அடுத்த ரீசார்ஜ் இதுதான்.. மாதம் ரூ.301 போதும்.. 90 நாட்கள் வேலிடிட்டி.. ஓடிடி சந்தா.. அன்லிமிடெட் கால்கள்!
ஜியோவுக்கு நிகராக வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமானது, மாதம் வெறும் ரூ.302 செலவில் 90 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், ஓடிடி சந்தா, அன்லிமிடெட் கால்கள், எஸ்எம்எஸ், டேட்டா டிலைட், பிஞ்ச் ஆல் நைட் போன்ற பல்வேறு கூடுதல் சலுகைகளை வழங்குகிறது.
வோடபோன் ஐடியா ரூ 903 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 903 Plan Details): இந்த திட்டத்தில் தினசரி டேட்டா (Daily Data), அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), ஓடிடி சந்தா (OTT Subscription) மட்டுமல்லாமல், கூடுதலாக பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை பெறும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. ஆகவே, 180 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 2 ஜிபிக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா (Post Data) சலுகையை பெற்று கொள்ளலாம்.
இதுபோக பின்ஞ் ஆல் நைட் (Binge All Night) சலுகை மூலம் அன்லிமிடெட் நைட் டேட்டா (Unlimited Night Data) சலுகை கொடுக்கப்படுகிறது. இதற்கு கூடுதல் கட்டணம் கிடையாது. ஆனால், நள்ளிரவு 12 முதல் காலை 6 மணி வரையில் மட்டுமே இந்த டேட்டாவை பயன்படுத்த முடியும்.
இதுபோக வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) சலுகை மூலம் வார நாட்களில் மீதம்விட்ட டேட்டாவை வார இறுதி நாட்களிலும், டேட்டா டிலைட்ஸ் (Data Delights) சலுகை மூலம் எந்தவித கூடுதல் கட்டணமும் இல்லாமல், மாதத்துக்கு 2 ஜிபி பேக்கப் டேட்டாவை பெற்று கொள்ளலாம்.
ஆகவே, இந்த திட்டத்தில் டேட்டாவுக்கு எந்தவித குறையும் இருக்காது. இப்போது, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை பார்ப்போம். இந்த வோடபோன் ஐடியா திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகைகள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது.
இவ்வளவு சலுகைகளும் போக சோனிலிவ் சந்தா (SonyLiv Subscription) கொடுக்கப்படுகிறது. இந்த சந்தாவை 90 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்துக்கும் 90 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், 3 மாதங்கள் முழுவதும் சோனிலிவ் தளத்தை பயன்படுத்தலாம். இதைவிட கம்மி விலையில் மற்றொரு சோனிலிவ் திட்டம் இருக்கிறது.
வோடபோன் ஐடியா ரூ 369 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 369 Plan Details): இந்த திட்டத்திலும் டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ், ஓடிடி மற்றும் கூடுதல் சலுகைகள் இருக்கின்றன. ஆகவே, இந்த திட்டத்திலும் தினசரிக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை வருகிறது.
முந்தைய திட்டத்தை போலவே, இந்த ப்ரீபெய்ட் திட்டத்திலும் வீக்கெண்ட் டேட்டா ரோலோவர், டேட்டா டிலைட்ஸ் மற்றும் பின்ஞ் ஆல் நைட் சலுகைகள் மட்டுமல்லாமல், விஐ ஹீரோ அன்லிமிடெட் ஆஃபரும் (Vi Hero Unlimited) சலுகையும் வழங்கப்படுகிறது. மேலும், தினசரி 100 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது.
அதேபோல அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice Call) சலுகை மற்றும் ஓடிடி சந்தா கிடைக்கிறது. ஆகவே, சோனிலிவ் சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த சந்தாவுக்கும், திட்டத்துக்கும் 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. சோனிலிவ் சந்தா வேண்டுமானால், இந்த 2 திட்டங்களை ஆப்ஷனில் வைக்கலாம்.


Click it and Unblock the Notifications








