இதான் கடைசி.. வெறும் ரூ.99 ரீசார்ஜ்.. 200MB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. சிம் ஆக்டிவ் வேலிடிட்டி!
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) கூட வழங்காத கம்மியான விலையில் டேட்டா, வாய்ஸ் கால்கள் சலுகையை வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம் வழங்குகிறது. இந்த விலையில் சிம் ஆக்டிவ் மட்டுமல்லாமல், சலுகைகளும் கொடுக்கப்படுகின்றன. இதன் விவரம் இதோ.
இப்போதெல்லாம், இன்கமிங் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் வர வேண்டும் என்றாலே, சிம் ஆக்டிவாக இருக்க ப்ரீபெய்ட் திட்டங்கள் தேவைப்படுகின்றன. ஆனால், ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனங்களின் குறைந்தபட்ச திட்டங்களே ரூ.150 க்கும் மேல் கிடைப்பதால், மாத கடையில் பலருக்கு சிரமம் ஏற்படுகிறது.

ஆனால், வோடபோன் ஐடியா நிறுவனம் வெறும் ரூ.99 விலையில் சிம் ஆக்டிவ் மட்டுமல்லாமல், வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டா சலுகையையும் கொடுக்கிறது. சொல்லப்போனால், இந்த திட்டம் மட்டுமே கம்மியான விலையில் வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டாவை கொடுக்கும் கடைசி விலை திட்டமாக இருக்கிறது. இதன் வேலிடிட்டி, சலுகைகள் குறித்த விவரங்கள் பின்வருமாறு.
வோடபோன் ஐடியா ரூ 99 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 99 Plan Details): வோடபோன் ஐடியாவில் மட்டுமே ரூ.99 விலைக்கு வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டா சலுகை கிடைக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 200 எம்பி டேட்டா, ரூ.90 மதிப்பிலான வேலிடிட்டி டாக்டைம் கொடுக்கப்படும்.
இந்த டாக்டைம் மூலம் வாய்ஸ் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்களுக்கு செகண்ட்டுக்கு 2.5 பைசா வீதம் வசூலிக்கப்படும். இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படாது. இதற்கு 15 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் குறைவான சலுகைகள் கிடைப்பது போல தோன்றலாம்.
ஆனால், ரூ.100 விட குறைவான விலையில் டேட்டா, வாய்ஸ் கால்கள் கொண்ட திட்டம் மற்ற நிறுவனங்களில் கிடையாது. ஆகவே, மாத கடைசியில் ஒரு மாதத்துக்கான ரீசார்ஜ் செய்ய பணம் இல்லாதபோது, தற்காலிகமாக ரீசார்ஜ் செய்ய இந்த திட்டம் மிகச் சரியான தேர்வாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டி வேண்டுமானால், ரூ.198 திட்டத்தை தேர்வு செய்யலாம்.
வோடபோன் ஐடியா ரூ 198 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 198 Plan Details): இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 500 எம்பி டேட்டா, ரூ.198 மதிப்பிலான வேலிடிட்டி டாக்டைம் வழங்கப்படும். இந்த டாக்டைம் மூலம் வாய்ஸ் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்களுக்கு செகண்ட்டுக்கு 2.5 பைசா வீதம் வசூலிக்கப்படும்.
முந்தைய திட்டத்தைப் போலவே இதிலும் எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படாது. இந்த திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக மலிவான விலையில் நல்ல வேலிடிட்டி கொண்ட திட்டமாக ரூ.204 திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்துக்கு ஒரு மாதம் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. முந்தைய திட்டத்தின் அனைத்து சலுகைகளும், இதற்கும் வழங்கப்படுகிறது.
ஒருவேளை உங்களுக்கு எஸ்எம்எஸ், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினசரி டேட்டா வேண்டும் என்றால், ரூ.199 விலையில் கிடைக்கும் திட்டத்தை தேர்வு செய்யலாம். வோடபோன் ஐடியா ரூ 199 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 198 Plan Details): இந்த வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டத்தில் நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா வீதம் மொத்தம் 36 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
அதேபோல அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி வாய்ஸ் கால்களை செய்துகொள்ள முடியும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு 18 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும். இந்த அனைத்து திட்டங்களுக்கும் மலிவான விலையில் உங்களது சிம்மை ஆக்டிவாக வைத்திருக்க உதவுகிறது. இதைவிட அதிக சலுகைகள் கொண்ட திட்டங்கள் மற்ற டெலிகாம் நிறுவனங்களிடம் இருந்தாலும், குறைவான விலைக்கு நல்ல வேலிடிட்டி திட்டங்கள் அவற்றில் கிடையாது.


Click it and Unblock the Notifications








