Home
News

உனக்கு ஒரு கும்பிடு.. உன் சேவைக்கு ஒரு கும்பிடு.. Vodafone பேஸிக் பிளான் நீக்கம்.. இனி சிம் ஆக்டிவ்-ஆ வைக்க?

ரிலையன்ஸ் ஜியோ (Jio) மற்றும் பார்தி ஏர்டெல் (Airtel) நிறுவனங்கள் செய்ததை போலவே, வி (Vi) என்று சுருக்கமாக அழைக்கப்படும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமும் தனது பேஸிக் ரீசார்ஜ் ஆன ரூ.249 ப்ரீபெய்ட் பிளானை "இரவோடு இரவாக" நீக்கி உள்ளது.

உடனே "உனக்கு ஒரு கும்பிடு.. உன் சேவைக்கு ஒரு கும்பிடு" என்று வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் கொந்தளிக்க வேண்டாம். ஏனென்றால் ரூ.249 ஆனது வி சேவையின் கீழ் கிடைக்கும் ஒரு பேஸிக் ரீசார்ஜ் தான்; ஆனால் இது மட்டுமே ஒரே ஒரு பேஸிக் ரீசார்ஜ் அல்ல.

Vodafone பேஸிக் பிளான் நீக்கம்.. இனி சிம் ஆக்டிவ்-ஆ வைக்க?

அதாவது உங்களுக்கு ரூ.249-ஐ போன்ற மலிவான பேஸிக் ரீசார்ஜ் திட்டங்கள் கிடைக்கும். அதை கொண்டு உங்கள் வோடாபோன் ஐடியா சிம் கார்ட்டை ஆக்டிவ் ஆக வைத்து கொள்ள முடியும். ஆனால் ரூ.249 திட்டத்தை போல டெய்லி 1ஜிபி டேட்டா கிடைக்காமல் போகலாம்.

உதாரணத்திற்கு ரூ.249 நீக்கப்பட்டாலும் கூட இன்னுமும் ரூ.239 திட்டத்தை வழங்குகிறது இது 28 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. ஆனால் இது டெய்லி 1ஜிபி டேட்டாவை வழங்காது. மாறாக மொத்தம் 2ஜிபி அளவிலான டேட்டாவை கொடுக்கும். ரூ.239-ன் மற்ற நன்மைகளை பொறுத்தவரை ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா, வரம்பற்ற வாய்ஸ் காலிங் மற்றும் 300 எஸ்எம்எஸ்களும் கிடைக்கும்.

நீக்கப்பட்டுள்ள ரூ.249 திட்டத்தின் நன்மைகளை பொறுத்தவரை இது டெய்லி 1 ஜிபி டேட்டாவுடன் வந்தது. மேலும் இந்த திட்டம் டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை வழங்கியது. டெய்லி லிமிட் (FUP) தீர்ந்ததும் இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 64 கேபிபிஎஸ் ஆக குறையும்.

ரூ.249-ன் நீக்கமானது - வோடபோன் ஐடியா நிறுவனமானது அதன் பயனர்களை 1.5 ஜிபி டெய்லி டேட்டா அல்லது அதற்கு மேற்பட்டவற்றை வழங்கும் அதிக விலை திட்டங்களுடன் ரீசார்ஜ் செய்ய தூண்டும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இதுதான் வி நிறுவனத்திற்கும் தேவை. இதுதான் வருவாயை அதிகரிப்பதற்கான ஒரே வழியும் கூட!

குறிப்பாக அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் ஆப்ரேட்டர் ஆன பிஎஸ்என்எல் நிறுவனம் ஆனது "தீயாக வேலை செய்து கொண்டிருக்கும்" இந்த நேரத்தில், வோடாபோன் ஐடியாவானது எதையாவது செய்து வருவாயை அதிகரித்தே தீரவேண்டும்; இந்திய டெலிகாம் சந்தையில் நீடிக்க வேண்டும் என்கிற கட்டத்தில் உள்ளது.

பிஎஸ்என்எல் ஆனது பான் இந்தியா 4ஜி அறிமுகம், பான் இந்தியா இசிம் சேவை, சாட்காம் சேவை, வைஃபை காலிங் சேவையின் விரிவாக்கம் என அடுக்கடுக்காக பல மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் மேற்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அதன் வைஃபை காலிங் (BSNL Wi-Fi Calling) சேவைகளை அறிமுகப்படுத்தி இருந்தது.

வைஃபை காலிங் சேவையானது வோவைஃபை காலிங் (BSNL VoWi-Fi Calling) என்றும் அழைக்கப்படுகிறது.
அறியாதோர்களுக்கு வோவைஃபை என்றால் வாய்ஸ் ஓவர் வை-ஃபை காலிங் (Voice over Wi-Fi Calling) என்று அர்த்தம். இது வழக்கமான செல்லுலார் நெட்வொர்க்கிற்கு பதிலாக வைஃபை நெட்வொர்க்கில் அழைப்புகளை செய்ய மற்றும் பெற அனுமதிக்கும் ஒரு அம்சமாகும்.

இது மோசமான மொபைல் சிக்னல் அல்லது நெட்வொர்க் இல்லாத பகுதிகளில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த சேவை - உங்களுடைய தற்போதைய மொபைல் நம்பர் மற்றும் உங்கள் டெலிகாம் நிறுவனத்தின் நிலையான அழைப்பு கட்டணங்களின் கீழ் வேலை செய்யும். இது உங்கள் இண்டர்நெட் கனெக்ஷனை பயன்படுத்தி அழைப்பை 'ரூட்' செய்யும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Silently Removed Its Rs 249 Prepaid Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X