Jio, Airtel-க்கு Vi ஒரே அடி.. ரூ.98-க்கு அன்லிமிடெட் வாய்ஸ்.. 200 எம்பி டேட்டா.. மலிவு விலைக்கு 3 இருக்கு!
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) நிறுவனங்களில் கிடைக்காத விலைக்கு வோடபோன் ஐடியாவில் (Vodafone Idea) மலிவு விலை திட்டங்கள் இருக்கின்றன. ரூ.98 விலைக்கே அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கொண்ட திட்டம் கிடைக்கிறது. இதுபோக டேட்டா சலுகையும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இப்படி 3 திட்டங்கள் மலிவான விலைக்கு கிடைக்கின்றன. இந்த திட்டங்களின் முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
மற்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களில் ரூ.100 விலைக்கும் கீழ் கிடைக்கும் திட்டங்கள் டேட்டா வவுச்சர்களாக மட்டுமே இருக்கின்றன. ஆனால், வோடபோன் ஐடியாவில் வாய்ஸ் கால்களுடன் ரூ.100-க்கு கீழ் திட்டம் இருக்கிறது. அதேபோல ரூ.200 விலைக்கும் கீழ் மற்ற நிறுவனங்களில் ஓரிரு திட்டங்கள் மட்டுமே இருக்கின்றன. ஆனால், வோடாபோன் ஐடியாவில் 5 திட்டங்கள் இருக்கின்றன.

முதாவது திட்டம் ரூ.98 விலைக்கு தொடங்குகிறது. அதேபோல ரூ.155 திட்டம், ரூ.189 திட்டம் மற்றும் ரூ.179 திட்டம் கிடைக்கிறது. இதுபோக ரூ.199 திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இந்த மொத்த திட்டங்களிலும் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது. அதேபோல டேட்டா சலுகையும் கிடைக்கின்றன. எஸ்எம்எஸ்கள் மட்டும் விலைக்கு ஏற்ப கொடுக்கப்படுகின்றன.
வோடபோன் ஐடியா ரூ.98 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs.98 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 10 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். இந்த விலைக்கு மற்ற நிறுவனங்கள் கொடுக்கவில்லை.
இந்த சலுகை போக 200 எம்பி டேட்டா கிடைக்கிறது. இதுவொரு லம்ப்-சம் டேட்டா சலுகையாக இருக்கிறது. ஆகவே, 10 நாட்கள் வேலிடிட்டிக்கு மொத்தமாகவே இந்த 200 எம்பி டேட்டா மட்டுமே கிடைக்கிறது. அவசரத்துக்கு ரூ.100 மட்டுமே கையில் இருக்கிறது. இதில் ரீசார்ஜ் செய்து வாய்ஸ் கால்கள் கிடைத்தால் போதும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு இது பக்கா தேர்வாக இருக்கிறது.
வோடபோன் ஐடியா ரூ.155 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs.155 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 20 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். 1 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ்களை பயன்படுத்தி கொள்ளலாம். போஸ்ட் டேட்டா கிடைக்காது.
வோடபோன் ஐடியா ரூ.179 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs.179 Plan Details): இந்த திட்டத்தில் 1 ஜிபி டேட்டா கிடைக்கும். போஸ்ட் டேட்டா கொடுக்கப்படாது. 24 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அந்த நாட்களில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது. 300 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படுகிறது.
வோடபோன் ஐடியா ரூ.189 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs.189 Plan Details): இந்த திட்டத்துக்கு 26 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. 1 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. இதற்கும் போஸ்ட் டேட்டா சலுகை கிடைக்காது. ஆனால், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை விஐ கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம்.
வோடபோன் ஐடியா ரூ.199 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs.199 Plan Details): இந்த திட்டத்துக்கு 2 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. இதிலும் போஸ்ட் டேட்டா சலுகை கிடைக்காது. அதேபோல முந்தைய திட்டத்தில் பார்த்த 300 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்கள் சலுகை கிடைக்கிறது. 28 நாட்கள் வேலிடிட்டி உள்ளது.


Click it and Unblock the Notifications








