அறக்க பறக்க ரீசார்ஜ்.. மலிவாக இறக்கிய வோடபோன் ஐடியா.. 84 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள்.. 7 ஜிபி டேட்டா!
வோடபோன் ஐடியா (Vodafone Idea) கஸ்டமர்களுக்கு மலிவான விலைக்கு 84 நாட்கள் வேலிடிட்டி வேண்டுமானால் கண்ணை மூடிக்கொண்டு இந்த புது ரீசார்ஜ் திட்டத்தை பெற்றுக் கொள்ளலாம். கிட்டத்தட்ட வாய்ஸ் ஒன்லி திட்டமாகவே இதை சொல்லலாம் ஆனால் கூடுதலாக 7 ஜிபி டேட்டா சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த ப்ரீபெய்டு திட்டத்தின் முழு சலுகை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
டெலிகாம் நிறுவனங்கள் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் அடங்கிய திட்டங்களையும் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் மட்டுமே அடங்கிய திட்டங்களையும் அதிகமாக கொடுக்கின்றன. இது இல்லாமல், வாய்ஸ் கால்கள் மற்றும் லம்ப்-சம் டேட்டா கொண்ட திட்டங்களும் இருக்கின்றன. இப்போது, பார்க்கப் போகும் திட்டமும் அப்படித்தான், லம்ப்-சம் டேட்டாவுடன் கிடைக்கிறது.

வோடபோன் ஐடியா ரூ 548 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 548 Plan Details): இந்த ப்ரீபெய்டு திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த வேலிடிட்டி நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம். ஆகவே, கஸ்டமர்களுக்கு சிம் ஆக்டிவ் (SIM Active) கிடைக்கிறது.
முன்பே சொன்னதை போல இந்த திட்டத்துக்கு தினசரி டேட்டா கிடைக்காது. லம்ப்-சம் டேட்டா மட்டுமே கிடைக்கும். இதில் கிடைக்கும் 84 நாட்கள் வேலிடிட்டி முழுவதுக்கும் 7 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். முக்கியமாக இந்த டேட்டாவுக்கு பிறகு போஸ்ட் டேட்டா கிடைக்காது. ஆகவே, 7 ஜிபிக்கு பிறகு டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். மேலும், எஸ்எம்எஸ் சலுகையும் கிடைக்கிறது.
இந்த சலுகையும் லம்ப்-சமாகவே கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படுகிறது. ஆகவே, மொத்தமாக 1000 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இதையும் வேலிடிட்டிக்கு முன்னதாக பயன்படுத்தி விட்டால், பிறகு கட்டணம் செலுத்தி அனுப்பி கொள்ளலாம். இந்த சலுகைகள் மட்டுமே இந்த திட்டத்திற்கு கிடைக்கின்றன. லம்ப்-சம் டேட்டாவுடன் மலிவான விலைக்கு இதை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதைவிட கூடுதல் வேலிடிட்டி வேண்டுமானால், மற்றொரு திட்டம் இருக்கிறது.
வோடபோன் ஐடியா ரூ 1149 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 1149 Plan Details): இந்த ப்ரீபெய்டு திட்டத்தில் 6 மாதங்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் முந்தைய திட்டத்தில் கிடைத்தை போல லம்ப்-சம் டேட்டா (Lump-sum Data), லம்ப்-சம் எஸ்எம்எஸ் (Lump-sum SMS) மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) கிடைக்கிறது. டேட்டா மற்றும் வேலிடிட்டி கூடுதலாக கிடைக்கிறது.
ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 180 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அந்த நாட்கள் முழுவதும் சிம் ஆக்டிவ் கிடைக்கிறது. இதுபோக அன்லிமிடெட் லோக்கல் எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்யலாம். முந்தைய திட்டத்தைவிட கூடுதலாக லம்ப்-சம் டேட்டா கிடைக்கிறது. ஆகவே, 15 ஜிபி டேட்டாவை பெற்றுக் கொள்ளலாம். இந்த டேட்டாவுக்கு பிறகு போஸ்ட் டேட்டா கிடைக்காது.
ஆகவே, இதிலும் டேட்டா வவுச்சர்கள் தேவைப்படும். ஆகவே, 3 மாதங்களுக்கு முதலாவது திட்டமும் 6 மாதங்களுக்கு 2ஆவது திட்டமும் பக்கா ஆப்ஷனாக இருக்கும். வாய்ஸ் கால்கள் மட்டுமே போதும், மற்ற சலுகைகள் பெரிதாக வேண்டாம் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டங்கள் பக்கா ஆப்ஷனாக இருக்கும். இதேபோல பல்வேறு திட்டங்களை வோடபோன் ஐடியா கொடுக்கிறது.


Click it and Unblock the Notifications








