Vodafone Idea அடி வேற மாறி.. 3 சிம் கார்டு.. 1 ரீசார்ஜ்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 70 ஜிபி டேட்டா.. ஓடிடி சந்தா!
வோடபோன் ஐடியா (Vodafone Idea) கஸ்டமர்களுக்கு ஒரே ரீசார்ஜ் மூலம் 3 சிம் கார்டுகளுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படுகிறது. இதுபோக பிரைமரி சிம் கார்டுக்கு ஓடிடி சந்தா (OTT Subscription ), நைட் டேட்டா (Night Data), விஐ கேம்ஸ் (Vi Games) போன்ற ஏகப்பட்ட கூடுதல் சலுகைகளும் கொடுக்கப்படுகிறது. இந்த வோடபோன் ஐடியா போஸ்ட்பெய்ட் திட்டத்தின் (Vodafone Idea Postpaid) முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
வோடபோன் ஐடியா ரூ 710 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 701 Plan Details): இதுவொரு விஐ மேக்ஸ் ஃபேமிலி (Vi Max Family) திட்டமாக இருக்கிறது. ஆகவே, பிரைமரி சிம் கார்டு மட்டுமல்லாமல், கூடுதலாக 2 ஃபேமிலி சிம் கார்டுகளுக்கும் சலுகைகள் கிடைக்கும். மற்ற நிறுவனங்களில் திட்டத்தின் விலை போக கூடுதலாக குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் மட்டுமே ஃபேமிலி சிம் கார்டுகளை இணைக்க முடியும்.

ஆனால், இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் ரூ.701 மட்டுமே போதும், பிரைமரி சிம் கார்டு மட்டுமல்லாமல், இலவசமாக 2 சிம் கார்டுகளை இணைக்க முடியும். இந்த பிரைமரி சிம் கார்டுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கிறது. 70 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் நைட் டேட்டா (Unlimited Night Data) சலுகை கொடுக்கப்படுகிறது.
ஆகவே, நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் இலவச டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த டேட்டா சலுகை போக 200 ஜிபிக்கான டேட்டோ ரோலாவர் (Data Roll Over) சலுகை கிடைக்கிறது. மேலும், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையையும் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். மொத்தமாக 3000 எஸ்எம்எஸ் சலுகையை கொடுக்கிறது. இதுபோக விலை கேம்ஸ் (Vi Games) சலுகை கிடைக்கிறது.
அதேபோல ஃபேமிலி சிம் கார்டுகளை பார்க்கையில், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது. 40 ஜிபி டேட்டா மற்றும் 200 ஜிபி டேட்டா ரோலோவர் சலுகை கிடைக்கிறது. மொத்தமாக 3000 எஸ்எம்எஸ்களும் கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைகள் மட்டுமே கிடைக்கிறது. ஆகவே, நைட் டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை எதிர்பார்க்க முடியாது. ஆனால், 10 ஜிபி டேட்டாவை ஷேர் செய்யலாம்.
இந்த சலுகைகள் 3 சிம் கார்டுகளுக்கும் கிடைக்கிறது. இதையடுத்து ஓடிடி மற்றும் கூடுதல் சலுகைகள் இருக்கின்றன. இதை பிரைமரி சிம் கார்டில் மட்டுமே பயன்படுத்த முடியும். மொத்தமாக பல்வேறு ஆப்ஷன்கள் இருக்கும். அதில் 2 ஆப்ஷன்களை மட்டுமே தேர்ந்தெடுத்து பயன்படுத்தி கொள்ளலாம். இதில் 3 மாதங்களுக்கான விஐ மூவிஸ் & டிவி (Vi Movies & TV) சந்தா மற்றும் 6 மாதங்களுக்கான அமேசான் பிரைம் (Amazon Prime) சந்தா உள்ளது.
மேலும், 1 வருடத்துக்கான ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா மற்றும் 12 மாதங்களுக்கான சோனிலிவ் (SonyLiv) சந்தா கிடைக்கிறது. இந்த ஓடிடிகள் போக 1 வருடத்துக்கான அணுகலை கொடுக்கும் ஈஸ்மைட்ரிப் (EaseMyTrip) சலுகை மற்றும் 1 வருடத்துக்கான நோர்டன் மொபைல் செக்யூரிட்டி (Norton Mobile Security) கிடைக்கிறது. இந்த ஆப்ஷன்களில் 2 சலுகையை கஸ்டமர்கள் தேர்ந்தெடுத்து பயன்படுத்தி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








