Home
News

எரியுதுடி மாலா.. Vodafone Idea 5G.. இவ்ளோ லேட்டாக அறிமுகம் ஆவதில் இப்படி ஒரு நன்மையா!

விஐ (Vi) என்று அழைக்கப்படும் வோடபோன் ஐடியா நிறுவனமானது கடந்த மார்ச் மாதம் மும்பையில் அதன் 5ஜி சேவைகளை (Vodafone Idea 5G) வணிக ரீதியாக அறிமுகப்படுத்தியது. இதேபோல ஏப்ரல் 2025 இல் டெல்லி, பெங்களூரு, சண்டிகர் மற்றும் பாட்னாவிலும் தனது 5ஜி சேவைகளை தொடங்க திட்டமிட்டுள்ளது.

2025 ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகளை காண வரும் ரசிகர்கள்,தனது நிறுவனத்தின் கீழ் கிடைக்கும் 5ஜி சேவையை அனுபவிக்க உதவும் வகையில், வோடாபோன் ஐடியா நிறுவனம் ஆனது இந்தியாவில் உள்ள பல கிரிக்கெட் மைதானங்களில் தனது 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தி உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Vodafone Idea 5G.. லேட்டாக அறிமுகம் ஆவதில் இப்படி ஒரு நன்மையா!

பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய இரண்டு நிறுவனங்களுமே தங்கள் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தி கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தும் வோடாபோன் ஐடியா நிறுவனமானது - 5ஜி சந்தையில் மிகவும் தாமதமாக நுழைந்துள்ளது என்பதை நாங்கள் கூறி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை; இருப்பினும் வோடாபோன் ஐடியா இதை ஒரு நன்மையாகவும் கருதுகிறது!

முதலீட்டாளர்கள் உடனான ஒரு சந்திப்பில், வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் தாமதமான 5ஜி சேவை தழுவல் ஆனது - சமீபத்திய மேம்பட்ட தொழில்நுட்ப தயாரிப்புகளை ஏற்றுக்கொள்வதிலும், செலவுகளை திறமையாக குறைக்கவும் உதவுவதாக வோடாபோன் ஐடியா நிறுவனம் கூறியுள்ளது.

இதுகுறித்த விளக்கக்காட்சியில் - 90 சதவீத டிடிடி ரேடியோக்கள் 5ஜி ரெடியாக ( TDD Radios are 5G ready) உள்ளன, அதே நேரத்தில் அனைத்து புதிய பேஸ்பேண்டுகளும் 5ஜி-திறன் கொண்டவைகளாக உள்ளன என்று வோடாபோன் ஐடியா எடுத்துரைத்தது. டிடிடி (டைம் டிவிஷன் டூப்ளெக்சிங்) என்பது வயர்லெஸ் தகவல்தொடர்புகளில் பயன்படுத்தப்படும் டூப்ளெக்சிங் (ஒரே நேரத்தில் இருவழி தொடர்பு) முறையாகும்,

இதில் அப்லிங்க் (டிவைஸ் இல் இருந்து நெட்வொர்க்) மற்றும் டவுன்லிங்க் (நெட்வொர்க்கிலிருந்து டிவைஸ்) பரிமாற்றங்கள் ஒரே ஃப்ரெக்வன்சியில், ஆனால் வெவ்வேறு நேர இடைவெளிகளில் நிகழ்கின்றன. மேலும், இ-பேண்ட் எம்டபுள்யூ த்ரோபுட் பேக்ஹால் சோதனையில் 9.8 ஜிபிபிஎஸ் வேகத்தை அடைந்ததாகவும் வோடபோன் ஐடியா தெரிவித்துள்ளது.

வோடபோன் ஐடியாவின் பிரிக்கப்பட்ட ரேடியோ அணுகல் நெட்வொர்க் (Disaggregated Radio Access Network) ஆனது செலவு திறன், புதிய திறன்கள் மற்றும் புதிய சேவை சலுகைகளை கொண்டு வருகிறது என்றும் விஐ தெரிவித்துள்ளது. மேலும் அளவிடக்கூடிய மற்றும் சுறுசுறுப்பான பிஸ்னஸ் மாடல் ஆனது நெட்வொர்க் ஆட்டோமேஷனை செயல்படுத்துகிறது என்றும் விஐ குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்நிறுவனம் அதன் கோர் எட்ஜ் க்ளவுட் டிப்ளாய்மென்ட்-ஐயும் எடுத்துக்காட்டியது. அதன் 60 க்கும் மேற்பட்ட விநியோகிக்கப்பட்ட க்ளவுட் லோக்கேஷன்கள், லேடன்சியை மேம்படுத்துவதற்கும், சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதற்குமான திறனைக் கொண்டுள்ளன என்று கூறியது. ஆகமொத்தம் வோடபோன் ஐடியா நிறுவனம் ஆனது இந்தியா முழுவதும் அதன் 5ஜி சேவைகளை தரமாக வழங்க, பக்காவாக ஸ்கெட்ச் போட்டுள்ளது.

17 முன்னுரிமை வட்டங்களில், நெட்வொர்க் முதலீட்டு அடிப்படையில் - கேரளா மற்றும் மும்பையில் தான் மிகப்பெரிய ஆபரேட்டர் என்று வோடாபோன் ஐடியா கூறுகிறது. குஜராத்தில் மட்டுமே இரண்டாவது பெரிய ஆபரேட்டராக உள்ளது. 17 முன்னுரிமை வட்டங்களில் மீதமுள்ள 14 வட்டங்களில், ஆர்எம்எஸ் (RMS - Revenue Market Share) அடிப்படையில் வோடபோன் ஐடியா மூன்றாவது பெரிய ஆபரேட்டராக உள்ளது.

வோடபோன் ஐடியாவின் விளக்கக்காட்சியின்படி, இந்த 17 முன்னுரிமை வட்டங்கள் ஆனது விஐ-யின் யின் வருவாயில் சுமார் 99 சதவீதத்தையும், தொழில்துறை வருவாயில் சுமார் 92 சதவீதத்தையும் கொண்டுள்ளன. இந்த 14 வட்டங்களில் தமிழ்நாடு, ஹரியானா, கொல்கத்தா, மகாராஷ்டிரா, உ.பி-வெஸ்ட், டெல்லி, மேற்கு வங்காளம், பஞ்சாப், உ.பி-இ, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் பீகார் ஆகியவைகள் அடங்கும்.

Best Mobiles in India

English summary
Vodafone Idea Says Late 5G Launch is Good for The Company How
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X