மும்பை, டெல்லி என்சிஆர், பெங்களூரூ, சண்டிகர், பாட்னா போன்ற நகரங்களில் ரூ.299 விலை கொண்ட மற்றும் அதற்கு மேல் விலை கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா சேவை கொடுக்கப்படுகிறது. இது தினசரி டேட்டா போக இலவசமாக கிடைக்கிறது.
ஆனால், இதற்கு கேப்டு (Capped) இருக்கிறது. அதாவது, ஜியோவில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுக்கு லிமிட் கிடையாது. ஆனால், வோடபோன் ஐடியாவில் ஒரு நாளுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவின் கீழ் 300 ஜிபி டேட்டாவை மட்டுமே பயன்படுத்தி கொள்ள முடியும். அதற்கு பிறகு 4ஜி டேட்டாவுக்கு மாற வேண்டி இருக்கும். இருப்பினும், இந்த 300 ஜிபி போதுமானதாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications