Home
News

Vodafone Idea அதிரடி.. ரூ.82 ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம்.. எவ்வளவு நாள் வேலிடிட்டி? என்னென்ன நன்மைகள்?

வோடபோன் ஐடியா நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் ப்ரீபெய்ட் திட்டங்களில் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களைக் கூடுதல் சலுகைகளை வழங்குகிறது வோடபோன் ஐடியா. ஆனால் இந்நிறுவனம் 5ஜி சேவையை இன்னும் அறிமுகம் செய்யவில்லை.

ஆனாலும் சில மாதங்களில் வோடபோன் ஐடியா தனது 5ஜி சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்யும். இந்நிலையில் வோடபோன் ஐடியா ரூ.82 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இப்போது இந்த ரூ.82 திட்டம் எவ்வளவு நாள் வேலிடிட்டி வழங்கும் மற்றும் என்னென்ன நன்மைகள் இதில் உள்ளது என்பதைப் பார்க்கலாம்.

Vodafone Idea அதிரடி.. ரூ.82 ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம்..

வோடபோன் ஐடியா ரூ.82 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Vodafone Idea Rs 82 Plan) 4ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். ஆனாலும் ரூ.82 ப்ரீபெய்ட் திட்டத்தில் 28 நாட்களுக்கு சோனிலிவ்(Sony LIV) சந்தா கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் அழைப்பு நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் கிடைக்காது. மேலும் சமீபத்தில் இந்நிறுவனம் நெட்பிளிக்ஸ் பேஸிக் சந்தா வழங்கும் இரண்டு திட்டங்களை அறிமுகம் செய்தது. அந்த திட்டங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வோடபோன் ஐடியா ரூ.1399 ப்ரீபெய்ட் திட்டம் (Vodafone Idea Rs 1399 Prepaid Plan) தினசரி 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 210ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் 84 நாட்களுக்கு நெட்பிளிக்ஸ் பேஸிக் சந்தாவை (Netflix Basic subscription) வழங்குகிறது இந்த திட்டம்.

Vodafone Idea அதிரடி.. ரூ.82 ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம்..

இதுதவிர வோடபோன் ஐடியா ரூ.1399 ப்ரீபெய்ட் திட்டத்தில் பின்ஞ் ஆல் நைட் (Binge All Night) சலுகை மூலம் அன்லிமிடெட் நைட் டேட்டா(Unlimited Night Data)சலுகை கிடைக்கிறது. ஆனால் இதற்குக் கூடுதல் கட்டணம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நள்ளிரவு 12 முதல் காலை 6 மணி வரையில் மட்டுமே இந்த டேட்டாவை பயன்படுத்த முடியும்.

அதேபோல் வோடபோன் ஐடியா ரூ.1399 ப்ரீபெய்ட் திட்டம் வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) சலுகையை வழங்கும். இதன் மூலம் வார நாட்களில் மீதம்விட்ட டேட்டாவை வார இறுதி நாட்களில் பயன்படுத்த முடியும் . மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது இந்த வோடபோன் ஐடியா ரூ.1399 ப்ரீபெய்ட் திட்டம்.

Vodafone Idea அதிரடி.. ரூ.82 ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம்..

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.998 ப்ரீபெய்ட் திட்டம் ( Vodafone Idea Rs 998 Prepaid Plan) தினசரி 1.5ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 70 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 105ஜிபி டேட்டா கிடைக்கிறது. பின்பு 70 நாட்களுக்கு நெட்பிளிக்ஸ் பேஸிக் சந்தாவை (Netflix Basic subscription) வழங்குகிறது இந்த திட்டம்.

வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த அட்டகாசமான வோடபோன் ஐடியா ரூ.998 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக வோடபோன் சமீபத்தில் அறிமுகம் செய்த ரூ.1399 மற்றும் ரூ.998 ப்ரீபெய்ட் திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 82 prepaid plan with Sony LIV launched: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X