Vi சிம் இருக்கா.. இனிமேல் 84 நாட்களுக்கு ஒரே ரீசார்ஜ்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 1.5 ஜிபி டேட்டா!
வோடபோன் ஐடியா (Vodafone Idea) சிம் கார்டு வைத்து இருக்கும் கஸ்டமர்கள் அடுத்து ரீசார்ஜ் செய்யும்போது, இந்த 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை ஆப்ஷனில் எடுத்தால், ஒரே திட்டத்தில் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ்கள் மட்டுமல்லாமல், ஓடிடி ஆப்களையும் பெற்று கொள்ளலாம்.
ஓடிடி சந்தா கொண்ட திட்டங்களுக்கு தனி மவுசு இருக்கிறது. அதிலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையுடன் கிடைக்கும் திட்டங்கள் அதிகமாக ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது. இதில் வோடபோன் ஐடியா ரூ.859 ப்ரீபெய்ட் திட்டம் கஸ்டமர்களிடையே தனி வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.

வோடபோன் ஐடியா ரூ.859 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 859 Plan Details): வோடபோன் ஐடியாவில் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை கொடுக்கும் திட்டமாக இது இருக்கிறது. நாடு முழுவதும் வோடபோன் ஐடியாவின் 5ஜி சேவை கிடைக்கவில்லை. இருப்பினும், கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும்.
அதேபோல 4ஜி சேவை மட்டுமே கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. ஆகவே, 84 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் 126 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக 1.5 ஜிபி டேட்டா முடிந்த பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், கூடுதலாக 3 டேட்டா சலுகைகளை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்துள்ளது. ஆகவே, பிஞ்ச் ஆல் நைட் டேட்டா (Binge All Night Data) சலுகையை இந்த திட்டம் கொடுத்துள்ளது. இந்த சலுகை வழியாக நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும். இதற்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படாது. முற்றிலும் இலவசமாக கிடைக்கும்.
இதுபோக வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) சலுகையும் இந்த வோடபோன் ஐடியா ரூ.859 திட்டத்துக்கு கிடைக்கிறது. ஆகவே, வார நாட்களில் ஒதுக்கப்பட்ட டேட்டாவில் மிஞ்சம் இருந்தால், அதை வார இறுதி நாட்களில் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டாவுக்கு அடுத்து டேட்டா டிலைட் (Data Delight) சலுகை கொடுக்கப்பட்டு உள்ளது.
மாதத்துக்கு 2 ஜிபி டேட்டாவை பேக்கப் டேட்டாவாக பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கும் எந்தவித கட்டணமும் கிடையாது. விஐ ஆப் (Vi App) வழியாக பெற்று கொள்ள முடியும். மற்ற சலுகைகளை பார்க்கையில், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaimg Voice Calls) இந்த வோடபோன் ஐடியா ரூ.859 திட்டத்துக்கு கிடைக்கும்.
நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளலாம். இந்த சலுகைகளுக்கு அடுத்து விஐ மூவிஸ் & டிவி ஆப் (Vi Movies & TV App) சந்தா கிடைக்கிறது. இதில் லைவ் டிவி சேனல்கள், மூவிக்கள் உள்ளிட்ட அணுகல்கள் கிடைக்கும். அதோடு எம்எக்ஸ் பிளேயர் (MX Player) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 84 நாட்களுக்கு பெஸ்ட் திட்டமாக இருக்கிறது. அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைப்பதால், கூடுதல் கவனம் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications