Home
News

வோடபோன் ஐடியா சிம் கார்டு இருக்கா.. அடுத்த 84 நாட்களுக்கு இதுதான் ரீசார்ஜ்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்!

டெலிகாம் கஸ்டமர்களுக்கு தினசரி டேட்டா இல்லாமல், லம்ப்-சம் டேட்டாவுடன் கிடைக்கும் திட்டங்கள் மலிவான விலைக்கு வருகின்றன. இவை வாய்ஸ் ஒன்லி திட்டங்களாக இல்லாமல், கொஞ்சம் டேட்டாவையும் கொடுக்கின்றன. இப்படியான திட்டம் ஒன்று வோடபோன் ஐடியாவில் (Vodafone Idea) அதிகமாக ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது.

வோடபோன் ஐடியா ரூ.548 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 548 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டா (Daily Data) கொடுக்கப்படாது. ஆனால், 7 ஜிபி லம்ப்-சம் டேட்டா கொடுக்கப்படும். அதாவது, இந்த திட்டத்துக்கு கிடைக்கும் 84 நாட்கள் வேலிடிட்டிக்கும் மொத்தமாகவே 7 ஜிபி டேட்டா (7GB Data) மட்டுமே கொடுக்கப்படும்.

வோடபோன் ஐடியா சிம் கார்டு இருக்கா.. அடுத்த 84 நாட்களுக்கு இதுதான்!

இந்த டேட்டாவுக்கு பிறகு போஸ்ட் டேட்டா (Post Data) கொடுக்கப்படாது. ஆகவே, கூடுதல் டேட்டாவுக்கு டேட்டா வவுச்சர்களை வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த டேட்டா சலுகையை போலவே எஸ்எம்எஸ்களும் லம்ப்-சம் சலுகையில் மட்டுமே கிடைக்கும். வேலிடிட்டி நாட்கள் முழுவதும் 1000 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம்.

ஆனால், வாய்ஸ் கால்களில் எந்த மாற்றமும் கிடையாது. இந்த திட்டத்துக்கு கிடைக்கும் 84 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கும். இந்த சலுகைகள் மட்டுமல்லாமல், விஐ மூவிஸ் & டிவி (Vi Movies & TV) சந்தாவும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆகவே, மலிவான விலைக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் வேண்டுமானால், இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். அதுவே தினசரி டேட்டாவுடன் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் வேண்டுமானால், ரூ.859 திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா கொடுக்கப்படும்.

வோடபோன் ஐடியா ரூ.859 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 859 Plan Details): இந்த வோடபோன் ஐடியா திட்டத்தில் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். ஆகவே, 84 நாட்களுக்கு மொத்தமாக 126 ஜிபி டேட்டா கிடைக்கும். இதுபோக 1.5 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும்.

மேலும், வோடபோன் ஐடியாவின் 5ஜி சேவைகள் கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கொடுக்கப்படும். இந்த டேட்டா சலுகைகள் போக நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் அன்லிமிடெட் நைட் டேட்டா (Unlimited Night Data) சலுகைகள் கொடுக்கப்படும்.

இந்த டேட்டாவுக்கும் தினசரி டேட்டாவுக்கும் தொடர்பில்லை. முற்றிலும் இலவமாக கொடுக்கப்படுகிறது. இது 4ஜி கஸ்டமர்களுக்கு பக்காவான சலுகையாக இருக்கும். வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) சலுகையையும் இந்த திட்டம் கொடுத்துள்ளது. விஐ ஆப் வழியாக டேட்டா டிலைட்ஸ் சலுகை கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இதில் மாதத்துக்கு 2 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். இவ்வளவு டேட்டா சலுகைகளும் போக 84 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களின் சலுகைகள் கொடுக்கப்படும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் கஸ்டமர்கள் அனுப்பி கொள்ளலாம். முந்தைய திட்டத்தில் கிடைத்த விஐ மூவிஸ் & டிவி (Vi Movies & TV) சந்தாவும் வருகிறது.

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 548 Plan With 84 Days Validity Unlimited Voice Calls Vi Movies And TV App
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X