299 விலையில் இத்தனை நன்மையா? இரவு முழுக்க இலவச அன்லிமிடெட் டேட்டா.. போனஸ் டேட்டா.. இன்னும் ஏராளம்..
கம்மி விலையில் தினசரி டேட்டா மட்டுமின்றி, இரவு முழுக்க இலவச டேட்டாவை அன்லிமிடெட் ஆக வழங்கும் இந்தியாவின் ஒரே திட்டம் இந்த ப்ரீபெய்ட் திட்டம் மட்டுமே. இந்த திட்டத்தை வோடபோன் ஐடியா நிறுவனம் வெறும் ரூ.299 விலையில் வழங்குகிறது.
வோடபோன் ஐடியாவின் (Vi) ப்ரீபெய்ட் (Prepaid) வாடிக்கையாளர்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமான சில திட்டங்களை டெல்கோ வழங்கினாலும், அதிக வோடபோன் ஐடியா பயனர்களால் பயன்படுத்தப்படும் பெஸ்ட் பட்ஜெட் பிரெண்ட்லி (Best Budget Friendly Prepaid Plan) திட்டமாக Vi இன் குறுகிய கால செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் திட்டம் திகழ்கிறது. இந்த திட்டத்தை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

இது தினசரி 1.5GB டேட்டாவை, கூடுதல் போனஸ் டேட்டாவுடன் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்த விலையில் சில கூடுதல் தரவுகளை விரும்பும் பயனர்களுக்கு இது ஒரு அற்புதமான திட்டமாகும். ஜியோ மற்றும் ஏர்டெல் போலல்லாமல், Vi அதன் பயனர்களுக்கு தனித்த நன்மைகளை வழங்குகிறது. இருப்பினும், Vi இன்னும் அதன் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி (5G) சேவையை வழங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
வோடபோன் ஐடியா ரூ 299 ப்ரீபெய்ட் திட்டம் (Vodafone Idea Rs 299 Prepaid Plan):
வோடபோன் ஐடியா திட்டங்கள் அணைத்தும் இப்போது வரை வெறும் 4G டேட்டா தரவை மட்டுமே வழங்குகிறது. சரி, நாம் பேசும் இந்த புதிய ரூ. 299 திட்டத்தைப் பற்றி பார்ப்போம். வோடபோன் ஐடியாவின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டமானது அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (voice call) நன்மை, தினமும் 100 எஸ்எம்எஸ் (SMS) நன்மை மற்றும் 1.5ஜிபி தினசரி டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டமானது வாடிக்கையாளர்களுக்கு 5ஜிபி போனஸ் டேட்டாவையும் வழங்குகிறது.
இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இது விஐ ஹீரோ (Vi Hero) அன்லிமிடெட் நன்மைகளுக்கான நுழைவு-நிலை திட்டமாகும். அதாவது இந்த திட்டத்தில் வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் (Weekend data rollover), பிங்கே ஆல் நைட் (Binge all night) மற்றும் டேட்டா டிலைட்ஸ் (Data delight) சலுகைகளும் கிடைக்கும். இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள் மட்டுமே.

இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் பெறும் மொத்த டேட்டா 42ஜிபி + 5ஜிபி போனஸ் டேட்டா (Bonus data) ஆகும். இத்துடன், இந்த திட்டத்தில் விஐ மூவீஸ் & டிவி கிளாசிக் (Vi Movies & TV Classic) இன் OTT (ஓவர்-தி-டாப்) நன்மையும் உள்ளது. ஐஓஎஸ் (iOS) மற்றும் ஆண்ட்ராய்டு (Android) பயனர்களுக்கு கிடைக்கும் Vi ஆப்ஸ் மூலம் OTT உள்ளடக்கத்தைப் பார்க்கலாம்.
இந்த திட்டத்துடன் பிங்கே ஆள் நைட் (Binge All Night) சலுகையுடன், பயனர்கள் தங்கள் FUP (நியாயமான பயன்பாட்டுக் கொள்கை) தரவைப் பாதிக்காமல் தினமும் 12 AM முதல் 6 AM வரை அன்லிமிடெட் டேட்டாவைப் (Unlimited data) பயன்படுத்த முடியும். இரவு நேரத்தில் மொபைல் டேட்டாவை அதிகம் பயன்படுத்தும் எவருக்கும் இது ஒரு சிறந்த சலுகையாக அமைகிறது. முதல் 3 நாட்களுக்கு பயனர்களுக்கு 5ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








