Home
News

இறங்கி அடிக்கும் வோடபோன்.. மாதாந்திரம் ரூ.158 செலவில் 180 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்!

வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு 2024ஆம் ஆண்டில் கிடைக்கும் 6 மாத வேலிடிட்டி திட்டங்களில் முதல் திட்டமானது, மாதாந்திரம் வெறும் ரூ.158 செலவில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 12 ஜிபி டேட்டா, எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், விஐ மூவிஸ் மற்றும் டிவி சலுகையையும் கொடுக்கிறது.

வோடபோன் ஐடியா ரூ 949 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 949 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 180 நாட்களுக்கு டேட்டா (Data), வாய்ஸ் கால் (Voice Calls), எஸ்எம்எஸ் (SMS) சலுகைகள் மட்டுமல்லாமல் கூடுதல் சலுகைகளும் (Extra Benefits) வழங்கப்படுகின்றன.

மாதம் ரூ.158 செலவில் 180 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்!

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 12 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. இதை வேலிடிட்டி நாட்களில் முழுவதும் பயன்படுத்தலாம், லிமிட் கிடையாது. அதேபோல அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் (Roaming) வாய்ஸ் கால்களை வாடிக்கையாளர்கள் செய்து கொள்ளலாம்.

அதோடு 1200 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைகள் போக விஐ மூவிஸ் மற்றும் டிவி (Vi Movies & TV) ஆப் சலுகை கொடுக்கப்படுகிறது. இதன் கீழ் 200+ டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். இதில் ஆஜ் டக் (Aaj Tak), ஏபிபி (ABP), டிஸ்கவரி (Discovery) உள்ளிட்ட பல்வேறு சேனல்களும் வருகின்றன.

இந்த திட்டத்துக்கான மாதாந்திர செலவை பார்த்தால், ரூ.158 மட்டுமே தேவைப்படுகிறது. ஒருவேளை உங்களுக்கு இதே 180 நாட்கள் வேலிடிட்டி சலுகையோடு, தினசரி டேட்டா சலுகையும் வேண்டும் என்றால், வோடபோன் ஐடியா ரூ 1449 திட்டத்தை தேர்ந்தெடுங்கள். இதன் சலுகைகளை இப்போது பார்க்கலாம்.

மாதம் ரூ.158 செலவில் 180 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்!

வோடபோன் ஐடியா ரூ 1449 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 1449 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்திலும் 180 நாட்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா வீதம் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

ஆகவே, மொத்தமாக 270 ஜிபி டேட்டா கிடைக்கிறது. அதேபோல தினசரி 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. அதேபோல விஐ மூவிஸ் மற்றும் டிவி சலுகைகளை இந்த திட்டத்திலும் பயன்படுத்தலாம்.

இவ்வளவு சலுகைகள் போக, பிஞ்ச் ஆல் நைட், டேட்டா டிலைட்ஸ் மற்றும் வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இந்த திட்டத்தை விஐ ஆப்பில் (Vi App) ரீசார்ஜ் செய்தால், 30 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. ஒருவேளை, 365 நாட்களுக்கு இதுபோன்ற சலுகைகள் வேண்டுமானல், ரூ 1799 திட்டம் நல்ல தேர்வாக இருக்கும்.

வோடபோன் ஐடியா ரூ 1799 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 1799 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்திலும் டேட்டா, வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் மற்றும் சலுகைகள் வருகிறது. இந்த 24 ஜிபி லம்ப்-சம் டேட்டா (Lump-sum Data) சலுகை கிடைக்கிறது.

இந்த டேட்டாவை வேலிடிட்டி நாட்களில் எப்போது வேண்டுமானாலும், முற்றிலும் பயன்படுத்தலாம். அதேபோல மொத்தமாக 3,600 எஸ்எம்எஸ் சலுகையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சலுகைகள் போக அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. அதேபோல விஐ மூவிஸ் மற்றும் டிவி சந்தா கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 949 Plan With 180 Days Validity Unlimited Calls 12GB Data Six Month Plan 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X