Home
News

சென்னைக்கு குட் நியூஸ் சொன்ன Vodafone Idea.. வருகிறது 5ஜி சேவை.. எப்போது முதல் தெரியுமா?

ஏர்டெல், ஜியோ நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கி வருகிறது வோடபோன் ஐடியா. குறிப்பாக வீக்கெண்ட் டேட்டா (Vodafone Idea) ரோல்ஓவர், இரவு நேர இலவச டேட்டா போன்ற சிறந்த சலுகைகள் வழங்குகிறது வோடபோன் ஐடியா நிறுவனம். எனவே தான் இந்நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்நிலையில் வோடபோன் ஐடியா விரைவில் இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது மார்ச் 2025 முதல் அதன் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு 5ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக 2024 இறுதியில் வோடபோன் ஐடியா 5ஜி சோதனை செய்யத் தொடங்கியது. இந்நிலையில் இந்நிறுவனம் விரைவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

சென்னைக்கு குட் நியூஸ் சொன்ன Vodafone Idea.. வருகிறது 5ஜி சேவை..

சென்னையில் வோடபோன் ஐடியா 5ஜி சேவை

வோடபோன் ஐடியா இந்த வார தொடக்கத்தில் 2024 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டு அறிக்கையை அறிவிக்கும் போது, ​​ அடுத்த மாதம் மும்பையில் (Mumbai) 5G சேவை வெளியிடப்படும் என்று கூறியது. அதேபோல் இந்நிறுவனம் தனது 5ஜி சேவையை வரும் 2025 ஏப்ரல் மாதம் முதல் டெல்லி (Delhi), பெங்களூரு (Bengaluru), சென்னை (Chennai) மற்றும் பாட்னா (Patna) உள்ளிட்ட பல நகரங்களுக்கு விரிவுபடுத்தும் என்று தெரிவித்துள்ளது.

விரைவில் வோடபோன் ஐடியா நிறுவனம் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளதால் ஏர்டெல், ஜியோ நிறுவனங்களுக்கு மிகப்பெரிய போட்டியாக அமையும். அதேசமயம் பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் நாடு முழுவதும் 4ஜி சேவை அறிமுகம் செய்ய உள்ளது. பின்பு இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். மேலும் வோடபோன் ஐடியா நிறுவனம் வழங்கும் 2 வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தைப் பார்க்கலாம்.

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.3599 திட்டம் (Vodafone Idea Rs.3599 Plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள்
(Roaming Voice Calls) சலுகை இதில் உள்ளது.

மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் சலுகை, டேட்டா டிலைட்ஸ் போன்ற சலுகைகள் வோடபோன் ஐடியா ரூ.3599 திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர இந்த திட்டத்தில் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் கிடைத்த அன்லிமிடெட் நைட் டேட்டா (Unlimited Night Data) சலுகையானது, இப்போது 6 மணி நேரம் கூடுதலாக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, மதியம் 12 மணி வரையில் நீங்கள் ப்ரீ டேட்டாவை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னைக்கு குட் நியூஸ் சொன்ன Vodafone Idea.. வருகிறது 5ஜி சேவை..

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.3699 திட்டம் (Vodafone Idea Rs.3699 Plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இதில் கிடைக்கும்

ஒரு வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (disney + Hotstar) சந்தா வழங்குகிறது வோடபோன் ஐடியா ரூ.3699 திட்டம். பின்பு எப்போதும்போல இரவு நேர இலவச டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ், வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் சலுகை, டேட்டா டிலைட்ஸ் போன்ற சலுகைகள் இந்த வோடபோன் ஐடியா திட்டத்தில் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea to launch 5G service in Chennai and Bengaluru in April 2025: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X