1 வருட இலவச Disney+ Hotstar சந்தா.. ஒரே பிளான் ஓஹோனு நன்மை.. அம்பானியை ஓவர்டேக் செய்ய பார்க்கும் Vi..
இந்தியாவின் டெலிகாம் துறையில் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக திகழும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) இப்போது 4 அட்டகாசமான திட்டங்களை வழங்கி, ஜியோ (Jio) பயனர்களையே பொறாமைப்பட செய்துள்ளது. இந்த திட்டங்கள் 1 வருட இலவச Disney+ Hotstar சந்தாவுடன் வருகின்றது.
வோடபோன் ஐடியா அல்லது Vi: ஆம், சரியாக தான் படித்தீர்கள், வோடபோன் ஐடியா அல்லது Vi என்று அழைக்கப்படும் டெலிகாம் நிறுவனம் இப்போது 4 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்துடன் 1 வருடம் செல்லுபடியாகும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை கூடுதல் நன்மையாக வழங்குகிறது. பட்ஜெட் விலை முதல் இப்போது இந்த நன்மையுள்ள திட்டங்கள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன.

4 பெஸ்ட் Vi திட்டங்கள்: வோடபோன்-ஐடியா (Vodafone Idea) நிறுவனம் வழங்கும் ரூ. 601, ரூ. 901, ரூ. 1066 மற்றும் ரூ. 3099 ஆகிய நான்கு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம். இந்த 4 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் ஒவ்வொன்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை, தினசரி டேட்டா நன்மை மற்றும் SMS ஆகியவற்றை வழங்குகிறது. இத்துடன் சில கூடுதல் இலவச நன்மைகளும் கிடைக்கிறது.
1. வோடபோன் ஐடியா ரூ. 601 ப்ரீபெய்ட் திட்டம்
இந்த திட்டமானது அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை மற்றும் 3ஜிபி தினசரி டேட்டாவுடன் வருகிறது. இந்தத் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு விஐ ஹீரோ அன்லிமிடெட் (Vi Hero Unlimited) ஆகியவற்றை வழங்குகிறது. இதில் பிங்கே ஆள் நைட் (Binge All Night), வீகென்ட் டேட்டா ரோல்ஓவர் (Weekend Data Rollover), நன்மையை வழங்குகிறது.
எக்ஸ்டரா போனஸ் டேட்டா நன்மை: இத்துடன் கூடுதலாக டேட்டா டிலைட் (Data Delights) நன்மைகளுடன் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+ Hotstar Mobile) சந்தாவை Vi வழங்குகிறது. இத்துடன் இன்னும் கூடுதல் சேர்ப்பாக விஐ மூவீஸ் & டிவி (Vi Movies & TV) நன்மை மற்றும் 16GB போனஸ் டேட்டா நன்மையையும் வழங்குகிறது. ரூ. 601 திட்டத்தின் செல்லுபடியாகும் வேலிடிட்டி 28 நாட்களாகும்.

2. வோடபோன் ஐடியா ரூ. 901 ப்ரீபெய்ட் திட்டம்
ரூ. 601 திட்டத்தில் குறிப்பிடப்பட்ட அணைத்து நன்மைகளும் இந்த ரூ. 901 திட்டத்தில் கிடைக்கும். இதில் இருக்கும் வித்தியாசம் என்னவென்றால், ரூ. 901 ப்ரீபெய்ட் திட்டமானது 70 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் மட்டுமே வருகிறது. இத்துடன் கிடைக்கும் போனஸ் டேட்டா நன்மை 48ஜிபி ஆக இருக்கிறது. மற்ற நன்மைகள் எல்லாம் மேலே குறிப்பிடப்பட்டுள்ள ரூ. 601 திட்டத்தில் கிடைக்கும் அதே நன்மைகளாகும்.
3. வோடபோன் ஐடியா ரூ. 1066 ப்ரீபெய்ட் திட்டம்
இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 2GB டேட்டா, தினசரி 100 SMS நன்மைகளை வழங்குகிறது. இதன் வேலிடிட்டி வெறும் 84 நாட்களாகும். இத்துடன் கிடைக்கும் கூடுதல் நன்மைகள் எல்லாம் ரூ.601 திட்டத்துடன் கிடைக்கும் இலவச நன்மைகளுடன் ஒத்துப்போகிறது. இதுவும் 1 வருட இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை வழங்குகிறது. இதில் எக்ஸ்டரா போனஸ் டேட்டா நன்மை மட்டும் கிடையாது.
4. வோடபோன் ஐடியா ரூ. 3099 ப்ரீபெய்ட் திட்டம்
மேற்கூறிய ரூ. 1066 திட்டத்தில் கிடைக்கும் அதே நன்மைகளை இந்த ரூ. 3099 திட்டம் வழங்குகிறது. ஆனால், இதன் வலைடிட்டி மட்டும் மாறுபடுகிறது. இந்த திட்டம் 365 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இது கிடைக்கும் இலவச நன்மைகள் அப்படியே ரூ. 601 திட்டம் மற்றும் ரூ. 1099 திட்டத்துடன் பொருந்தும். இந்த திட்டத்திலும் எக்ஸ்ட்ரா போனஸ் டேட்டா நன்மை கிடையாது.


Click it and Unblock the Notifications








