Home
News

வேற பிளானே வேணாம்! ரூ.601 ரீசார்ஜ் போதும்.. 2 சிம் கார்டுக்கு சலுகை.. ஓடிடி சப்கிரிப்ஷன் வேற.. வோடபோன் அதிரடி!

வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம், ஒரே பிளானில் 2 சிம் கார்டுகளுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டா, எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், அமேசான் பிரைம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷனையும் வழங்குகிறது. அதோடு 200ஜிபி வரையில் டேட்டா ரோலோவர் சலுகை கிடைக்கிறது.

அண்மை காலமாக, வோடபோன் வாடிக்கையாளர்கள் கொத்துகொத்தாக வேறு டெலிகாம் நிறுவனங்களுக்கு மாறிவருகின்றனர். இதனால் லாபத்தை பார்க்காமல், வாடிக்கையாளர்களை தக்க வைக்க மட்டுமே வோடபோன் நிறுவனம் பிளான்களை அறிவித்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு கூட ரூ.49 ரீசார்ஜ் பிளானில் 24 மணி நேர டேட்டாவையும், ரூ.24 ரீசார்ஜ் பிளானில் அன்லிமிடெட் டேட்டாவையும் வழங்கப்போவதாக அறிவித்தது.

வேற பிளானே வேணாம்.. ஒரே ரீசார்ஜ் போதும்.. 2 சிம் கார்டுக்கு சலுகை!

இந்த திட்டங்களை தொடர்ந்து ரூ. 198 மற்றும் ரூ. 204 விலையில் மேலும் 2 புதிய ப்ரீபெய்ட் பிளான்களை அறிவித்தது. இப்படி அடுத்தடுத்து சலுகை பிளான்களில் அசத்தி வருகிறது. இப்போது, ரூ 601 போஸ்பெய்ட் பிளானை களமிறக்கியிருக்கிறது. இந்த பிளான் 2 சிம் கார்டுகளுக்கு நம்ம முடியாத சலுகைகளை வழங்குகிறது.

சொல்லப்போனால், ஒருவருக்கு வெறும் ரூ.300 செலவில் அன்லிமிடெட் வாய்ஸ், டேட்டா, ஒரு வருடத்துக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் 6 மாதத்துக்கான அமேசான் பிரைம் வீடியோ சப்கிரிப்ஷன் கிடைத்தால், அது வரவேற்பை பெறுவதில் ஆர்ச்சர்யம் கிடையாது. இந்த பிளானின் சலுகைகள் குறித்த விவரம் பின்வருமாறு.

வோடபோன் ஐடியா ரூ 601 பிளான் (Vodafone Idea Rs 601 Plan): இந்த பிளான் மூலம் 2 சிம் கார்டுகளுக்கு சலுகைகள் கிடைக்கும். அதாவது, ஒரு பிரைமரி சிம் கார்ட்டில் ரூ 601 ரீசார்ஜ் செய்தால், அதோடு மற்றொரு சிம் கார்டுக்கும் அன்லிமிடெட் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படும்.

இந்த பிரைமரி சிம் கார்டுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், 3000 எஸ்எம்எஸ், 70 ஜிபி டேட்டா கிடைக்கும். அதோடு பின்ச் ஆல் நைட் (Binge All Night) ஆஃபரும் வழங்கப்படுகிறது. இந்த ஆஃபர் மூலம் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் அன்லிமிடெட் ப்ரீ டேட்டாவை பயன்படுத்திகொள்ள முடியும்.

அதுமட்டுமல்லாமல், 200 ஜிபி வரையில் டேட்டா ரோலோவர் சலுகை கிடைக்கிறது. இந்த சலுகை மூலம் நீங்கள் நாளொன்றுக்கு ஒதுக்கப்படும் டேட்டாவை முழுவதும் பயன்படுத்தவில்லை என்றால், அடுத்த நாள் அதை பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி 200 ஜிபி வரையில் டேட்டாவை சேமித்து வேலிடிட்டி முடிவதற்குள் பயன்படுத்தலாம்.

இதுமட்டுமல்லால், விஐ மூவிஸ் மற்றும் டிவி (Vi Movies & TV), ஹங்கமா மியூசிக் (Hungama Music), விஐ கேம்ஸ் (Vi Games), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) தளத்துக்கு 6 மாத சப்ஸ்கிரிப்ஷன், 1 வருடத்துக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+ Hotstar Mobile) மற்றும் சோனி லிவ் மொபைல் (SonyLIV Mobile), சன்நெக்ஸ்ட் ப்ரீமியம் (SunNXT Premium) சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கும்.

இப்போது, மற்றொரு சிம் கார்டுக்கு கிடைக்கும் சலுகைகளை பார்ப்போம். இந்த பிளானை ரீசார்ஜ் செய்தால், பிரைமரி சிம் கார்டு கொடுக்கப்படும் சலுகைகள் போக, மற்றொரு சிம் கார்டுக்கு 3000 எஸ்எம்எஸ், 40 ஜிபி டேட்டா மற்றும் 10 ஜிபி டேட்டா ஷேரிங், 200 ஜிபி டேட்டா ரோலோவர் சலுகைகள் கிடைக்கும்.

அதோடு அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் மேற்கூறிய ஓடிடி சப்ஸ்கிரிப்ஷனையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுவொரு 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமாகும். மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 601 Plan Comes With Family Connection, Unlimited Voice Calls, 70GB Data
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X