Vodafone கஸ்டமர்கள் தலையில் இடி.. சத்தமே இல்லாமல் நீக்கப்பட்ட திட்டம்.. இனிமே இதை ரீசார்ஜ் செய்ய முடியாது!
வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் (Prepaid) மற்றும் போஸ்ட்பெய்ட் (Postpaid) திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும் நேரத்தில் கஸ்டமர்களுக்கு மற்றொரு சம்பவம் செய்யப்பட்டுள்ளது. ஜியோவுக்கு நிகரான சலுகைகளை வாரி வழங்கி வந்த முக்கியமான திட்டமானது சத்தமே இல்லாமல் தூக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்துக்கு பதிலாக மற்றொரு திட்டமும் கூடுதல் விலைக்கு களமிறங்கி இருக்கிறது. வாய்ஸ் கால், 150 ஜிபி டேட்டா, ஓடிடி போன்ற எக்கச்சக்க சலுகைகளை கொண்ட இந்த திட்டத்தின் முழு விவரங்களையும் இப்போது பார்க்கலாம்.
எந்த திட்டம் நீக்கப்பட்டது? வோடபோன் ஐடியா கஸ்டமர்களுக்கு கிடைத்து வந்த ரூ 701 மதிப்பிலான திட்டமே இப்போது நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில் இந்த திட்டத்தில் கிடைத்துவந்த அன்லிமிடெட் டேட்டா சலுகையை நீக்கிவிட்டு ரூ.751 விலையில் புதிய திட்டம் அறிமுகமாகி இருக்கிறது. டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் ஓடிடி போன்ற பல்வேறு சலுகைகளை இந்த புதிய திட்டம் கொண்டிருக்கிறது.

வோடபோன் ஐடியா ரூ 751 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 751 Plan Details): இந்த திட்டத்தில் டேட்டா (Data), வாய்ஸ் கால்கள் (Voice Calls), எஸ்எம்எஸ் (SMS) போன்ற முக்கிய சலுகைகள் மட்டுமல்லாமல், அன்லிமிடெட் நைட் டேட்டா, பிஞ்ச் ஆல் நைட் டேட்டா போன்ற கூடுதல் டேட்டா சலுகைகளும் வருகிறது. இதுபோக ஓடிடி ஆப்களையும் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
ஆகவே, இந்த திட்டத்தை பெறும் வோடபோன் ஐடியா கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வருகிறது. 3000 எஸ்எம்எஸ் சலுகைகள் மொத்தமாக கொடுக்கப்படுகிறது. டேட்டா சலுகையை பொறுத்தவரையில் 150 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். 200 ஜிபிக்கான டேட்டா ரோலோவர் சலுகையும் இதில் கிடைக்கிறது.
இதுபோக வோடபோன் ஐடியா கஸ்டமர்களுக்கு கிடைக்கும் பிஞ்ச் ஆல் நைட் டேட்டா (Binge All Night Data) சலுகையும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. ஆகவே, நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் அன்லிமிடெட் டேட்டாவை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்தின் டேட்டா சலுகையில் இருந்து நைட் டேட்டாவானது துளியும் குறைக்கப்படாது.

இந்த சலுகைகள் போக விஐ கேம்ஸ் (Vi Games) சலுகை கிடைக்கிறது. மேலும், ஆப்ஷன்களுடன் ஓடிடி ஆப்கள் (OTT Apps), டிராவல் ஆப் (Travel App), ஃபுட்டெலிவரி ஆப் (Food Delivery App) உள்ளிட்ட சலுகையும் கிடைக்கிறது. 6 மாதங்களுக்கு அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) சந்தா, 1 வருடத்துக்கான டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் சூப்பர் (Disney+ Hotstar Super) சந்தா ஆப்ஷனில் கிடைக்கிறது.
அதேபோல 12 மாதங்களுக்கான சோனிலிவ் பிரீமியம் டிவி & மொபைல் (SonyLIV Premium TV & Mobile) மற்றும் 1 வருடத்துக்கான சன்நெக்ஸ்ட் (SunNXT) சந்தாவும் ஆப்ஷனில் இருக்கிறது. இதில் ஏதாவது 1 சந்தாவை கஸ்டமர்களே தேர்வு செய்து பயன்படுத்தி கொள்ளலாம். அல்லது ஸ்விக்கி (Swiggy), ஈஸிடின்னர் (EazyDiner) ஆப்களின் அக்சஸ் கூப்பன்களில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்.
இப்படி ஏராளமான சலுகைகளை இந்த திட்டம் கொண்டிருக்கிறது. இது போஸ்ட்பெஸ்ட் கஸ்டமர்களுக்கு வழங்கப்படும் திட்டமாகும். ஆகவே, பழைய ரூ 701 திட்டத்தை பெற்று இருக்கும் கஸ்டமர்கள் அந்த திட்டத்தின் வேலிடிட்டி முடிந்த பிறகு இந்த திட்டத்துக்கு செல்லலாம். இல்லையென்றால், அதைவிட மாலிவான சலுகை கொண்ட திட்டத்தை பெற வேண்டி இருக்கும்.


Click it and Unblock the Notifications








