Home
News

BSNL-க்கு மட்டுமில்ல.. இனி Vodafone-க்கு ரூ.99-க்கு ப்ரீபெய்ட் ரீசார்ஜ்.. 15 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்!

இந்திய தொலைத்தொடர்பு ஆணையமானது, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்களுக்கு தனியாக ப்ரீபெய்ட் திட்டங்களை கொண்டுவர உத்தரவிட்டிருந்தது. இப்போது, வோடபோன் ஐடியா புது திட்டங்களை களமிறக்கி இருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டங்களையும் 2025ஆம் ஆண்டில் அடிமட்ட விலைக்கு கிடைக்க இருக்கும் ரூ.99 மதிப்பிலான திட்டத்தை பற்றியும் இப்போது தெரிந்து கொள்ளலாம். ரூ.100 மற்றும் ரூ.150 செலவில் உங்களது வோடபோன் ஐடியா சிம் கார்டை இனிமேல் ஆக்டிவாக வைத்து கொள்ள முடியும்.

புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை பார்க்கையில், ரூ.128 மற்றும் ரூ.138 விலையில் திட்டங்கள் வந்திருக்கின்றன. அதேபோல ஏற்கனவே இருக்கும் ரூ.99 மதிப்பிலான திட்டம் 2025ஆம் ஆண்டில் அடிமட்ட விலையில் கிடைக்கும் சிம் கார்டு ஆக்டிவ் திட்டமாக இருக்கப் போகிறது. இந்த மூன்று திட்டங்களையும் வரிசையாக பார்ப்போம்.

BSNL-க்கு மட்டுமில்ல.. இனி Vodafone-க்கு ரூ.99-க்கு ரீசார்ஜ் வருது!

வோடபோன் ஐடியா ரூ 128 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 128 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 100 எம்பி டேட்டா மட்டுமே கிடைக்கிறது. வாய்ஸ் கால்களை பார்க்கையில், ஒரு நொடிக்கு 2.5 பைசா வசூலிக்கப்படும். லோக்கல், நேஷனல் கால்களுக்கும் இந்த 2.5 பைசா பொருந்தும். இதுபோக 10 ஆன்-நைட் மினிட்ஸ் சலுகை கிடைக்கிறது.

அதாவது, இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரையில் 10 நைட் மினிட்ஸ் வாய்ஸ் கால்கள் கிடைக்கும். இந்த சலுகை லோக்கல் வாய்ஸ் கால்களுக்கு மட்டுமே பொருந்தும். இன்கம்மிங் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். ஆனால், அவுட்கோயிங் எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படாது. இந்த திட்டத்துக்கு 18 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

வோடபோன் ஐடியா ரூ 138 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 138 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் டாக்டைம் வேல்யூ மட்டுமே கிடைக்கிறது. அதாவது, அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை செய்ய முடியாது. 2.5 பைசாவுக்கு ஒரு நொடி என்று கால்களை செய்து கொள்ளலாம். முந்தைய திட்டத்தை போலவே நைட் மினிட்ஸ் சலுகை வருகிறது.

ஆகவே, இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரையில் 10 நைட் மினிட்ஸ் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு 20 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. 100 எம்பி டேட்டா மட்டுமே கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கும் இன்கம்மிங் எஸ்எம்எஸ் மட்டுமே கிடைக்கும். அவுட்கோயிங் எஸ்எம்எஸ் சலுகை இருக்காது.

வோடபோன் ஐடியா ரூ 99 ப்ரீபெய்ட் திட்டம் (Vodafone Idea Rs 99 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டம் வாய்ஸ் கால்கள் சலுகையுடன் தொடங்கும் அடிமட்ட விலை திட்டமாகும். உங்களுக்கு வோடபோன் ஐடியா சிம் கார்டை ரூ.100 செலவில் ஆக்டிவாக வைத்திருக்க வேண்டுமானால், இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

இந்த திட்டத்துக்கும் வேல்யூ டாக்டைம் சலுகை மட்டுமே கிடைக்கும். ஆகவே, வாய்ஸ் கால்களுக்கு 1 நொடிக்கு 2.5 பைசா வசூலிக்கப்படும். இந்த திட்டத்துக்கு டேட்டா சலுகையும் இருக்கிறது. ஆனால், 200 எம்பி மட்டுமே கொடுக்கப்படும். இந்த திட்டத்துக்கு நைட் மினிட்ஸ் வாய்ஸ் கால்கள் சலுகை கிடையாது. எஸ்எம்எஸ் அனுப்ப முடியாது.

ஆனால், இன்கம்மிங் எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 18 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. இந்த விலைக்கு ஏர்டெல் மற்றும் ஜியோவில் திட்டங்கள் கிடையாது. சிம் கார்டு ஆக்டிவ் வேண்டுமானால், ரூ.200 பட்ஜெட்டில் மட்டுமே திட்டங்கள் இருக்கின்றன. ஆகவே, பிஎஸ்என்எல் போலவே அடிமட்ட விலையில் விஐயும் சிம் ஆக்டிவ் கொடுக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 99 Plan With 15 Days Validity Check Cheapest SIM Active Prepaid Recharge For 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X