Home
News

விஐ SIM இருக்கா? அடுத்த 60 நாட்களுக்கு வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ், டேட்டா, எஸ்எம்எஸ்!

வோடபோன் ஐடியா (Vodafone Idea) சிம் கார்டை வைத்திருக்கும் இருக்கும் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு 2 மாதங்களுக்கு கம்மியான செலவில் திட்டம் வேண்டுமானால், இப்போது பார்க்க இருக்கும் 60 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் சரியான தேர்வாக இருக்கும். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு சலுகை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

டெலிகாம் கஸ்டமர்களுக்கு மாத வேலிடிட்டி என்றாலே 28 நாட்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகிறது. அதேபோல 2 மாதங்கள் என்றால் 56 நாட்களாக இருக்கிறது. இதனால், 30 நாட்கள் அல்லது 60 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், காலண்டர் மாத கணக்கில் 2 மாதங்களுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.

விஐ SIM இருக்கா? அடுத்த 60 நாட்களுக்கு வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்!

வோடபோன் ஐடியா ரூ.625 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 625 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 60 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. ஆகவே, 2 மாதங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் கிடைக்கும். இந்த திட்டத்தின் விலையை விட வேலிடிட்டி அதிமாக கிடைப்பதால், தினசரி டேட்டா கிடைக்கவில்லை.

லம்ப்-சம் டேட்டா மட்டுமே கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த திட்டத்தில் மொத்தமாகவே 50 ஜிபி டேட்டா மட்டுமே கொடுக்கப்படும். இந்த 50 ஜிபிக்கு பிறகு போஸ்ட் டேட்டா கொடுக்கப்படவில்லை. ஆகவே, 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா கிடைக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம். டேட்டா வவுச்சர்களுக்கு கஸ்டமர்கள் சென்று கொள்ளலாம்.

சொல்லப்போனால், இந்த திட்டம் வாய்ஸ் கால்களை மட்டுமே விரும்பும் கஸ்டமர்களுக்கு மலிவான விலைக்கு பக்காவான தேர்வாக இருக்கிறது. இருப்பினும், தேவைப்படும்போது டேட்டா வவுச்சர்களை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், டேட்டா ரோலோவர், டேட்டா டிலைட்ஸ், அன்லிமிடெட் நைட் டேட்டா உள்ளிட்ட சலுகைகளை இந்த திட்டம் கொடுக்கவில்லை.

வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வழக்கம்போல அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கொடுக்கப்பட்டு இருக்கிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் இந்த வோடபோன் ஐடியா ரூ.625 திட்டம் கொடுத்து இருக்கிறது.

கிட்டத்தட்ட இதே வேலிடிட்டியுடன் தினசரி டேட்டா, அன்லிமிடெட் நைட் டேட்டா, வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் உள்ளிட்ட சலுகைகள் வேண்டுமானால், வோடபோன் ஐடியா ரூ.649 திட்டத்தை பெற்று கொள்ளலாம். இதில் 56 நாட்களுக்கு மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், டேட்டா சலுகைகள் வாரி வழங்கப்பட்டு இருக்கும்.

வோடபோன் ஐடியா ரூ.625 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 625 Plan Details): இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 56 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அந்த நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். 2 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். 12 மணி நேரம் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும்.

அதாவது, நள்ளிரவு 12 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையில் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும். வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் சலுகையையும் இந்த திட்டம் கொடுத்து இருக்கிறது. டேட்டா டிலைட்ஸ் கிடைக்கிறது. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி ரோமிங் வாய்ஸ் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் இந்த திட்டம் கொடுத்துள்ளது.

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 625 Plan With 60 Days Validity Unlimited Voice Calls 50GB Data Check Pack Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X