இனிமே BSNL எதுக்கு? ரூ.98-க்கு இறக்கிய வோடபோன்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. ரூ.100-க்கு கம்மியாக வருது ரீசார்ஜ்!
இந்திய டெலிகாம் மார்கெட்டில் அடிமட்ட விலைக்கு ப்ரீபெய்ட் திட்டங்களை கொடுக்கும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தையே தூக்கி சாப்பிடும்படி புதிய திட்டத்தை வோடபோன் ஐடியா (Vodafone Idea) களமிறக்கி இருக்கிறது. ரூ.100-க்கும் கம்மியான விலையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், லம்ப்-சம் டேட்டா சலுகையை கொடுக்கிறது. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனத்தில் ரூ.189 விலைக்கே ஆரம்ப விலை திட்டம் இருக்கிறது. ஆனால், வோடபோன் ஐடியாவில் கிட்டத்தட்ட பாதி விலைக்கு கொடுக்கப்படுகிறது. இந்த மலிவு விலை திட்டத்தின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் நிறுவனமானது, நாடு முழுவதும் 4ஜி சேவைகளை தொடங்கவில்லை. குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே கொடுக்கிறது. ஆனால், ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி சேவைகளையே நாடு முழுவதும் தொடங்கிவிட்டன. இதில் வோடபோன் ஐடியா நிறுவனம் 4ஜி சேவைகளுக்கு பிறகு 5ஜி சேவைகளை படிப்படியாக கொடுத்துவருகிறது.

ஆகவே, 4ஜி சேவையில் பிஎஸ்என்எல்லுக்கு போட்டியாக வோடபோன் ஐடியா மட்டுமே பார்க்கப்படுகிறது. இருப்பினும், பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் முழுமையாக கிடைத்த பிறகே இந்த போட்டி தொடங்கும். ஆனால், வோடபோன் ஐடியா இப்போது பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு நிகராக மலிவான விலைக்கு திட்டங்களை கொடுக்க தொடங்கி அதையும் தவிடுபொடியாக்கி இருக்கிறது.
ஏனென்றால், பிஎஸ்என்எல்லில் மட்டுமே ரூ.100-க்கும் கம்மியான விலைக்கு வாய்ஸ் கால்கள் கொண்ட திட்டம் கிடைத்தது. இப்போது, வோடபோன் ஐடியாவும் அதில் சேர்ந்துவிட்டது, 4ஜி சேவைகளை முழுமையாக கொடுக்கும் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களே மலிவு விலை திட்டமாக ரூ.189 திட்டத்தை வைத்திருக்கும்போது, வோடபோன் ஐடியா ரூ.98-க்கு கொடுக்கிறது.
வோடபோன் ஐடியா ரூ 98 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 98 Plan Details): இந்த திட்டத்தில் மாதாந்திர வேலிடிட்டி எதிர்பார்க்க முடியாது. அடிமட்ட விலைக்கு கிடைப்பதால் 10 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். இருப்பினும், ரூ.100 இருந்தாலே உங்களால் ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். ஜியோ மற்றும் ஏர்டெல்லில் அப்படி கிடையாது. இந்த நாட்களில் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது.
ஆகவே, மற்ற திட்டங்களை போலவே அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கப்படுகிறது. ஆனால், இதில் அவுட்கோயிங் எஸ்எம்எஸ்களை அனுப்ப முடியாது. ஆகவே, 10 நாட்களுக்கு சிம் ஆக்டிவ் கிடைக்கும் என்பதால், இன்கம்மிங் எஸ்எம்எஸ்களை பெற்று கொள்ளலாம்.
மேலும், லம்ப்-சம் டேட்டா கிடைக்கிறது. ஆனால், வெறும் 200 எம்பி டேட்டா மட்டுமே கிடைக்கும். ஆகவே, வாய்ஸ் கால்கள் மட்டும் போதும், அவசரத்துக்கு கையில் இருக்கும் ரூ.100-க்கு ரீசார்ஜ் வேண்டும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் பக்கா ஆப்ஷனாக இருக்கிறது. அதே நேரத்தில் 4ஜி டேட்டா வவுச்சர்களையும் பயன்படுத்தி கொள்ளலாம்.
ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 4ஜி டேட்டா வவுச்சர்கள் கிடையாது. உங்களது பகுதியில் 4ஜி சேவை கிடைத்தால் மட்டுமே அந்த வேகம் கிடைக்கும். வோடபோன் ஐடியாவில் அப்படியில்லை. நாட்டின் பெரும்பலான பகுதிகளில் 4ஜி சேவை கிடைக்கிறது. இதேபோல வோடபோன் ஐடியா திட்டங்களை தொடர்ந்து, பிஎஸ்என்எல் இப்போது இருக்கும் இடத்தில் மட்டுமே இருக்கும்.
ஜியோ மற்றும் ஏர்டெல்லில் கிடைக்கும் ரூ.189 திட்டத்திலும் லம்ப்-சம் டேட்டா மற்றும் வாய்ஸ் கால்கள் மட்டுமே கிடைக்கும். இதில் ஜியோ 28 நாட்கள் வேலிடிட்டி மற்றும் ஏர்டெல் 22 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது. அதேபோல ஜியோவில் 2 ஜிபி லம்ப்-சம் டேட்டா மற்றும் ஏர்டெல்லில் 1 ஜிபி லம்ப்-சம் டேட்டா கிடைக்கிறது. 300 எஸ்எம்எஸ்கள் உள்ளன.


Click it and Unblock the Notifications








