Home
News

அம்பானிக்கு அடுத்த டென்ஷன்! இனி ரீசார்ஜ் செய்தால் முதல் 3 நாட்களுக்கு இலவசம்.. ஒரே போடு போட்ட Vodafone Idea!

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனங்கள் கட்டண உயர்வுக்கு பிறகு கஸ்டமர்களை தக்க வைக்க வேலிடிட்டி நீட்டிப்பு, கூடுதல் சலுகைகள் போன்ற பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. இப்போது, மூன்றாவது பெரிய டெலிகாம் நிறுவனமான வோடபோன் ஐடியா (Vodafone Idea) போனஸ் டேட்டா (Bonus Data) சலுகையை கையில் எடுத்துள்ளது. மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களில் (Prepaid Plans) மூன்று நாட்களுக்கு இலவச டேட்டா சலுகையை கொடுக்கிறது. இந்த திட்டங்களின் முழு விவரங்களை பார்ப்போம்.

வோடபோன் ஐடியா ரூ 349 திட்டம், வோடபோன் ஐடியா ரூ 579 திட்டம் மற்றும் வோடபோன் ஐடியா ரூ 859 திட்டம் ஆகியவற்றில் இந்த போனஸ் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. 28 நாட்கள், 56 நாட்கள் மற்றும் 84 நாட்கள் என்று வேலிடிட்டி வருவதால், கஸ்டமர்கள் அதிகம் ரீசார்ஜ் செய்யும் திட்டங்களில் சலுகைகள் கொடுக்கப்பட்டிருப்பது தெரிகிறது.

அம்பானிக்கு அடுத்த டென்ஷன்! இனி ரீசார்ஜ் செய்தால் 3 நாட்களுக்கு ப்ரீ!

வோடபோன் ஐடியா ரூ 349 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 349 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 28 நாட்கள் சர்வீஸ் வேலிடிட்டி கிடைக்கிறது. தினசரிக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகையை வோடபோன் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இதுபோக கூடுதல் டேட்டா சலுகைகளும் இருக்கின்றன.

அதாவது வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover), டேட்டா டிலைட்ஸ் (Data Delights) மற்றும் பிஞ்ச் ஆல் நைட் டோட்டா (Binge All Night Data) போன்ற பிரத்யேக சலுகைகளை பெறலாம். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

இந்த அனைத்து சலுகைகளுக்கு பிறகும் போனஸ் டேட்டா சலுகை கிடைக்கிறது. அதாவது, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு மேற்கூறிய சலுகைகள் போக 5 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்படும். இந்த டேட்டாவை 3 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும். இதேபோலவே மற்ற திட்டங்களுக்கும் கிடைக்கிறது.

வோடபோன் ஐடியா ரூ 579 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 579 Plan Details): இந்த வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 56 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் கால்கள் (Roaming Calls) மற்றும் நாள்தோறும் 100 எஸ்எம்எஸ் செய்து கொள்ளலாம்.

முந்தைய ப்ரீபெய்ட் திட்டத்தை போலவே 1.5 ஜிபி டேட்டா நாள்தோறும் வழங்கப்படுகிறது. ஆகவே, 84 ஜிபி டேட்டாவை மொத்தமாக பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், வீக்கெண்ட் டேட்டா ரோலோவர், டேட்டா டிலைட்ஸ், பிஞ்ச் ஆல் நைட் டோட்டா மற்றும் 5 ஜிபி போனஸ் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.

வோடபோன் ஐடியா ரூ 859 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 859 Plan Details): போனஸ் டேட்டா திட்டங்களில் அதிகபட்ச சலுகைகளை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொண்டிருக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 84 நாட்கள் சர்வீஸ் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கும் 1.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

அதேபோல அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் மற்றும் தினசரிக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகளை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இதுபோக முந்தைய திட்டங்களை போலவே, வீக்கெண்ட் டேட்டா ரோலோவர், டேட்டா டிலைட்ஸ், பிஞ்ச் ஆல் நைட் டோட்டா மற்றும் 5 ஜிபி போனஸ் டேட்டா சலுகை வருகிறது.

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு பிறகு மிகப்பெரும் டெலிகாம் நிறுவனமாக வோடபோன் ஐடியா இருக்கிறது. இந்த இடத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவைகளுக்கு பிறகு பிடிக்க வாய்ப்புள்ளதாக டெலிகாம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், வோடபோன் ஐடியா நிறுவனம் சலுகைகளை கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு செல்ல இருப்பது தெரிகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 859 Plan Offer 5GB Bonus Data Along With Unlimited Calls 126GB Data 84 Day Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X