Vodafone Idea சிம் இருக்கா.. இதைவிட கம்மி இல்ல ப்ரோ.. அமேசான் பிரைம், 2 ஜிபி டேட்டா, வாய்ஸ் கால்கள்!
வோடபோன் ஐடியா (Vodafone Idea) சிம் கார்டு வைத்து இருக்கும் கஸ்டமர்களுக்கு ப்ரீபெய்ட் திட்டத்தில் அமேசான் பிரைம் (Amazon Prime) சந்தா வேண்டுமானால், இப்போது, பார்க்க இருக்கும் திட்டம் மட்டுமே சரியான தேர்வாக இருக்கும். இதைவிட மலிவான விலைக்கு அமேசான் பிரைம் சந்தாவை பெற்று கொள்ள முடியாது.
நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஜியோஹாட்ஸ்டார் போன்ற ப்ரீமியம் ஓடிடி ஆப்களை தனியாக மட்டுமே பெற முடிந்தது. ஆனால், டெலிகாம் கஸ்டமர்கள் அதிகமாக ஓடிடி ஆப்களை பயன்படுத்த தொடங்கிய பிறகு டெலிகாம் நிறுவனங்களும், ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களில் ஓடிடி ஆப்களின் சந்தாவை கொடுக்க தொடங்கின.

ஆகவே, வழக்கமாக ரீசார்ஜ் செய்யும் திட்டங்களில் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளுடன் ஓடிடி ஆப்களின் சந்தாவையும் பெற முடியும். இதில் அமேசான் பிரைம் வீடியோ திட்டங்கள் எப்போதும் விலை கொஞ்சம் கூடுதலாக இருக்கிறது. இதில் வோடபோன் ஐடியா ரூ.696 விலையில் இருந்து கஸ்டமர்களுக்கு கொடுக்கிறது.
வோடபோன் ஐடியா ரூ.696 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 696 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 56 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்கள் வரையில் மட்டுமே அமேசான் பிரைம் லைட் (Amazon Prime Lite) சந்தாவை பயன்படுத்தி கொள்ள முடியும். 720p ரெசொலூஷனில் வீடியோக்களை பார்த்து கொள்ள முடியும்.
இதுபோக அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரி டேட்டா (Daily Data) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சலுகைகள் கிடைக்கிறது. மேலும், வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover), அன்லிமிடெட் அரை நாள் டேட்டா (Unlimited Half Day Data) மற்றும் டேட்டா டிலைட்ஸ் (Data Delights) சலுகைகளும் கிடைக்கிறது.
ஆகவே, ஓடிடி சந்தா போக 56 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கொடுக்கப்படும். இது வோடபோன் ஐடியாவின் 5ஜி சேவைகள் கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும். 4ஜி கஸ்டமர்களாக இருந்தால், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும்.
அதேபோல வேலிடிட்டி நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கொடுக்கப்படும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களும் கிடைக்கும். கூடுதல் டேட்டா சலுகைகளும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் ஏராளமாக கிடைக்கின்றன. நள்ளிரவு 12 மணி முதல் மதியம் 12 மணி வரையில் இலவச டேட்டா கிடைக்கும்.
இந்த டேட்டாவுக்கும், தினசரி டேட்டாவுக்கும் தொடர்பில்லை. நள்ளிரவு 12 மணி முதல் 4ஜி கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும். 5ஜி கஸ்டமர்கள் வழக்கம்போல 5ஜி டேட்டாவை இலவசமாக பெற்று கொள்ளலாம். இதுபோக டேட்டா டிலைட்ஸ் சலுகை கிடைக்கிறது. இது எமர்ஜென்சி டேட்டா போல பயன்படுத்த கிடைக்கிறது.
அதாவது, எந்த டேட்டா சலுகையும் இல்லாமல் வேலிடிட்டி மட்டும் இருக்கும்போது, 2 ஜிபி டேட்டாவை கிளைம் செய்து பெற்று கொள்ளலாம். இது ரீசார்ஜ் செய்ய அல்லது பிற டேட்டா பயன்பாடுகளுக்கு முக்கியமாக இருக்கும். இவ்வளவு சலுகைகளையும் இந்த வோடபோன் ஐடியா ரூ.696 திட்டம் கொடுத்து இருக்கிறது.


Click it and Unblock the Notifications