Home
News

Vodafone Idea காட்டில் மழை.. அடுத்த 77 நாட்களுக்கு இதுதான் ரீசார்ஜ்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 1.5 ஜிபி டேட்டா!

வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு 28 நாட்கள் நாட்கள் அல்லது 56 நாட்கள் வேலிடிட்டி திட்டங்களுக்கு பதிலாக கிட்டத்தட்ட அதே விலைக்கு அதிக வேலிடிட்டி கொண்ட திட்டம் வேண்டுமானால், இப்போது பார்க்க இருக்கும் திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

வோடபோன் ஐடியா ரூ.799 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 799 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 77 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே, 2 மாதங்களுக்கு மேல் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கும். மேலும், வோடபோன் ஐடியாவில் பிரத்யேகமாக கிடைக்கும் டேட்டா சலுகைகளையும் பெற்று கொள்ளலாம்.

Vodafone Idea காட்டில் மழை.. அடுத்த 77 நாட்களுக்கு இதுதான் ரீசார்ஜ்!

அதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையையும் இந்த திட்டம் கொடுத்துள்ளது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 77 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கும். தினமும் 100 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளவும் முடியும்.

இதுபோக 1.5 ஜிபி டேட்டாவை நாளொன்றுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். வோடபோன் ஐடியாவின் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்களுக்கு இலவச 5ஜி டேட்டா கிடைக்கும். இதுபோக கூடுதலாக கிடைக்கும் டேட்டா சலுகைகளும் இருக்கிறது.

அதாவது, வோடபோன் ஐடியா நிறுவனத்தின் மட்டுமே கிடைக்கும், பிஞ்ச் ஆல் நைட் டேட்டா சலுகை கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சலுகை மூலம் நாள்ளிரவு 12 மணி தொடங்கி காலை 6 மணி வரையில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இது 4ஜி கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்த டேட்டாவுக்கு கூடுதல் கட்டணம் கிடையாது.

அதேபோல தினசரிக்கு ஒதுக்கப்பட்ட டேட்டாவில் இருந்து இது கழிக்கப்படாது. முற்றிலும் இலவசமாக கொடுக்கப்படும். இதற்கு அடுத்து வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) சலுகை கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதையும் கஸ்டமர்கள் வார இறுதி நாட்களில் பயன்படுத்தி கொள்ளலாம். இது வார நாட்களில் பயன்படுத்தாமல் விட்ட டேட்டாவுக்காக கிடைக்கிறது.

இந்த டேட்டா சலுகைகளுக்கு அடுத்து டேட்டா டிலைட்ஸ் சலுகை கிடைக்கிறது. இந்த சலுகை வழியாக மாதத்துக்கு 2 ஜிபி டேட்டாவை எமர்ஜென்சி டேட்டாவாக பெற்று கொள்ள முடியும். இந்த சலுகைகளுடன் வோடபோன் ஐடியா ரூ.799 திட்டம் கிடைக்கிறது. ஆகவே, இது கஸ்டமர்களுக்கு நல்ல லாபகரமான திட்டமாகவே இருக்கிறது. 84 நாட்களுக்கு மற்றொரு திட்டம் உள்ளது.

வோடபோன் ஐடியா ரூ.859 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 859 Plan Details): முந்தைய திட்டத்தில் கிடைத்த சலுகைகள் மொத்தமும் இந்த திட்டத்திலும் கிடைக்கின்றன. ஆனால், வேலிடிட்டி கூடுதலாக கிடைக்கும். ஆகவே, 84 நாட்களுக்கு இந்த திட்டத்தில் வேலிடிட்டி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நாட்களில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கும்.

நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் நைட் டேட்டா, வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் மற்றும் டேட்டா டிலைட்ஸ் சலுகை கிடைக்கும். கூடுதலாக விஐ மூவிஸ் மற்றும் டிவி சந்தாவை இந்த வோடபோன் ஐடியா ரூ.859 திட்டம் கொடுத்து இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 799 Plan With 77 Days Validity 1.5 GB Data Per Day Unlimited Voice Calls Check Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X