Home
News

மாத்திடுங்க.. ரூ.701-இல் முடிஞ்சு போச்சு.. எல்லாமே அன்லிமிடெட்.. 3 ஓடிடி சந்தா.. இதுக்குமேல ஒரே ரீசார்ஜ்!

ஜியோவே மூக்கில் விரல் வைக்கும்படி "ஒரு திட்டமா இருந்தாலும், புளியங்கொம்பு திட்டம்டா" என்று சொல்லும் அளவுக்கு அன்லிமிடெட்டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் போன்ற 3 ஓடிடி ஆப்களின் சந்தா போன்ற சலுகைகள் மலிவான திட்டத்தில் கிடைக்கிறது.

இந்தவொரு திட்டத்தை பெற்றால் மட்டுமே போதும் மொபைல் முதல் ஓடிடி வரையில் வேற எந்தவொரு கூடுதல் திட்டமும் தேவைப்படாது. இந்த திட்டமானது, வெறும் ரூ 701 விலையில் கிடைப்பதால், கஸ்டமர்களுக்கு அதிகப்படியான சலுகைகளை கொடுக்கக் கூடியதாகவே இருக்கிறது. இந்த திட்டம் குறித்த முழு விவரம் இதோ.

மாத்திடுங்க.. ரூ.701-இல் முடிஞ்சு போச்சு.. எல்லாமே அன்லிமிடெட் தான்!

வோடபோன் ஐடியா ரூ 701 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 701 Plan Details): இதுவொரு போஸ்ட்பெய்ட் (Postpaid) திட்டமாகும். ஆனால், இந்த திட்டத்தில் மட்டுமே பல்வேறு நம்ப முடியாத சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு டேட்டா லிமிட் கிடையாது.

அதேபோல ஃபேர் யூசேஜ் பாலிசி (Fair Usage Policy) லிமிட்டும் கிடையாது. வேலிடிட்டி நாட்களில் அன்லிமிடெட் டேட்டா சலுகையை பயன்படுத்தலாம். 4ஜி வேகத்தில் டேட்டா சேவை கிடைக்கும். டேட்டாவை போலவே அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் கால்களை (Roaming Calls) செய்து கொள்ளலாம்.

இதுபோக வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் அதிகபட்சமாக 3000 எஸ்எம்எஸ் எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். இந்த சலுகைகளே விலைக்கு ஏற்ப இருக்கின்றன. ஆனால், இந்த திட்டமானது, அதைவிட கூடுதலாக ஓடிடி (OTT) மற்றும் கேம்ஸ் (Games) சந்தாவை கொடுக்கிறது. ஆகவே, 6 மாதத்துக்கான அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) சந்தா கொடுக்கப்படுகிறது.

மாத்திடுங்க.. ரூ.701-இல் முடிஞ்சு போச்சு.. எல்லாமே அன்லிமிடெட் தான்!

அதேபோல 1 வருடத்துக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) சந்தா கிடைக்கிறது. இதுவொரு மொபைல் (Mobile) சந்தாவாகும். இதுபோக விஐ மூவிஸ் & டிவி (Vi Movies & TV) சந்தா கிடைக்கிறது. இந்த சந்தாவில் கூடுதல் ஓடிடி ஆப்கள் மற்றும் லைவ் டிவி சேனல்களின் சந்தா கொடுக்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் மற்றொரு பட்டையை கிளப்பும் சலுகையும் இருக்கிறது. மேற்கூறிய 3 ஓடிடி தளங்களை ஆப்ஷனில் தேர்ந்தெடுக்கலாம். அதாவது, இந்த 3 ஓடிடி தளங்களோடு 12 மாதங்களுக்கான சோனிலிவ் (SonyLIV) சந்தா, ஒரு வருடத்துக்கான சன்நெக்ஸ்ட் (SunNXT) சந்தா ஆப்ஷன் இருக்கிறது.

அதேபோல 2 காலாண்டு உறுப்பினர் கூப்பன்களுக்கான ஓராண்டு ஸ்விக்கி ஒன் (Swiggy One) அனுகல், 2 காலாண்டு உறுப்பினர் கூப்பன்களுக்கான ஓராண்டு ஈசிடினர் (EazyDiner) அணுகல் மற்றும் ஈசிமைடிரிப் (EaseMyTrip) ஓராண்டு அணுகல் கிடைக்கிறது. இந்த ஈசிமைடிரிப் அணுகலில் ஒவ்வொரு மாதமும் ரிட்டர்ன் பிளிட் டிக்கெட் புங்கிங்கில் ரூ.750 டிஸ்கவுண்ட் பெறலாம்.

இதுபோக ஒரு வருடத்துக்கான நோர்டன் மொபைல் செக்யூகிரிட்டி (Norton Mobile Security) ஒரு வருடத்துக்கு பெற்று கொள்ளலாம். இந்த சலுகைகளில் 3 சலுகைகளை மட்டும் வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் தேர்ந்தெடுத்து பயன்படுத்தி கொள்ளலாம். இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.

இந்த 30 நாட்களில் அதிகப்படியான டேட்டா மற்றும் ஓடிடி சலுகைகளை கொடுக்கிறது. ஆகவே, எப்படி பார்த்தாலும் ஓடிடி சலுகை தேவைப்படும் போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் சரியான தேர்வாக இருக்கும். விஐ கேமஸ் (VI Games) சலுகையை பெறலாம். இதுபோன்று கூடுதல் டெலிகாம் (Telecom) செய்திகளுக்கு எங்களது தளத்தை பின்தொடருங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 701 Plan Offers Unlimited Data, Voice Calls OTT Subscriptions Check Postpaid Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X