இதுக்கு மேல கம்மி கிடையாது.. வோடபோனின் ரூ.99 திட்டம் போட்ட போடு.. அறக்க பறக்கும் வாடிக்கையாளர்கள்!
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் கூட வழங்காத மலிவான பட்ஜெட்டில் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ 99 பிளான் (Vodafone Idea Rs 99) வருகிறது. ரூ.100க்கும் கீழ் டேட்டா மற்றும் வாய்ஸ் கால்கள் கொண்ட திட்டம் வேண்டுமென்றால், இந்த திட்டம் மட்டுமே இருக்கிறது.
இந்தியாவின் முன்னணி டெலிகாம் (Telecom) நிறுவனங்களாக இருக்கும் ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) ஆகிய மூன்றும் கோடிக்கணக்கான மக்களுக்கு 4ஜி சேவைகளை வழங்கிவருகிறது. இதில் வோடபோன் ஐடியா நிறுவனத்தை தவிர மற்ற 2 நிறுவனங்களும் 5ஜி சேவைக்கு தங்களது வாடிக்கையாளர்களை தயார்படுத்தி வருகின்றன.

இதனால், வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் எப்போது, 5ஜி சேவை வரும் என்று காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனிடையே பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள், வேறு டெலிகாம் நிறுவனங்களுக்கு மாறத் தொடங்கி விட்டனர். சொல்லப்போனால், கடந்த ஒரு சில ஆண்டுகளில் மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை வோடபோன் இழந்து விட்டது.
இதனால், கைவசம் இருக்கும் 4ஜி வாடிக்கையாளர்களை 5ஜி சேவை கொடுக்கும் வரையில் தக்க வைக்க லாபத்தை பார்க்காமல், பல்வேறு ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்கிவருகிறது. அந்த வகையில், ரூ.99 விலையுள்ள திட்டத்தில் அதிரடியான சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் முழு சலுகைகள் குறித்து இப்போது பார்ப்போம்.
வோடபோன் ஐடியா ரூ 99 பிளான் (Vodafone Idea Rs 99 Plan): ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களை ஒப்பிடுகையில், வோடபோன் ஐடியாவில் மட்டுமே வெறும் ரூ.99 திட்டத்தில் வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 200 எம்பி டேட்டா, ரூ.90 மதிப்பிலான வேலிடிட்டி டாக்டைம் கிடைக்கும்.
இந்த திடத்தில் வாய்ஸ் கால்களில் ஒரு செகண்ட்டுக்கு 2.5 பைசா வீதம் வசூக்கப்படும். இதற்கு எஸ்எம்எஸ் சலுகைகள் கிடையாது. இந்த திட்டத்தை பார்த்தால், குறைவான சலுகைகள் இருப்பதுபோல தோன்றலாம். ஆனால், ரூ.99 விலையில், வேறு எந்த நிறுவனமும் டேட்டா, வாய்ஸ் கால்கள் கொண்ட திட்டங்களை வழங்கவில்லை.
மாத கடைசியில் ஒரு மாதத்துக்கான ரீசார்ஜ் செய்ய நினைக்கும்போது, பணம் கையை கடிக்கும் நபர்களுக்கு, இந்த திட்டம் மிகப்பெரும் வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும். இந்த விலைக்கு அடுத்தபடியாக ரூ.129 விலையில் கிடைக்கும் திட்டத்தில் மட்டுமே டேட்டா மற்றும் வாய்ஸ் கால்கள் கொடுக்கப்படுகிறது.
ஆனால், இந்த திட்டத்தில் வாய்ஸ் கால்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது. அன்லிமிடெட் சலுகை வழங்கப்படுகிறது. அதேபோல 200 எம்பி டேட்டா மற்றும் 18 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த திட்டத்திலும் எஸ்எம்எஸ் சலுகைகள் வழங்கப்படாது. ஆகவே, ரூ.100 பட்ஜெட்டுக்குள் நல்ல திட்டம் வேண்டுமென்றால், வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் ரூ.99 திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.
ஒருவேளை உங்களுக்கு எஸ்எம்எஸ், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 1 ஜிபி டேட்டா வேண்டும், அதேவேளையில் மலிவான விலையும் இருக்க வேண்டும் என்றால், ரூ.199 விலையில் கிடைக்கும் வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா வீதம் மொத்தம் 36 ஜிபி டேட்டா வழங்கப்படும். அதேபோல அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதோடு நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையும் வழங்கப்படும். இந்த திட்டத்துக்கு 18 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இதே சலுகைகளுடன் ஜியோவிடம் ரூ.149 திட்டம் இருக்கிறது. ஆனால், இந்த திட்டத்துக்கு 20 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா வீதம் 20 ஜிபி மொத்த டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகைகள் வழங்கப்படுகிறது. இருப்பினும், ஜியோவிடம் ரூ.99 மதிப்பில் திட்டங்கள் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








