Vodafone போட்ட போடு.. வெறும் ரூ.539 போதும்.. தினமும் 4ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. குஷியில் கஸ்டமர்கள்!
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) நிறுவனங்களே கொடுக்காத தினசரி டேட்டா சலுகை கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை (Prepaid Plan) வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம் கொடுக்கிறது. மற்ற நிறுவனங்கள் அதிகபட்சம் 3 ஜிபி டேட்டாவை வழங்கிவரும் நேரத்தில் தினசரிக்கு 4 ஜிபி டேட்டா மட்டுமல்லாமல் கூடவே அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளையும் வாரி வழங்கி இருக்கிறது. இந்த வோடபோன் ஐடியா ரூ 539 ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
வோடபோன் ஐடியா ரூ 539 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 539 Plan Details): இந்த ப்ரீபெய்ட திட்டத்தில் டேட்டாவை பற்றிய கவலையே இருக்காது. கூடவே, அன்லிமிடெட் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் வோடபோனின் கூடுதல் டேட்டா சலுகைகள் வருவதால், இதுபோன்ற திட்டம் வேறு நிறுவனங்களில் கிடைக்காததாகவே இருக்கிறது.

ஆகவே, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு தினசரிக்கு 4 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. மற்ற நிறுவனங்களில் அதிகபட்சம் 3 ஜிபி டேட்டா மட்டுமே தினசரிக்கு கிடைக்கும். ஆனால், இந்த திட்டத்தில் 4 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த 4 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகையை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
கூடுதல் டேட்டா சலுகையை பார்க்கையில், பிஞ்ச் ஆல் நைட் (Binge All Night) டேட்டா, வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) மற்றும் டேட்டா டிலைட்ஸ் (Data Delights) சலுகைகள் கிடைக்கிறது. ஆகவே, நள்ளிரவு 12 முதல் காலை 6 மணி வரையில் அன்லிமிடெட் டேட்டா சலுகையை பெறலாம்.
வார நாட்களில் 4 ஜிபி டேட்டாவில் மீதியாகும் டேட்டாவை வார இறுதி நாட்களில் பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல மாதந்தோறும் 2 ஜிபி பேக்கப் டேட்டா சலுகையை பெற்று கொள்ளலாம். இந்த சலுகைகளுக்கு அடுத்தபடியாக அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது.
மேலும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையை பெற்று கொள்ளலாம். இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, மொத்தமாக 112 ஜிபி டேட்டாவுடன் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம். இதேபோல ரூ 600 விலைக்குள் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது.
வோடபோன் ஐடியா ரூ 579 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 579 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்திலும் தினசரி டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் கூடுதல் டேட்டா சலுகைகள் வருகின்றன. ஆனால், 56 நாட்களுக்கு வேலிடிட்டி வருகிறது. இந்த வேலிடிட்டிக்கு ஏற்ப டேட்டாவும் குறைக்கப்பட்டுள்ளது.
அதாவது, இந்த திட்டத்தை பெறும் வோடபோன் கஸ்டமர்களுக்கு 1.5 ஜிபி டேட்டா மட்டுமே தினசரிக்கு கிடைக்கிறது. முந்தைய திட்டத்தை போலவே 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை கிடைக்கிறது. மேலும், பிஞ்ச் ஆல் நைட், வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் மற்றும் டேட்டா டிலைட்ஸ் போன்ற சலுகைகள் வருகின்றன.
இதுபோக 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை வருகிறது. ஆகவே, ரூ 600 விலைக்குள் அதிக டேட்டா வேண்டுமானால், முதல் திட்டத்தையும், அதிக வேலிடிட்டி வேண்டுமானால், 2ஆவது திட்டத்தையும் வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








