Home
News

அம்பானிக்கு புது ஆப்பு.. இனி 1 ரீசார்ஜ் 2 சிம்களுக்கு வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. Vodafone Idea ஒரேபோடு!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனங்களின் கட்டண உயர்வுக்கு பிறகு பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது, திக்குமுக்காடும்படி சிம் கார்டு விற்பனையை படுஜோராக செய்து வருகிறது. இந்த விற்பனை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், ஜியோவுக்கு இது கடுப்படிக்கும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இதை சமாளிக்க புதிய சலுகைகளை கொடுக்க ஜியோ திட்டமிட்டிருக்கும் நேரத்தில், ஒரு ரீசார்ஜ் செய்தால் 2 சிம் கார்டுகளுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படும் என்று வோடபோன் ஐடியா களமிறங்கி இருக்கிறது.

வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம், கஸ்டமர்களை தக்கவைக்க லாபம் பார்க்காமல் திட்டங்களை அள்ளிக்கொடுக்க திட்டமிட்டுள்ளது. இப்போது, விஐ மேக்ஸ் ஃபேமிலி (Vi Max Family) திட்டங்களின் கீழ் ஒரே கட்டணத்தில் 2 சிம் கார்டுகளுக்கு சலுகைகளை கொடுக்கிறது. ஆனால், இப்போதைக்கு இது போஸ்ட்பெஸ்ட் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

அம்பானிக்கு புது ஆப்பு.. இனி 1 ரீசார்ஜ் 2 சிம் கார்டுக்கு வேலிடிட்டி!

ரூ 701 மதிப்பிலான போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 2 சிம் கார்டுகளுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை வழங்குகிறது. இதுபோக ஓடிடி (OTT) ஆப்களின் சந்தாவையும் கொடுக்கிறது. இருப்பினும், பிரைமரி நம்பர் மற்றும் செகண்டரி நம்பருக்கு வரும் சலுகைகளில் சில மாற்றங்கள் இருக்கின்றன. இந்த திட்டத்தின் முழு விவரங்களை இப்போது பார்ப்போம்.

வோடபோன் ஐடியா ரூ 701 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 701 Plan Details): இந்த வோடபோன் ஐடியா போஸ்ட்பெய்ட் திட்டத்தில் (Vodafone Idea Postpaid Plan) பிரைமரி மற்றும் செகண்டரி நம்பர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கப்படுகிறது. ஆனால், டேட்டாவில் மாற்றம் வருகிறது.

அதாவது, பிரைமரி சிம் கார்டுக்கு 70 ஜிபி டேட்டா மற்றும் 200 ஜிபி டேட்டா ரோலோவர் லிமிட் (Data Rollover Limit) கிடைக்கிறது. இதுபோக அன்லிமிடெட் நைட் டேட்டா (Unlimited Night Data) சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த சலுகை மூலம் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் அன்லிமிடெட் டேட்டா சலுகையை பெற்று கொள்ளலாம். இதற்கு கூடுதல் கட்டணம் கிடையாது.

அதுவே செகண்டரி சிம் கார்டுக்கு 40 ஜிபி டேட்டா சலுகை மட்டுமே கொடுக்கப்படுகிறது. இருப்பினும், 10 ஜிபி கூடுதல் டேட்டாவை பிரைமரியில் இருந்து செகண்டரிக்கு மாற்றி கொள்ளலாம். இதுபோக 200 ஜிபிக்கான டேட்டா ரோலோவர் லிமிட் கொடுக்கப்படுகிறது. இரண்டு சிம் கார்டுகளுக்கும் மாதத்துக்கு 3000 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படுகிறது.

ஆகவே, ஒவ்வொரு சிம் கார்டுக்கும் அதிகப்படியான எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது. இந்த சலுகைகள் போக ஓடிடி ஆப்களின் சலுகை கிடைக்கிறது. அதாவது, ஓடிடி மற்றும் கூடுதல் சலுகைகள் உள்ளிட்ட 5 ஆப்ஷன்கள் வோடபோன் ஐடியா போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படும். இதில் ஏதாவது 2 சலுகைகளை கஸ்டமர்களே தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.

ஆகவே, 6 மாத சந்தாவுடன் அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), 1 வருட சந்தாவுடன் டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), 12 மாத சந்தாவுடன் சோனிலிவ் (SonyLIV), 1 வருட சந்தாவுடன் சன்நெக்ஸ்ட் (SunNXT) ஓடிடி ஆப்ஷன்கள் வருகின்றன. மேலும் ஈஸ்மைட்ரிப் (EaseMyTrip) மற்றும் நார்டன்360 மொபைல் செக்யூரிட்டி (Norton360 Mobile Security) சலுகையும் உள்ளது.

இதில் ஏதாவது 2 சலுகையை கஸ்டமர்கள் தேர்ந்தெடுத்து கொள்ளலாம். இவ்வாறு ஒரே செலவில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகை மட்டுமல்லாமல், ஓடிடி ஆப்களின் சலுகையும் 2 சிம் கார்டுகளுக்கு கொடுக்கப்படுகிறது. ஆகவே, இது நல்ல சலுகை கொண்ட திட்டமாகவே வோடபோன் ஐடியா கஸ்டமர்களுக்கு இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 701 Plan Offers Unlimited Voice Calls 70GB Data OTT Subscription For 2 SIM Cards
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X