Home
News

அடிதூள்.. 90 நாட்கள் வேலிடிட்டி.. OTT.. புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்த Vodafone Idea.. என்ன விலை?

வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம் பட்ஜெட் விலையில் அதிக நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. குறிப்பாக ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களை விட ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் சலுகையை வழங்குகிறது வோடபோன் ஐடியா நிறுவனம்.

இந்நிலையில் வோடபோன் ஐடியா நிறுவனம் புதிய ரூ.904 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய திட்டம் ஆனது 90 நாட்கள் வேலிடிட்டி உடன் வெளிவந்துள்ளது. இப்போது வோடபோன் ஐடியா ரூ.904 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்த Vodafone Idea.. என்ன விலை?

வோடபோன் ஐடியா ரூ.904 ப்ரீபெய்ட் திட்டம் (Vodafone Idea Rs 904 Prepaid Plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த புதிய ரூ.904 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 180ஜிபி டேட்டா நன்மை உள்ளது.

இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100எஸ்எம்எஸ் இதில் கிடைக்கும். அதேபோல அமேசான் பிரைம் லைட் சந்தா வழங்குகிறது இந்த அசத்தலான வோடபோன் ஐடியா ரூ.904 ப்ரீபெய்ட் திட்டம். எனவே பிரைம் லைட் சந்தா விரும்பும் பயனர்கள் இந்த திட்டத்தைத் தேர்வு செய்வது நலலது.

புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்த Vodafone Idea.. என்ன விலை?

குறிப்பாக வோடபோன் ஐடியா ரூ.904 ப்ரீபெய்ட் திட்டம் பின்ஞ் ஆல் நைட் (Binge All Night) சலுகை மூலம் அன்லிமிடெட் நைட் டேட்டா (Unlimited Night Data) சலுகை வழங்குகிறது. இதற்குக் கூடுதல் கட்டணம் கிடையாது. ஆனால், நள்ளிரவு 12 முதல் காலை 6 மணி வரையில் மட்டுமே இந்த டேட்டாவை பயன்படுத்த முடியும்.

இந்த வோடபோன் ஐடியா ரூ.904 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) சலுகையை வழங்குகிறது. இதன் மூலம் வார நாட்களில் மீதம்விட்ட டேட்டாவை வார இறுதி நாட்களிலும், டேட்டா டிலைட்ஸ் (Data Delights) சலுகை மூலம் எந்தவித கூடுதல் கட்டணமும் இல்லாமல், மாதத்துக்கு 2 ஜிபி பேக்கப் டேட்டாவை பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சுருக்கமாக கூறவேண்டும் என்றால் வோடபோன் ஐடியா ரூ.904 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது அனைத்து நன்மைகளையும் வழங்குகிறது, எனவே இதில் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். அதேபோல் இந்நிறுவனம் அதிக டேட்டா நன்மையை வழங்கும் திட்டம் ஒன்றை வைத்துள்ளது. அந்த ப்ரீபெய்ட் திட்டத்தை இங்கே பார்க்கலாம்.

வோடபோன் ஐடியா ரூ.475 ப்ரீபெய்ட் திட்டம் (Vodafone Idea Rs 475 plan)தான் தினசரி 4ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் வோடபோன் ஐடியா ரூ.475 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 112ஜிபி டேட்டா கிடைக்கும். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்த Vodafone Idea.. என்ன விலை?

அதாவது வோடபோன் ஐடியா ரூ.475 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர பிங்கே ஆல் நைட் (Binge All Night), வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover), டேட்டா டிலைட்ஸ் (Data Delights) உள்ளிட்ட பல நன்மைகள் இந்த ரூ.475 திட்டத்தில் கிடைக்கிறது.

தினமும் அதிக டேட்டா வேண்டும் என்று நினைக்கும் பயனர்கள் வோடபோன் ஐடியா ரூ.475 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது. மேலும் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 5ஜி சேவை ஆனது நாடு முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 904 Prepaid Plan with Amazon Prime Lite Launched: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X