Vodafone Idea போட்டப்போடு.. எதிர்பார்த்த 5G சேவை.. சென்னை உள்பட 11 நகரங்கள்.. 4 சர்க்கிள்கள்.. ஆனால், ஒன்னு?
வோடபோன் ஐடியா (Vodafone Idea) கஸ்டமர்கள் ஒட்டுமொத்த பேரும் அறக்கப் பறக்கும்படி 5ஜி சேவை குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இப்போது, சென்னை உள்பட 11 நகரங்களில் வோடபோன் ஐடியாவின் 5ஜி சேவைகள் (Vodafone Idea 5G Services) கிடைக்கின்றன. ஆனால், இந்த சேவை ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு கிரிக்கெட் ஸ்டேடியங்களிலும் மட்டுமே தொடங்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் கிடைக்காது. இருப்பினும், இந்த மாதத்துக்குள் பல்வேறு மாநிலங்களை உள்ளடக்கிய நான்கு புதிய சர்க்கிள்களில் வோடபோன் ஐடியா 5ஜி சேவை தொடங்கப்பட இருக்கிறது.
வோடபோன் ஐடியா 5ஜி சேவைகள்!
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 5ஜி சேவைகள் மற்றும் திட்டங்கள் ஏற்கனவே மும்பை சர்க்கிளில் இருக்கும் கஸ்டமர்களுக்கு தொடங்கப்பட்டுவிட்டது. மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்ட இந்த சேவை அடுத்தடுத்த சர்க்கிள்களில் தொடங்கப்படும் என்று வோடபோன் ஐடியா நிறுவனம் அறிவித்தது. அந்த வரிசையில், நான்கு புதிய சர்க்கிள்கள் இணைந்துள்ளன.

அதாவது, மும்பைக்கு அடுத்து பீகார், டெல்லி, கர்நாடகா மற்றும் பஞ்சாப் சர்க்கிள்களில் வோடபோன் ஐடியா 5ஜி சேவைகள் தொடங்கப்பட இருக்கின்றன. இந்த மாதத்துக்குள் இந்த சர்க்கிள்களில் தொடங்கப்படும் என்று வோடபோன் ஐடியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுபோக டி20 போட்டிகளை முன்னிட்டு நாடு முழுவதும் இருக்கும் கிரிக்கெட் ஸ்டேடியங்களில் 5ஜி சேவையை தொடங்கப்பட்டு இருக்கிறது.
ஆகவே, அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், சென்னை, டெல்லி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் இருக்கும் கிரிக்கெட் ஸ்டேடியங்களில் வோடபோன் ஐடியா 5ஜி சேவைகள் கிடைக்க இருக்கின்றன. இதில் சென்னையில் இருக்கும் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் (M. A. Chidambaram Stadium) அடங்கும்.

எந்தெந்த ஸ்டேடியங்களில் கிடைக்கிறது?
சின்னசாமி ஸ்டேடியம் (பெங்களூரு), டாக்டர் ஒய்.எஸ்.ஆர் ஏசிஏ-விடிசிஏ ஸ்டேடியம் (விசாகப்பட்டினம்), வான்கடே மைதானம் (மும்பை), அருண் ஜெட்லி ஸ்டேடியம் (டெல்லி), ஈடன் கார்டன்ஸ் (கொல்கத்தா), நமோ ஸ்டேடியம் (அகமதாபாத்), சவாய் மான்சிங் ஸ்டேடியம் (ஜெய்ப்பூர்), ஏகானா ஸ்டேடியம் (லக்னோ) ஆகியவற்றில் கிடைக்கிறது.
மேலும், மகாராஜா யாதவிந்திர சிங் கிரிக்கெட் ஸ்டேடியம் (சண்டிகர்) மற்றும் ராஜீவ் காந்தி ஸ்டேடியம் (ஹைதராபாத்) ஆகியவற்றிலும் வோடபோன் ஐடியா 5ஜி சேவைகள் கிடைக்கிறது. ஆகவே, ஐபிஎல் போட்டிகள் முடியும் வரையில், மேற்கண்ட ஸ்டேடியங்களில் வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் (Vodafone Idea Customer) 5ஜி சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.

எந்தெந்த பகுதிகளில் விரைவில் கிடைக்கும்?
டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, பஞ்சாப், கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மேற்கு, உத்தர பிரதேசம் கிழக்கு, தெலங்கானா, பீகார், கேரளா, ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளில் கிடைக்க இருக்கிறது. இதில் குறிப்பிட்ட ஏரியாக்களில் தொடங்கப்பட இருக்கிறது.
அதாவது, டெல்லியின் ஓக்லா இண்டஸ்ட்ரியல் ஏரியா ஃபேஸ் 2, இந்தியா கேட் மற்றும் பிரகதி மைதானம் ஆகிய ஏரியாக்களில் வோடபோன் ஐடியா 5ஜி சேவை முதலில் கிடைக்கும். மகாராஷ்டிராகவின் மும்பையில் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டது. ஆகவே, வோர்லி மற்றும் மரோல் (அந்தேரி கிழக்கு) ஆகிய பகுதிகளில் இப்போது கிடைக்கிறது.
ஆனால், புனேவில் இருக்கும் சிவாஜி நகரில் கிடைக்க இருக்கிறது. குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் இருக்கும் திவ்யா பாஸ்கர், கார்ப்பரேட் சாலை, மகர்பா பகுதிகளில் வோடபோன் ஐடியா 5ஜி சேவைகள் கிடைக்க இருக்கின்றன. அதேபோல பிரஹலாத்நகர் பகுதியிலும் கிடைக்க இருக்கிறது. தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே முதலில் தொடங்க இருக்கிறது.

