அதிக டேட்டா நன்மையை வழங்கும் வோடபோன் ஐடியாவின் அட்டகாசமான திட்டங்கள்.!
வோடபோன் ஐடியா நிறுவனம் பட்ஜெட் விலையில் அசத்தலான சலுகைகளை வழங்கும் பல திட்டங்களை வைத்துள்ளது. குறிப்பாக வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கும், ஆன்லைன் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கும் தகுந்தபடி சில திட்டங்களில் கூடுதல் டேட்டா நன்மையை வழங்குகிறது வோடபோன் ஐடியா நிறுவனம்.

அதேபோல் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக பல்வேறு திட்டங்களில் வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர் வசதி,ஓடிடி நன்மைகள் மற்றும் பல சிறப்பான சலுகைகளை வழங்குகிறது வோடபோன் ஐடியா நிறுவனம். இப்போது வோடபோன் ஐடியா நிறுவனம் வழங்கும் அந்த சிறப்பான திட்டங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

வோடபோன் ஐடியா ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது பயனர்களுக்கு தினசரி 4ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். இதுதவிர வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ், வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர் வசதி,Vi மூவிஸ் மற்றும் டிவியின் இலவச OTT சந்தா உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும். குறிப்பாக வீட்டில் இருந்து வேலை செய்யும் மக்களுக்கு இந்த திட்டம் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம்.

வோடபோன் ஐடியா ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ், வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர் வசதி, Vi மூவிஸ்மற்றும் டிவியின் இலவச OTT சந்தா உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

வோடபோன் ஐடியா ரூ.601 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.601 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது பயனர்களுக்கு தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். இதுதவிர வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ், வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர் வசதிஉள்ளிட்ட சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும். பின்பு ரூ .601 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்யும் சந்தாதாரர்களுக்கு
டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி திட்டத்திற்கு 1 ஆண்டு அணுகல் கிடைக்கும்.

வோடபோன் ஐடியா ரூ.558 மற்றும் ரூ.595 திட்டங்கள்
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.595 திட்டம் ஆனது பயனர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். இதுதவிர தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர் வசதி,
ஜீ5 பிரீமியத்திற்கு 1 ஆண்டு சந்தா உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வழங்குகிறது வோடபோன் ஐடியா ரூ.595 திட்டம்.

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.558 திட்டம் ஆனது பயனர்களுக்கு தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். இதுதவிர தினசரி 100 எஸ்எம்எஸ்,வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர் வசதி
உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வழங்குகிறது வோடபோன் ஐடியா ரூ.558 திட்டம்


Click it and Unblock the Notifications