புது சிம் கார்டு வழங்க தொடங்கிய Vodafone.. ஆனா எல்லோருக்கும் இல்ல.. ஏன்? யாருக்கு எல்லாம் கிடைக்கும்?
ரிலையன்ஸ் ஜியோ (Jio) மற்றும் பார்தி ஏர்டெல் (Airtel) என்கிற 2 டெலிகாம் ஜாம்பவான்களுக்கு இடையே மாட்டிக்கொண்டு, சிக்கித்தவிக்கும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமானது, தன்வசம் இருக்கும் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள.. என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க முடியுமோ, அதை அனைத்தையும் செய்து வருகிறது.
ரிலையன்ஸ் ஜியோவும், பார்தி ஏர்டெல்லும் "கிட்டத்தட்ட" இந்தியா முழுவதுமாக தத்தம் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்துவிட்ட நிலைப்பாட்டில், வோடபோன் ஐடியாவானது தனது 5ஜி நெர்வொர்க்கை (5G Network) அறிமுகம் செய்ய இன்னும் ஆறு முதல் ஏழு மாதங்கள் ஆகும் என்று அறிவித்துள்ளது.

ஏற்கனவே நிதி சிக்கல், ஜியோ மற்றும் ஏர்டெல் திட்டங்களின் விலை நிர்ணயம் மற்றும் நன்மைகளுடன் போட்டிபோட முடியாத சூழ்நிலை.. போன்ற காரணங்கள் வோடபோன் ஐடியா நிறுவனமானது மெல்ல மெல்ல தனது வாடிக்கையார்களை இழந்து வருகிறது. இதற்கிடையில் "மேலும் சில வாடிக்கையாளர்ளை வெளியேற்றும்" வேலை ஒன்றை வோடாபோன் செய்துள்ளது.
இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இசிம்-களை (eSIM) வழங்க தொடங்கியுள்ளது. ஆனால் இது குறிப்பிட்ட தொலைத்தொடர்பு வட்டங்களில் (Telecom Circles) உள்ள ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கு (Prepaid Customers) மட்டுமே கிடைக்கிறது. அதாவது இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான விஐ, இசிம் என்று வரும்போது தனது போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அதிக முன்னுரிமையை அளிக்கிறது.

வோடாபோனின் இந்த நடவடிக்கை மேலும் சில ப்ரீபெய்ட் கஸ்டமர்களை இழக்க வழிவகுக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஏனென்றால் இந்தியாவில் இசிம் சந்தை ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது; ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் (Flagship Smartphones) மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களுக்கு மட்டுமான ஆதரவை வழங்குகிறது. இந்த நேரத்தில் வரையறுக்கப்பட்ட வட்டங்களில் உள்ள சந்தாதாரர்களுக்கு மட்டுமே இசிம் கொடுப்பது, சந்தாதாரர் இழப்புக்கு வழிவகுக்கும்.
யாருக்கெல்லாம் வோடாபோன் ஐடியா இசிம் கார்டு கிடைக்கும்? முதலில், நீங்கள் வைத்திருக்கும் ஸ்மார்ட்போனில் விஐ இசிம் கார்டிற்கான ஆதரவு (eSIM Card Support) உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதை செய்ய, நீங்கள் விஐ கஸ்டமர் கேர் குழுவை தொடர்புகொள்ளலாம் அல்லது நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று, FAQ (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - Frequently asked questions) பிரிவில் உள்ள "ஆதரிக்கப்படும் டிவைஸ்களின்) பட்டியலை பார்க்கவும்.

இப்போதைக்கு மும்பை, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாபில் உள்ள ப்ரீபெய்டு சந்தாதாரர்கள் மட்டுமே விஐ இசிம் கார்டுகளை பெற முடியும். வோடபோன் ஐடியா நிறுவனத்தின் இணையதளத்தின்படி, பிற வட்டங்களில் உள்ள ப்ரீபெய்டு பயனர்கள் இசிம் கார்டுகளை பெற முடியாது. இந்த போக்கு எதிர்காலத்தில் மாறலாம்.
ஆனால் போஸ்ட்பெய்டு சந்தாதாரர்களை பொறுத்தவரை, பின்வரும் வட்டங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் விஐ இசிம்கார்டுகளை பெறலாம்: சென்னை, தமிழ்நாடு, மும்பை, டெல்லி, குஜராத், பஞ்சாப், மகாராஷ்டிரா மற்றும் கோவா, உ.பி (கிழக்கு), கொல்கத்தா, கர்நாடகா, கேரளா, வங்காளத்தின் இதர பகுதிகள், ஆந்திரா பிரதேசம் & தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹரியானா, உ.பி (மேற்கு) மற்றும் பீகார்.
ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமல்ல, உங்கள் ஸ்மார்ட் வாட்ச்களுக்கும் கூட விஐ நிறுவனத்திடம் இருந்து இசிம் கார்டுகளை பெறலாம். இப்போதைக்கு ஆப்பிள் மற்றும் சாம்சங் வாட்ச்கள் (Apple and Samsug Watches) மட்டுமே இதற்கான ஆதரவை வழங்குகின்றன. இசிம் காரட்டை பயன்படுத்த நீங்கள் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 அல்லது அதற்கு பிந்தைய வெர்ஷன் மற்றும் ஐபோன் 6எஸ் அல்லது அதற்குப் பிந்தைய மாடலை வைத்திருக்க வேண்டும்.
சாதாரண சிம் கார்ட்டை இசிம் ஆக மாற்றுவது எப்படி? உங்களிடம் இருக்கும் "வழக்கமான" சிம் கார்ட்டைஇசிம் ஆக மாற்ற விரும்பினால் சரி அல்லது புதிய இசிம் ஒன்றை வாங்க விரும்பினாலும் சரி, உங்களுக்கு அருகிலுள்ள விஐ ஸ்டோர் அல்லது வோடபோன் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை குழுவை தொடர்புகொள்ளவும்.


Click it and Unblock the Notifications