ஸ்ட்ரீமிங் நன்மையை கொடுத்து அதுக்கு வேட்டு வைத்த வோடபோன் ஐடியா: பயனர்கள் அதிர்ச்சி!

|

வோடபோன் ஐடியா (விஐ)-ன் ரூ.1197 ப்ரீபெய்ட் திட்டம் பயனர்களுக்கு ஏணைய ஸ்ட்ரீமிங் நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஜீ5 ப்ரீமியம் சலுகைகள் நன்மைகளும் கிடைக்கிறது. அதேபோல் ரூ.1197 திட்டத்தில் பயனர்களுக்கு வரம்பற்ற குரலழைப்பு, 1.5ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ்கள் ஆகியவற்றை 180 நாட்கள் கால அவகாசத்தோடு வழங்குகிறது.

ரூ.1197 ரீசார்ஜ் திட்டம்

ரூ.1197 ரீசார்ஜ் திட்டம்

திட்டத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், ரூ.1197 திட்டத்தில் அதிவேக இரவு நேர வரம்பற்ற டேட்டா, வீக் எண்ட் ரோல் ஓவர் டேட்டா, விஐ திரைப்படங்கள் மற்றும் டிவி அணுகல் பயன்பாடுகளை வழங்குகிறது. ரூ.1197 திட்டத்தில் ஜீ5 ப்ரீமியம் சந்தா வழங்கப்படுகிறது. ஜீ5 ப்ரீமியம் நேரடி அணுகல் குறித்து பார்க்கையில் வருடத்திற்கு ரூ.999 ஆகவும் மாதத்திற்கு ரூ.99 ஆகவும் இருக்கிறது.

விஐ போஸ்ட்பெய்ட் திட்டம்

விஐ போஸ்ட்பெய்ட் திட்டம்

விஐ போஸ்ட்பெய்ட் திட்டங்களில் ப்ரீமியம் சந்தா வழங்குவதை கடந்த மாதம் நிறுவனம் நிறுத்தியது. விஐ நிறுவனம் இந்தியாவில் அனைத்து வட்டங்களிலும் போஸ்ட் பெய்ட் திட்ட விலை அதிகரித்தது. டெலிகாம் நிறுவனமான விஐ., டிசம்பர் மாதம் உபி கிழக்கு பகுதி, சென்னை, தமிழ்நாடு, கொல்கத்தா, மகாராஷ்டிரா மற்றும் கோவா பகுதியில் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் விலையை ரூ.50 உயர்த்தி அறிவித்தது. படிப்படியாக இந்த அறிவிப்பு நாடுமுழுவதும் உள்ள அனைத்து வட்டங்களிலும் கொண்டு வரப்பட்டது.

விஐ குடும்ப ரீசார்ஜ் திட்டம்

விஐ குடும்ப ரீசார்ஜ் திட்டம்

விஐ குடும்ப திட்டங்களுக்கான விலையையும் உயர்த்தி அறிவித்தது. விஐ குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கான விலை குறித்து பார்க்கையில் இந்த திட்டம் ரூ.598, ரூ.749, ரூ.899, ரூ.999 ஆகியவையாக விலை உயர்த்தப்பட்டது. விஐ குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டங்களானது ரூ.649, ரூ.799, ரூ.999, ரூ.948 மற்றும் ரூ.1,348 ஆகிய விலையில் கிடைக்கிறது. விஐ வழங்கும் ரூ.649 குடும்ப போஸ்ட் பெய்ட் திட்டம் குறித்து பார்க்கையில் இந்த திட்டம் மாதாந்திர 80 ஜிபி டேட்டா, 200 ஜிபி ரோல்ஓவர் டேட்டா, வரம்பற்ற குரலழைப்பு ஆகிய நன்மைகளை வழங்குகிறது. அதோடு இந்த திட்டத்தில் மாதத்திற்கு 100 எஸ்எம்எஸ்களும் வழங்கப்படுகிறது. மேலும் இதில் இரண்டு இணைப்புகள் கிடைக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

குறி நிலாவுக்கு: ஜோடி போடும் சீனா, ரஷ்யா- நேரடியாக நிலாவில் ஆய்வு மையம்!குறி நிலாவுக்கு: ஜோடி போடும் சீனா, ரஷ்யா- நேரடியாக நிலாவில் ஆய்வு மையம்!

பல்வேறு நன்மைகளுடன் குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டம்

பல்வேறு நன்மைகளுடன் குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டம்

விஐ வழங்கும் ரூ.799 குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டங்கள் குறித்து பார்க்கையில், இந்த திட்டத்தில் 120 ஜிபி மாதாந்திர திட்டம் மற்றும் 200 ஜிபி டேட்டா ரோல் ஓவர் வசதியுடன் வழங்கப்படுகிறது. இதில் வரம்பற்ற அழைப்பு வசதியோடு 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகிறது. இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் ஒரு முதன்மை திட்டம் மற்றும் இரண்டு துணை நிரல்கள் திட்டம் என மொத்தம் மூன்று இணைப்புகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முதன்மை பயனர்களுக்கு 60ஜிபி டேட்டாவும், இரண்டாம் நிலை பயனர்களுக்கு 30ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. டேட்டா ரோல்ஓவர் வசதி குறித்து பார்க்கையில் இது முதன்மை பயனர்களுக்கு 200 ஜிபி டேட்டா, இரண்டாம் நிலை பயனர்களுக்கு 50 ஜிபி டேட்டாவும் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம், வீ மூவிஸ் மற்றும் டிவி அணுகல் வசதியையும் வழங்குகிறது.

ரூ.999 குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டம்

ரூ.999 குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டம்

ரூ.999 குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டமானது ஐந்து இணைப்புகளுடன் வருகிறது. 200ஜிபி மாதாந்திர டேட்டா, 20ஜிபி டேட்டா ரோல் ஓவர் வசதி, வரம்பற்ற குரலழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை வழங்குகிறது. இந்த போஸ்ட்பெய்ட் திட்டம் ஐந்து இணைப்பு நன்மைகளை வழங்குகிறது. அதோடு முதன்மை பயனருக்கு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் அணுகல், அமேசான் பிரைம், வீ மூவிஸ் உள்ளிட்ட அணுகலை வழங்குகிறது.

ரூ.1348 போஸ்ட்பெய்ட் திட்டம்

ரூ.1348 போஸ்ட்பெய்ட் திட்டம்

ரூ.1348 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் வரம்பற்ற டேட்டாவுடன் இரண்டு இணைப்புகள் மற்றும் மாதத்திற்கு 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. அதேபோல் முதன்மை பயனர்களுக்கு வரம்பற்ற குரலழைப்பு, வரம்பற்ற தரவு மற்றும் மாதத்திற்கு 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. இந்த திட்டத்தில் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஆகிய அணுகலை ஒரு வருட சந்தாக்களுடன் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Vodafone Idea's Rs.1197 Prepaid plans offers Yearly Streaming Benefits: Postpaid Family Plans Price Hike

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X