Vodafone விஸ்வரூபம்.. ரூ.601 போதும்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 1 வருடத்துக்கு ஹாட்ஸ்டார் சந்தா.. 3ஜிபி டேட்டா!
வோடபோன் ஐடியா (Vodafone Idea) கஸ்டமர்களே மூக்கில் விரல் வைக்கும்படி ரூ.601 திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ், 3 ஜிபி தினசரி டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமல்லாமல், ஒரு வருடத்துக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா கொடுக்கப்படுகிறது. ரூ.82 முதல் திட்டங்கள் இருக்கின்றன.
வோடபோன் ஐடியா ரூ 82 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 82 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா மற்றும் ஓடிடி சலுகைகள் கொடுக்கப்படுகிறது. ஆகவே, 4 ஜிபி டேட்டா மற்றும் சோனிலிவ் மொபைல் (SonyLiv Mobile) சந்தா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு 14 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

வோடபோன் ஐடியா ரூ 169 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 169 Plan Details): இந்த திட்டத்தில் கூடுதல் டேட்டா மற்றும் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. 8 ஜிபி டேட்டா சலுகையை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+ Hotstar Mobile) சந்தா கொடுக்கப்படுகிறது.
இந்த திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இருப்பினும், ஹாட்ஸ்டார் சந்தாவை 3 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும். ஆகவே, டேட்டாவோடு 3 மாதங்களுக்கான ஓடிடி திட்டம் வேண்டுமென்றால், 720p ரெசொலூஷன் கொண்ட இந்த டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம்.
வோடபோன் ஐடியா ரூ 698 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 698 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வேலிடிட்டி சலுகை மிரள வைக்கிறது. அதேபோல சர்வீஸ் வேலிடிட்டி (Service Validity) கிடையாது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு சோனிலிவ் மொபைல் சந்தா கொடுக்கப்படுகிறது.
இந்த சந்தாவை 365 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், 10 ஜிபி டேட்டா சலுகையை பெற்று கொள்ளலாம். ஆனால், இந்த டேட்டா சலுகைக்கு மட்டும் 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. ஆகவே, டேட்டா முடிந்த பிறகும் சோனிலிவ் ஓடிடி சந்தாவை ஆண்டு முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த திட்டத்தை போலவே ஒரு வருட சந்தாவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி ஆப் வேண்டுமானால், இதைவிட மலிவான விலையில் கூடுதல் சலுகைகளோடு மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இது டேட்டா திட்டம் மட்டுமல்ல, அன்லிமிடெட் வாய்ஸ் கால் (Unlimited Voice Call) சலுகையையும் கொண்டிக்கிறது.
வோடபோன் ஐடியா ரூ 601 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 601 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுல்லாமல், பிஞ்ச் ஆல் நைட், டேட்டா டிலைட் போன்ற கூடுதல் சலுகைகளும் கிடைக்கின்றன.
ஆகவே, நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். அதேபோல 100 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளலாம். இதுபோக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STS), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice Call) சலுகைகளை பெற்று கொள்ளலாம். பிஞ்ச் ஆல் நைட் (Binge All Night) டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.
இதன் மூலம் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை அன்லிமிடெட் டேட்டா சலுகையை பெற்று கொள்ள முடியும். அதேபோல வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend data rollover) மற்றும் டேட்டா டிலைட் (Data delight) சலுகை கிடைக்கிறது. மேற்கூறிய சலுகைகளுக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.
ஆனால், இந்த திட்டத்தில் வரும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை 365 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வளவு சலுகைகள் போக இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை விஐ ஆப் மூலம் ரீசார்ஜ் செய்தால், 16 ஜிபி கூடுதல் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. ஓடிடி திட்டத்தில் இது நல்ல சலுகைகளை கொடுக்கிறது.


Click it and Unblock the Notifications