Vodafone Idea SIM கஸ்டமர்கள் காட்டில் கனமழை.. ரூ.99 க்கு அடிச்சு தூக்கும் அன்லிமிடெட் டேட்டா பிளான்!
வி (Vi) என்கிற வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம் தனது அன்லிமிடெட் டேட்டா (Unlimited Data) திட்டத்தை, குறிப்பிட்ட ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தாமல், சிறிய ரீசார்ஜ்கள் மற்றும் டேட்டா வவுச்சர்கள் மூலமாகவும் வழங்கும் வகையில் விரிவுபடுத்தி வருகிறது.
இந்த டெலிகாம் நிறுவனத்தின் ரூ.99 டேட்டா வவுச்சர் (Vi Rs.99 data voucher) இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். இது குறிப்பிட்ட காலத்திற்கு அன்லிமிடெட் டேட்டாவை வழங்குவதோடு, ப்ரீபெய்ட் பயனர்களுக்கான டேட்டா பேக்கேஜ்களை வடிவமைப்பதில் வி நிறுவனம் மேற்கொண்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் காட்டுகிறது.

வோடபோன் ஐடியா ரூ.99 டேட்டா வவுச்சரின் நன்மைகள்: வோடபோன் ஐடியாவின் ரூ.99 ரீசார்ஜ் ஒரு டெய்லி டேட்டா டாப்-அப் வவுச்சர் (Daily data top-up voucher) ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் அன்லிமிடெட் டேட்டாவை வழங்குவதுடன், இரண்டு நாட்கள் செல்லுபடியாகும் காலத்தையும் கொண்டுள்ளது.
மேலும் பெரும்பாலான டேட்டா வவுச்சர்களை போலவே, ரூ.99 டேட்டா பேக்கிற்கும் தனியாக சர்வீஸ் வேலிடிட்டி (service validity) எதுவும் இல்லை. அதாவது ஏற்கனவே ஆக்டிவ் ஆக உள்ள பேஸிக் ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்துள்ள வாடிக்கையாளர்களால் மட்டுமே இதை ரீசார்ஜ் செய்ய முடியும்.
வி நிறுவனத்தின் கூற்றுபப்டி, இந்த ரூ.99 வவுச்சர் இரண்டு நாட்களுக்கு வரம்பற்ற டேட்டா பயன்பாட்டை வழங்குகிறது. ஆனாலும் இந்த ரீசார்ஜுடன் வெளிச்செல்லும் எஸ்எம்எஸ் (outgoing SMS) வசதிகள் எதுவும் வழங்கப்படவில்லை. வோடபோன் ஐடியா இந்த ரீசார்ஜை வரம்பற்ற டேட்டாவை வழங்குவதாக விளம்பரப்படுத்தினாலும், இந்த சலுகை 'நியாயமான பயன்பாட்டுக் கொள்கை'க்கு (Fair Usage Policy - FUP) உட்பட்டது.
வி நிறுவனத்தின் விவரங்களின்படி, வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 20ஜிபி வரையிலான அதிவேக டேட்டாவை பயன்படுத்தலாம். இந்த வரம்பை எட்டிய பிறகு, அந்த நாளின் மீதமுள்ள நேரத்திற்கு இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 64 கேபிபிஸ் (Kbps) வரை குறைக்கப்படும். குறுகிய காலத்தில் அதிக டேட்டா தேவைப்படும் பயனர்களுக்கு, நிலையான டேட்டா அளவை கொண்ட வழக்கமான 'ஆட்-ஆன்' (add-on) பேக்குகளை விட, இந்த வவுச்சர் கணிசமான அளவு கூடுதல் டேட்டாவை வழங்கக்கூடும்.
வி-யின் முக்கிய ப்ரீபெய்ட் திட்டங்களை தாண்டி வரம்பற்ற டேட்டா பலன்களை வழங்குவதால், இந்த ரூ.99 வவுச்சர் குறிப்பிடத்தக்க ரீசார்ஜ் ஆக பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக, இந்த தனியார் டெலிகாம் ஆபரேட்டர் 4ஜி மற்றும் 5ஜி தகுதியுள்ள திட்டங்கள் உட்பட, பல்வேறு ப்ரீபெய்ட் ரீசார்ஜ்களில் வரம்பற்ற டேட்டா சலுகைகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
இதேபோன்ற ஒரு சலுகையை குறைந்த மதிப்புள்ள டேட்டா வவுச்சரில் வழங்குவதன் மூலம், வோடாபோன் ஐடியா, அதிக விலை கொண்ட திட்டங்களை தேர்ந்தெடுக்காமல், ப்ரீபெய்ட் பயனர்கள் அதிக அளவு டேட்டாவை பெறுவதற்கான மற்றொரு வழியை திறம்பட வழங்குகிறது. ஸ்ட்ரீமிங், டவுன்லோடுகள், சாஃப்ட்வேர் அப்டேட்கள் அல்லது பிற குறுகிய காலப் பயன்பாட்டு தேவைகளுக்காக அவ்வப்போது கூடுதல் டேட்டா தேவைப்படும் சந்தாதாரர்களுக்கு இந்த நடவடிக்கை ஈர்க்கக்கூடியதாக இருக்கும்.
ரூ.99 ரீசார்ஜை பரிசீலிக்கும் வாடிக்கையாளர்கள், இது ஒரு முழுமையான ப்ரீபெய்ட் திட்டம் அல்ல, மாறாக ஒரு தனியான டேட்டா வவுச்சர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதில் சேவை செல்லுபடியாகும் காலம், வாய்ஸ் காலிங் பலன்கள் அல்லது எஸ்எம்எஸ் சலுகைகள் ஆகிய பொதுவான நன்மைகள் எதுவுமே இல்லை.
இந்த வவுச்சரின் டேட்டா பலன்களை பயன்படுத்த, ஆக்டிவ் ஆக உள்ள அடிப்படை திட்டம் தேவைப்படுகிறது. இது இரண்டு நாட்களுக்கு வரம்பற்ற டேட்டா மற்றும் தினசரி எப்யுபி வரம்பான 20ஜிபி-ஐ வழங்குகிறது. இந்த வவுச்சர், பாரம்பரிய ப்ரீபெய்ட் திட்ட வகைகளுக்கு அப்பால் தனது வரம்பற்ற டேட்டா திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான வோடாபோன் ஐடியாவின் சமீபத்திய முயற்சியாகும்.


Click it and Unblock the Notifications