ஆகவே, பெருங்குடி மற்றும் நெசப்பாக்கம் ஏரியாக்களில் முதலில் கிடைக்க இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் ஜலந்தர் பகுதியில் உள்ள கோட் கலனில் வோடபோன் ஐடியா 5ஜி சேவை கிடைக்க இருக்கிறது. இந்த சேவை ஏப்ரல் மாதத்துக்குள் தொடங்கப்பட இருக்கிறது. அதேபோல கர்நாடகாவின் பெங்களூருவில் இருக்கும் டெய்ரி சர்க்கிள் ஏரியாவில் தொடங்கப்பட இருக்கிறது.
இது மட்டுமல்லாமல், அதனை சுற்றி இருக்கும் ஏரிக்காகளில் வோடபோன் ஐடியா 5ஜி சேவை இந்த மாதத்தில் தொடங்கப்பட இருக்கிறது. மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் இந்தூரின் பர்தேஷிபுராவில் வோடபோன் ஐடியா 5ஜி சேவைகள் கிடைக்க இருக்கின்றன. உத்தர பிரதேசம் (மேற்கு) பகுதியில் இருக்கும் ஆக்ராவுக்கு அருகில் ஃபதேஹாபாத் சாலையில் வர இருக்கிறது.
உத்தர பிரதேசம் (கிழக்கு) பகுதியில் இருக்கும் லக்னோவின் விபூதி காண்ட், கோமதி நகரில் வோடபோன் ஐடியா 5ஜி சேவைகள் கிடைக்க இருக்கின்றன. தெலங்கானா மாநிலத்தின் முக்கிய சிட்டியான ஹைதராபாத்தில் கிடைக்க இருக்கிறது. இந்த ஹைதராபாத்தில் இருக்கும் ஐடா உபால் மற்றும் ரங்கா ரெட்டி பகுதிகளில் வோடபோன் ஐடியா 5ஜி சேவை கிடைக்க இருக்கிறது.
பீகார் மாநிலத்தின் பாட்னா சிட்டியில் இருக்கும் அனிஷாபாத் மற்றும் கோலம்பரில் வோடபோன் ஐடியா 5ஜி சேவை கிடைக்க போகிறது. தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவின் திருக்காக்கரையில் இருக்கும் காக்கநாட்டில் வோடபோன் ஐடியா 5ஜி சேவை விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.
ஹரியானா மாநிலத்தின் கர்னால் சிட்டியில் இருக்கும் எச்எஸ்ஐஐசிடி (HSIIDC), இன்டஸ்ட்ரியல் ஏரியா மற்றும் செக்டார்-3 (Sector-3) பகுதிகளில் கிடைக்க இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் சிட்டியில் இருக்கும் மானசரோவர், கேலக்ஸி சினிமா மற்றும் ஆர்ஐஐசிஓ (RIICO), இன்டஸ்ட்ரியல் ஏரியாவில் வோடபோன் ஐடியா 5ஜி சேவை கிடைக்க இருக்கிறது.
மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா சிட்டியில் இருக்கும் சால்ட் லேக்கின் செக்டார் ஐந்து, சிலிகுரியில் இருக்கும் சிட்டி பிளாசா, செவோக் சாலை ஆகிய பகுதிகளில் வோடபோன் ஐடியா 5ஜி சேவை கிடைக்க இருக்கிறது. இந்த பகுதிகளில் அடுத்தடுத்து வோடபோன் ஐடியா 5ஜி சேவைகள் கிடைக்க இருக்கின்றன. அடுத்த சில மாதங்களில் பெரும்பாலான பகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
வோடபோன் ஐடியா 5ஜி திட்டங்கள் எப்படி?
மும்பை சர்க்கிளில் மட்டுமே வோடபோன் ஐடியா 5ஜி சேவை கிடைப்பதால், அங்கு கிடைக்கும் திட்டத்தை மட்டுமே இப்போது தெரிந்து கொள்ள முடியும். இதே விலை மற்ற சர்க்கிள்களிலும் இருக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதிதான். ஆகவே, அதை தெரிந்து கொள்வோம். ரூ.299 முதல் வோடபோன் ஐடியா 5ஜி திட்டங்கள் (Vodafone Idea 5G Plan) தொடங்குகின்றன.
இதில் 28 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கின்றன. இதுபோக அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கிறது. இந்த 5ஜி டேட்டாவுக்கு 300 ஜிபி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, மாதத்துக்கு 300 ஜிபி வரையில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும். இது லிமிட்டாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications