வோடபோனுக்கு கும்பிடு.. வெறும் ரூ.82 போதும்.. 28 நாட்கள் ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன்.. 4GB டேட்டா சலுகை!
ஜியோ நிறுவன வாடிக்கையாளர்களே மூக்கில் விரல் வைக்கும்படி வெறும் ரூ 82 விலையில் கிடைக்கும் திட்டத்தில் 28 நாட்களுக்கான ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன் மற்றும் 4 ஜிபி டேட்டா சலுகையை வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம் வழங்கிவருகிறது. இதுகுறித்த விவரம் இதோ.
வோடபோன் ஐடியா ரூ 82 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 82 Plan Details): இந்த திட்டத்தில் டேட்டா மற்றும் ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன் சலுகைகள் மட்டுமே வழங்கப்படுகிறது. வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படாது. இந்த டேட்டா திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு 4 ஜிபி லம்ப்சம் டேட்டா வழங்கப்படும்.

இந்த டேட்டாவுக்கு லிமிட் கிடையாது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி நாட்களில் எப்போது, வேண்டுமானாலும் முழுவதும் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதோடு 28 நாட்களுக்கான சோனிலிவ் மொபைல் (Sony Liv Mobile) சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு 14 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.
இந்த திட்டத்தின் வேலிடிட்டி முடிந்த பின்பும், சோனிலிவ் சப்ஸ்கிரிப்ஷனை பயன்படுத்த முடியும். ஆனால், உங்களிடம் ப்ரீபெய்ட் திட்டம் ஆக்டிவாக இருக்க வேண்டும். இதேபோல வோடபோன் ஐடியாவில் 100 ரூபாக்கும் கீழ் 10 டேட்டா திட்டங்கள் இருக்கின்றன. இந்த திட்டங்களின் சலுகைகள் மற்றும் வேலிடிட்டி விவரங்களை இப்போது, பார்போம்.
ரூ 17 விலையில் கிடைக்கும் டேட்டா திட்டத்தில் ஒரு நாளுக்கு அன்லிமிடெட் டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. இந்த டேட்டாவை நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதேபோல ரூ 19 விலையில் கிடைக்கும் டேட்டா திட்டத்தில் 1 நாள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.
இதற்கு 1 ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது. ரூ 24 விலையில் வழங்கப்படும் டேட்டா திட்டத்தில் 1 மணி நேர அன்லிமிடெட் டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. இந்த திட்டம் ஆக்டிவேட் செய்யப்பட்ட பிறகு 1 மணி நேரத்துக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். அதன்பின் திட்டம் காலாவதியாகிவிடும்.
அதேபோல ரூ 25 விலையில் வரும் டேட்டா திட்டத்தில் 1.1 ஜிபி டேட்டா மற்றும் 7 நாட்கள் வேலிடிட்டியுடன் ஆட் ப்ரீ மியூசிக் சப்ஸ்கிரிப்ஷன் (Ad Free Music Subscription) வழங்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு 1 நாள் வேலிடிட்டி கிடைக்கிறது. இதையடுத்து ரூ 29 மதிப்புள்ள டேட்டா திட்டத்தில் 2 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.
இந்த திட்டத்துக்கு 2 நாட்கள் அதாவது 48 மணி நேரம் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. அடுத்து ரூ 36 மதிப்புள்ள டேட்டா திட்டத்தில் 3 நாட்கள் வேலிடிட்டியோடு 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும், ரூ 49 விலையில் கொடுக்கப்படும் டேட்டா திட்டத்தில் 6 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு 24 மணி நேரம் வேலிடிட்டி கிடைக்கிறது.
இதற்கு அடுத்து ரூ 57 விலையில் கிடைக்கும் திட்டத்தில் பட்டையை கிளப்பும் சலுகைகள் வழங்கப்படுகிறது. 7 நாட்கள் வேலிடிட்டியோடு அன்லிமிடெட் நைட் ப்ரீ டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் இந்த டேட்டா சலுகையை அனுபவிக்க முடியும்.
ஒருவேளை அதிக வேலிடிட்டி கொண்ட டேட்டா திட்டம் வேண்டுமானால், ரூ 58 விலையில் கிடைக்கும் திட்டம் நல்ல தேர்வாக இருக்கும். இந்த திட்டத்தில் 3 ஜிபி டேட்டா சலுகை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கு அடுத்ததாக ரூ 75 விலையில் கிடைக்கும் டேட்டா திட்டத்தில் 6 ஜிபி டேட்டா சலுகை 7 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








