வெளுத்துவிட்ட விஐ.. மாதத்துக்கு ரூ.158 போதும்.. 6 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. ஓடிடி சந்தா!
ஜியோவுக்கு நிகராக மாதத்துக்கு வெறும் ரூ.158 செலவில் 180 நாட்கள் வேலிடிட்டியோடு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 12 ஜிபி டேட்டா மட்டுமல்லாமல் ஓடிடி சந்தாவையும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம் வழங்குகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டம் குறித்த விவரங்கள் இதோ.
வோடபோன் ஐடியா ரூ 949 திட்டம் (Vodafone Idea Rs 949 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் (Unlimited Voice Calling), டேட்டா (Data), எஸ்எம்எஸ் (SMS) சலுகைகள் மட்டுமல்லாமல், ஓடிடி (OTT) சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 12 ஜிபி டேட்டா மற்றும் 1200 எஸ்எம்எஸ் சலுகை வழங்கப்படுகிறது.

இதுவொரு லம்ப்-சம் டேட்டா (Lump-sum Data) சலுகையாகும். ஆகவே, இதற்கு தினசரி லிமிட் கிடையாது வேலிடிட்டி நாட்களில் எப்போது வேண்டுமானாலும், முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டா காலியான பிறகு ஒரு எம்பிக்கு 50 பைசா கட்டணமாக வசூலிக்கப்படும். அதேபோல 1200 எஸ்எம்எஸ்களுக்கு பிறகு லோக்கலுக்கு ரூ 1 மற்றும் எஸ்டிடிக்கு ரூ 1.5 வசூலிக்கப்படும்.
இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் (Roaming) வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். இந்த சலுகைகள் போக விஐ மூவிஸ் மற்றும் டிவி பேஸிக் (Vi Movies & TV Basic) சலுகை கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் லைவ் டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி கன்டென்ட்களை பார்த்து கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு 180 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்துக்கான மாதாந்திர செலவை பார்த்தால், வெறும் ரூ 158 மட்டுமே தேவைப்படுகிறது. ஆகவே, 6 மாதங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகை தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு இந்த ப்ரீபெய்ட் திட்டம் நல்ல தேர்வாக இருக்கும். ஒருவேளை தினசரி டேட்டா சலுகை வேண்டுமானால், ரூ 1449 விலையில் கிடைக்கும் திட்டத்தை தேர்வு செய்துகொள்ளுங்கள்.

வோடபோன் ஐடியா ரூ 1449 திட்டம் (Vodafone Idea Rs 1449 Plan Details): இந்த திட்டத்தில் தினசரி டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகளோடு அன்லிமிடெட் வாய்ஸ், ஓடிடி மற்றும் கூடுதல் டேட்டா சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு நாளொன்றுக்கு 1.5 ஜிபி வீதம் மொத்தமாக 270 ஜிபி டேட்டா கிடைக்கிறது.
இந்த தினசரி டேட்டாவை முழுவதும் பயன்படுத்தி பின்பு 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அதேபோல தினசரி 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை செய்து கொள்ளலாம். முந்தைய திட்டத்தை போலவே விஐ மூவிஸ் மற்றும் டிவி சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படுகிறது.
இந்த சலுகைகள் போக வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover), பின்ஞ் ஆல் நைட் (Binge All Night) மற்றும் டேட்டா டிலைட்ஸ் (Data Delights) சலுகைகள் கொடுக்கப்படுகிறது. ஆகவே, டேட்டா ரோலோவர் சலுகை மூலம் வார நாட்களில் பயன்படுத்தாமல், வைத்திருக்கும் டேட்டாவை வார இறுதி நாட்களில் பயன்படுத்தி கொள்ளலாம்.
அதேபோல பின்ஞ் ஆல் நைட் சலுகை மூலம் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் அன்லிமிடெட் டேட்டா சலுகையை பயன்படுத்தலாம். இந்த டேட்டா திட்டத்தில் இருந்து கழிக்கப்படாது, முற்றிலும் ப்ரீயாக வழங்கப்படுகிறது. அதேபோல டேட்டா டிலைட்ஸ் மூலம் ஒவ்வொரு மாதமும் 2 ஜிபி டேட்டா ப்ரீயாக கொடுக்கப்படுகிறது.

இதற்கு 121249 என்ற எண்ணுக்கு கால் செய்தோ அல்லது விஐ ஆப் மூலமோ பெற்று கொள்ள முடியும். இந்த திட்டத்துக்கான மாதாந்திர செலவை பார்த்தால் ரூ 241 தேவைப்படுகிறது. ஆகவே, 6 மாதங்களுக்கு கம்மி விலையில் தினசரி டேட்டா வேண்டுமானால், இந்த திட்டத்தையும் வாய்ஸ் கால்கள் மட்டும்போதும் என்றால் முந்தைய திட்டத்தையும் தேர்வு செய்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








