Home
News

ஒருவழியாக விலையை உயர்த்திய வோடபோன் ஐடியா.! அடுத்தது ஜியோ, ஏர்டெல்.!

ஏர்டெல் நிறுவனம் தனது திட்டங்களின் விலையை உயர்த்த திட்டமிட்டிருந்தது, ஆனால் அதற்குள் வோடபோன் ஐடியா தனது போஸ்ட்பெய்ட திட்டங்களின் மீது கட்டண உயர்வை அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

இந்தியாவின் மூன்றாவது பெரிய

அதன்படி இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத் தொடர்பு நிறுவனம் என்று கூறப்படும் வி(வோடபோன் ஐடியா) அதன் இரண்டு
போஸ்ட்பெய்ட் திட்டங்களின் விலையை சத்தமில்லாமல் ரூ.50 வரை அதிகரித்துள்ளது. மேலும் இந்த புதிய கட்டணங்கள் இப்போது
நடைமுறையில் உள்ளன.

வோடபோன் ஐடியா

வோடபோன் ஐடியா வலைத்தளத்தில் வெளிவந்த தகவலின்படி ரூ.598 திட்டம் இப்போது ரூ.649-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. அதேபோன்று ரூ.749 திட்டத்தின் விலை ரூ.799-ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த இரண்டு திட்டங்களும் வோடபோன் ஐடியாவின் ரெட் பேமிலி திட்டங்களின் ஒரு பகுதியாகும் தனிப்பட்ட திட்டங்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்த விலை உயர்வு வோடபோன் ஐடியா அத

அதேபோல் இந்த விலை உயர்வு வோடபோன் ஐடியா அதன் ரெட் பேமிலி திட்டங்களை வழங்கும் அனைத்து வட்டங்களிலும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. வோடபோன் ஐடியா நிறுவனம் தற்போது வழங்கும் எட்டு போஸ்ட்பெய்ட் திட்டங்களில் இரண்டு திட்டங்களின் விலையை அதிகரித்துள்ளது. அதன்படி இந்த கட்டண உயர்வு ரூ.598 மற்றும் ரூ.749 திட்டங்களை மட்டும் பாதிக்கிறது. குறிப்பாகஇந்த திட்டங்களின் புதிய விலைகள் ரூ.649 மற்றும் ரூ.799 ஆகும்.

வோடபோன் ஐடியா ரூ.649 திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.649 திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.649 திட்டம் ஆனது வரம்பற்ற குரல் அழைப்புகள், 80 ஜிபி வரை டேட்டா மற்றும் மாதத்திற்கு 100 இலவச எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டம் இரண்டு ஆட்-ஆன்களை (இணைப்புகளை) ஆதரிக்கிறது. பின்பு இந்த திட்டத்தில்1 வருட அமேசான் ப்ரைம், ஜீ 5 மற்றும் வி மூவிஸ் & டிவி சந்தாக்களும் அணுக கிடைக்கும்.

 வோடபோன் ஐடியா ரூ.799 திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.799 திட்டம்

அதேபோல் வோடபோன் ஐடியா ரூ.799 திட்டம் ஆனது வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், 120ஜிபி வரை டேட்டா, மாதத்திற்கு 100 இலவச எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளை வழங்குகிறது. பின்பு இந்த திட்டம் மூன்று ஆட்-ஆன்களை (இணைப்புகளை) ஆதரிக்கிறது. பின்பு இந்த திட்டத்தில்1 வருட அமேசான் ப்ரைம், ஜீ 5 மற்றும் வி மூவிஸ் & டிவி சந்தாக்களும் அணுக கிடைக்கும்.

வோடபோன் ஐடியா

கடந்த செப்டம்பர் மாதம் வோடபோன் ஐடியாவின் மறுபெயரிடலின் போது, வோடபோன் ஐடியாவின் எம்.டி மற்றும் தலைமை நிர்வாகஅதிகாரி ரவீந்தர் தக்கார், விலை உயர்வு சார்ந்த நடவடிக்கை எடுக்க நாங்கள் வெட்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.

வோடபோன் ஐடியா (வி) நிறுவனத்திடம் இருந்து இன்னும்

எனவே கூடிய விரைவில் வோடபோன் ஐடியா (வி) நிறுவனத்திடம் இருந்து இன்னும் அதிர்ச்சிகரமான விலை உயர்வை எதிர்பார்க்கலாம்.பின்பு இதன் தொடர்சியாக ஜியோ மற்றும் ஏர்டெல் சேவைகளிலும் விலை உயர்வு அறிவிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Vodafone Idea Silently Hiked the Plan Prices: Here the Details!: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X