இதுபோதுமே சார்.. வெறும் ரூ.509 போதும்.. 84 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 6 ஜிபி டேட்டா!
வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் மலிவான விலைக்கு 3 மாத வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை தேடிக் கொண்டிருந்தால், அவர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), லம்ப்-சம் டேட்டா (Lumpsum Data) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சலுகைகளோடு ஒரு திட்டம் இருக்கிறது. இதேபோல 28 நாட்கள் வேலிடிட்டியிலும் லம்ப்-சம் டேட்டாவுடன் ஒரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இந்த வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டங்களின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
வோடபோன் ஐடியா ரூ 509 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 509 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வாய்ஸ் கால்கள் சலுகை அதிகமாகவும், டேட்டா சலுகை குறைவாகவும் கிடைக்கிறது. இதனாலேயே வேலிடிட்டி அதிகமாக கொடுக்கப்படுகிறது. ஆகவே, 84 நாட்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வருகிறது.

ஆனால், டேட்டா 84 நாட்களுக்கும் சேர்த்தே வெறும் 6 ஜிபி மட்டுமே கிடைக்கிறது. இந்த 6 ஜிபிக்கு பிறகு வோடபோன் ஐடியா கஸ்டமர்களுக்கு போஸ்ட் டேட்டா கிடைக்காது. அதேபோல 1000 எஸ்எம்எஸ் சலுகைகளுக்கு பிறகும் கூடுதல் எஸ்எம்எஸ்களை அனுப்பினால், உங்களுக்கு கட்டணம் இருக்கும். மலிவான விலையில் 3 மாத வேலிடிட்டிக்கு இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யுங்கள்.
இதேபோல மாதாந்திர வேலிடிட்டியில் ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) வேண்டுமானால், வோடபோன் ஐடியா கஸ்டமர்களுக்கு ரூ 199 விலையில் ஒரு திட்டம் இருக்கிறது. இந்த திட்டமும் கிட்டத்தட்ட முந்தைய திட்டத்தை போலவே சலுகைகளை கொடுக்கிறது. ஆனால், வேலிடிட்டி மட்டும் 28 நாட்களுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் சலுகைகளை இப்போது பார்ப்போம்.
வோடபோன் ஐடியா ரூ 199 ப்ரீபெய்ட் திட்டம் (Vodafone Idea Rs 199 Prepaid Plan): இந்த வோடபோன் ஐடியா திட்டத்திலும் டேட்டா சலுகை குறைவாகவும், வாய்ஸ் கால்கள் சலுகைகள் அதிகமாகவும் கிடைக்கிறது. ஆகவே, 28 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் கால்களை செய்யலாம். அதேபோல எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களும் உங்களுக்கு கொடுக்கப்படுகிறது.
டேட்டாவை பார்க்கையில் 2 ஜிபி லம்ப்-சம் டேட்டா கிடைக்கிறது. இது 28 நாட்களுக்கும் பொருந்துகிறது. அதேபோல போஸ்ட் டேட்டாவும் கிடைக்காது. இந்த ப்ரீபெய்ட் திட்டங்களில் டேட்டா குறைவாக கிடைப்பதால் மட்டுமே வேலிடிட்டி அதிகமாக கிடைக்கிறது. ஒருவேளை வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் மட்டுமே கொண்ட திட்டம் வேண்டுமானால், அதுவும் இருக்கிறது.
ஆனால், இந்த திட்டம் ஆரம்பமே ரூ 470 விலைக்கு தொடங்குகிறது. ஆகவே, வேலிடிட்டியும் அதிகமாக கிடைக்கிறது. அதேபோல வருடாந்திர வேலிடிட்டியில் ரூ 1849 விலைக்கும் திட்டம் இருக்கிறது. இந்த திட்டங்களின் விவரங்களையும் இங்கே கொடுத்துள்ளோம். உங்களது பட்ஜெட்டில் இருந்தால் இதில் ஏதாவது ஒரு திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.
வோடபோன் ஐடியா ரூ 470 ப்ரீபெய்ட் திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் ட்ரூலி அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது. அதேபோல 900 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளலாம். இதற்கு அடுத்த வாய்ஸ் ஒன்லி திட்டம் வேண்டுமானால், 365 நாட்கள் திட்டம் மட்டுமே இருக்கிறது.
வோடபோன் ஐடியா ரூ 1849 ப்ரீபெய்ட் திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, வருடம் முழுவதும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது. அதேபோல 3600 எஸ்எம்எஸ் சலுகைகளும் கிடைக்கிறது. இந்த சலுகைகள் நன்றாக இருந்தாலும், வாய்ஸ் ஒன்லி திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டியில் எந்த திட்டமும் இல்லை.


Click it and Unblock the Notifications








