Home
News

Vodafone SIM கஸ்டமர்கள் காட்டில் மழை.. 40GB ஆக உயர்த்தப்பட்ட 200MB டேட்டா.. இனி எங்கும் ரூ.99 ரீசார்ஜ் தான்!

வி (Vi) என்கிற வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமானது, அதன் ரூ.99 க்கு திட்டத்தில் சுவாரசியமான திருத்தத்தை செய்துள்ளது போல் தெரிகிறது. இதே விலையில் முன்னதாக ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டம், அதாவதுவோடாபோன் ஐடியா சேவையின் கீழ் ஏற்கனவே ரீசார்ஜ் செய்ய கிடைத்த ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 15 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி (Service Validity) உடன் வந்தது

ஆனால் அது வெறுமனே 200எம்பி டேட்டாவை (200MB Data) மட்டுமே வழங்குகிறது. இப்போது இது சர்வீஸ் வேலிடிட்டி எதுவும் இல்லாமல் மொத்தம் 40ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும்படி திருத்தப்பட்டுள்ளது போல் தெரிகிறது.

40GB ஆக உயர்த்தப்பட்ட 200MB டேட்டா.. இனி எங்கும் ரூ.99 ரீசார்ஜ் தான்!

கைமுறையாக தேடி பார்த்ததில்,ரூ.99 க்கு 200எம்பி 15 நாட்கள் வேலிடிட்டி என்கிற தலைப்பின் கீழ், வோடாபோன் ஐடியாவின் அதிகாரப்பூர்வ தள இணைப்பாக ஒரு திட்டம் கிடைத்தாலும், அதை கிளிக் செய்தால் அது திருத்தப்பட்ட ரூ.99 திட்டத்திற்கு தான் செல்கிறது. அதாவது 40ஜிபி டேட்டாவை வழங்கும் திட்டத்திற்கு தான் செல்கிறது. ஆனால் புதிய ரூ.99-ன் வேலிடிட்டி வெறும் 2 நாட்கள் மட்டுமே ஆகும்.

வோடபோன் ஐடியாவின் ரூ.99 டேட்டா வவுச்சர் ஆனது அன்லிமிடெட் டேட்டாவுடன் வருகிறது என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும் கூட, உண்மையில் இது டெய்லி 20ஜிபி என்கிற லிமிட் உடன் வருகிறது. ஆக இது 2 நாட்களுக்கு மொத்தம் 40ஜிபி எ ; அளவிலான டேட்டாவை வழங்கும். மேலும் இது நாட்டின் ஒவ்வொரு தொலைத்தொடர்பு வட்டத்திலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

ரூ.99 திட்டத்தின் 2 நாட்கள் என்கிற செல்லுபடியாகும் காலம் ஆனது சேவைக்கான செல்லுபடியாகும் காலம் அல்ல, இது டேட்டா வவுச்சரின் தனிப்பட்ட செல்லுபடியாகும் காலம் ஆகும். பொதுவாக, டேட்டா வவுச்சர்கள் நுகர்வோருக்கு எந்த சேவைக்கான செல்லுபடியாகும் காலத்தையும் வழங்குவதில்லை என்பதை நினைவில் கொள்ளவும்.

ஒரு டேட்டா வவுச்சர் மூலம் ரீசார்ஜ் செய்து அதன் நன்மைகளை பயன்படுத்த, உங்களிடம் ஒரு செயலில் உள்ள அடிப்படை ப்ரீபெய்ட் திட்டம் இருக்க வேண்டும். இந்த ரூ.99 டேட்டா வவுச்சரில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால், வி நிறுவனத்தின் மொபைல் ஆப் ற்றும் இணையதளம் மூலமாக இதை நீங்கள் ரீசார்ஜ் செய்யலாம்.

வோடபோன் ஐடியா விலை உயர்வு எப்போது அமலுக்கு வரும்? சிஓஏஐ டிஜிகாம் உச்சி மாநாடு 2026-ன் ஒரு நிகழ்ச்சியின் இடையே பேசிய வோடபோன் ஐடியா தலைமை செயல் அதிகாரி ஆன அபிஜித் கிஷோர், "சிறு திருத்தங்கள் இருக்கும், ஆனால் நீங்கள் வழக்கமாக பார்ப்பது போல் கட்டமைப்பு ரீதியான கட்டண உயர்வு இருக்காது. தற்போதைய சந்தை நிலவரங்களால் சிறிய கட்டண திருத்தங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன," என்று கூறியுள்ளார்.

அதாவது வோடபோன் ஐடியா நிறுவனம் தனது தற்போதைய மொபைல் கட்டணங்களில் சிறிய திருத்தங்களை அறிமுகப்படுத்தக்கூடும். ஆனால் விரிவான கட்டண உயர்வை உடனே அமலுக்கு கொண்டுவரும் திட்டங்கள் எதுவும் அந்நிறுவனத்திடம் இல்லை. பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் மொபைல் ரீசார்ஜ் விலைகளை சுமார் 4-5 சதவீதம் உயர்த்திய சில நாட்களிலேயே வி நிறுவனத்திடம் இருந்து இந்த தகவல் வெளியாகி உள்ளதும் இங்கே குறிப்பிடத்தது.

இந்த ஆண்டின் முதல் பாதியில், அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களின் திட்டங்கள் முழுவதும் கிட்டத்தட்ட 15 சதவீத பரந்த அளவிலான கட்டண உயர்வை எதிர்பார்க்கப்படுவதாக தொழில்துறை ஆய்வாளர்கள் நம்புகின்றனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு கிடைக்கும் அரசின் தொடர்ச்சியான ஆதரவை பற்றியும் கிஷோர் பேசியுள்ளார். மேலும் அரசின் கணிசமான பங்கு மூலதனத்தையும் குறிப்பிட்டார்.

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 99 Data Voucher Now Offer Unlimited Data With 2 Days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X